ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

சூரிய கிரகணம் என்றால் என்ன? 3 வகை சூரிய கிரகணம் பற்றி தெரியுமா?

சூரிய கிரகணம் என்றால் என்ன? 3 வகை சூரிய கிரகணம் பற்றி தெரியுமா?

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

Solar eclipse | இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்று சூரிய கிரகணம் நடைபெறவுள்ள நிலையில், சூரிய கிரகணம் என்றால் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

  பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது.

  சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் முழுதாக சூரிய கிரகணம் தோன்றும். சில இடங்களில் பகுதி கிரகணமாகவும், சில இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் தோன்றும்.

  முழு சூரிய கிரகணம்:

  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுதான் கிரகணம். சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும்.

  பகுதி சூரிய கிரகணம்

  பகுதி சூரிய கிரகணத்தில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரக்கூடிய சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும். இதன் காரணமாக, சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படும். அதனால் பகுதி சூரிய கிரகணம் என்று குறிப்பிடப்படுகிறது.

  இதையும் படிங்க | இன்று சூரிய கிரகணம் - தமிழகத்தில் எங்கு , எப்போது தெரியும்? வெறும் கண்களால் பார்க்கலாமா?

  நெருப்பு வளைய சூரிய கிரகணம்:

  சில நேரங்களில் நிலவினால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. நிலவு மறைக்கப்பட்ட பகுதி கறுப்பாகவும் அதன் விளிம்புகள் நெருப்பு வளையம் போலவும் தோன்றும் இதுதான் கங்கண சூரிய கிரகணம், நெருப்பு வளைய சூரிய கிரகணம்.

  இதுதான் கடந்த டிசம்பர் 26ஆம் தேதியும், ஜூன் 21ஆம் தேதியும் நிகழ்ந்தது. வளைய சூரிய கிரகணத்தில், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது, அதாவது சூரியனின் மையத்தில் சந்திரன் வருவதால் அதன் நிழல் பகுதி மறைக்கும்.

  இந்தியாவில் இன்று மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும். அதிக நேரம் இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும்.

  தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Eclipse, Solar eclipse