இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணம் என்றால் அது ஆதார் கார்டு தான். பேங்க் அவுண்ட் தொடங்குவதில் இருந்து மருத்துவமனை வரை அடையாள அட்டையாக கேட்கப்படுவது ஆதார் தான். எல்லா வித முக்கிய ஆவணங்களிலும் இந்த ஆதார் கார்டை சேர்க்க வேண்டும் என இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் முக்கிய விதி. ஆதாரில் உள்ள 12 இலக்க அடையாள எண் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அதோடு ஆதார் கார்டில் கை ரேகை, கண்ணின் கருவிழி விவரம், உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய தகவல்களும் இருக்கும்.
அதே போல் ஆதார் தொலைந்தால் அதை எளிதாக பெறலாம். ஆதார் கார்டை பிளாக் கூட செய்ய முடியும். இதற்கு ஆதார் கார்டில் நீங்கள் பதிவு செய்த அந்த மொபைல் நம்பர் உங்களிடம் இருந்தால் மட்டும் போதும். ஆஃப்லைன் மூலமும் நீங்கள் இதை செய்ய முடியும்.ஆன்லைனில் (https://resident.uidai.gov.in/) இந்த இணைய தளத்திற்கு சென்று அடுத்தடுத்த படிகளை ஃபாலோ செய்தும் தொலைந்த ஆதாரை மீண்டும் பெற முடியும். ஆதார் கார்டு போன்ற எந்த ஆவணங்கள் தொலைந்து போனாலும் உடனே அவற்றை திரும்ப பெற்று விடுங்கள்.
அதே போல் ஆதாரில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பாலினம் மாற்றம் செய்ய விரும்புவர்கள் இந்த தகவலையும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது. ஆதார் மாற்றங்களில் எனென்ன விதிமுறைகள் பின்பற்றபடுகிறது தெரியுமா.? ஆதாரில் பெயரை அதிகபட்சமாக 2 முறை மாற்றலாம். பிறந்த தேதி ஆண்டை மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் மட்டுமே மாற்ற இயலும்.தன்னுடைய பாலினத்தை ஒரே ஒருமுறை மட்டுமே சரி செய்ய இயலும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்களின் போன் நம்பரை மாற்ற வேண்டும் என்றால் ஆதார் மையத்திற்கு சென்று மாற்றங்களை மேற்கொள்ள கட்டணம் செலுத்தி செய்து கொள்ளலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.