• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • பெண்ணுறுப்பு குறித்த 3 கட்டுக்கதைகளும்… உண்மைகளும்…

பெண்ணுறுப்பு குறித்த 3 கட்டுக்கதைகளும்… உண்மைகளும்…

பெண் நலன்

பெண் நலன்

பெண்ணுறுப்பு என்பது தானாகவே தன்னை சுத்தம் செய்து கொள்ளும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

  • Share this:
பெண்ணுப்பு பற்றிய கட்டுக்கதைகள் இன்றல்ல; தலைமுறை தலைமுறைகளாக உள்ள ஒன்று. பழங்காலத்தில், பற்களைக் கொண்ட பெண்ணுறுப்புகள் என்பது பற்றிய பயங்கரமான கட்டுக்கதைகள் எல்லாம் வலம் வந்தன.

இந்த கட்டுக்கதைகளை அபத்தமானது என்று நிராகரிப்பது மிக எளிது. ஆனால், ஏராளமான பெண்ணுறுப்பு கட்டுக்கதைகள் வெறும் சொற்களாக கடக்கப்படுவது இல்லை. மக்கள் உண்மையாக அவற்றை நம்பும்போது, ​​அவை பெரும்பாலும் சமூகத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் மூன்று கட்டுக்கதைகள் குறித்து பார்க்கலாம்.

கட்டுக்கதை 1: பெண்ணுறுப்பை ஸ்பெஷல் ப்ராடெக்ட்களால் சுத்தம் செய்யலாம்



பெண்ணுறுப்பு பற்றிய கட்டுக்கதைகளில் இது நிச்சயம் முதலிடத்தை பிடிக்கும். பெண்ணுறுப்பு அழுக்கால் நிறைந்த ஒன்று என்று பல பல ஆண்டுகளாக சில பொய்யான விளம்பரங்கள் மூலம் ஒரு கட்டுக்கதையை கிளப்பிவிட்டு வருகின்றனர். பெண்ணுறுப்பு என்பது தானாகவே தன்னை சுத்தம் செய்து கொள்ளும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

அவ்வாறான அந்த உறுப்பின் மீது கடுமையான திரவியங்கள், சோப்புகள், பொருட்களை சேர்ப்பது சுத்தம் செய்வது அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறு இருப்பினும் சோப்போ அல்லது திரவியங்களை வைத்தோ சுத்தம் செய்தால், பெண்ணுறுப்பில் இருக்கும் நுண்ணுயிரிகளின் இயற்கையான சமநிலையை தொந்தரவு செய்கிறீர்கள் என்பது நிரூபனமான உண்மை.

மேலும், செயற்கை தயாரிப்புகளை பெண்ணுறுப்பில் பயன்படுத்தும்போது எரிச்சல் மற்றும் அரிப்புகள் ஏற்படும். அது மட்டுமின்றி, அவை ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி தங்கள் பெண்ணுறுப்பின் வெளிப்புறத்தை சுத்தம் செய்யதால் அது நல்லது.

Must Read | சத்தமில்லாமல் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம்… அறிகுறிகள் என்னென்ன? ஓர் அலர்ட் பார்வை!

கட்டுக்கதை 2: பூண்டு அல்லது தயிர் கொண்டு பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்றை குணப்படுத்தலாம்

பெண்ணுறுப்புக்குள் ஏற்படும் கேண்டிடா என்ற பூஞ்சையின் (fungus) அதிகப்படியான வளர்ச்சியால் எரிச்சல், அரிப்பின் விளைவாக ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது. அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி மேற்கொண்ட ஆய்வின்படி, தயிர் மற்றும் பூண்டு போன்ற இயற்கை வைத்தியம் மூலம் பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்றுக்களை நீங்கள் குணப்படுத்த முடியும் என்று இணையதளங்களில் பல அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும், நிரூபிக்கப்பட்ட சிகிச்சை என்று இதுக்கு எதுவும் இல்லை. ஆனால், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது என்று கூறியுள்ளனர்.


பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதை தடுக்க இயற்கையான தீர்வு ‘நேரம்’ மட்டுமே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சில பெண்கள் தாங்களாகவே ஈஸ்ட் தொற்றிலிருந்து விடுபடுவார்கள். அவர்கள் ஒரு வாரம் காத்திருந்தாலும், மாதவிடாய் வந்தாலும், அவர்களின் pH மாற்றங்கள் அல்லது இயற்கையான நோய் எதிர்ப்பு செயல்முறை விஷயங்களை மீண்டும் பெறுவதால் ஈஸ்ட் தொற்று தானாகவே கட்டுக்குள் வந்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்டுக்கதை 3: ஒவ்வொரு முறையும் பெண்ணுறுப்பில் அரிப்பு வரும்போது, ​​ஈஸ்ட் தொற்று இருப்பதாக அர்த்தம்

பல பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பில் இருக்கும் ஒவ்வொரு அறிகுறிகளுக்கும் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டதாக நினைக்கிறார்கள், அது முற்றிலும் தவறானது. பெண்ணுறுப்பில் அரிப்பு ஏற்படுவது ஹார்மோன் மாற்றங்கள், பாக்டீரியா வெஜைனோசிஸ் (bacterial vaginosis), ட்ரைக்கோமோனியாசிஸ் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

அதனால்தான் நீங்கள் ஈஸ்ட் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க செயற்கை மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு குறைந்தபட்சம் முதலில் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என ACOG பரிந்துரைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: