முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சோகம் : பின்னணி என்ன?

மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சோகம் : பின்னணி என்ன?

கிருஷ்ணகிரி யானைகள் இறப்பு

கிருஷ்ணகிரி யானைகள் இறப்பு

தருமபுரியில் யானைகளின் இறப்பிற்கு யார் காரணம்?, மின்வேலி அமைப்பதற்கான விதிகள் என்ன?

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'இன்று காலையில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம், மின்சாரம் தாக்கியதில் யானைகளின் இறப்பு. தருமபுரி மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தில் சோளம், ராகி, தென்னை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விளைநிலங்களில், காட்டு விலங்குகள் நுழையாமல் தடுக்க விவசாயி முருகேசன் மின் வேலிகள் அமைத்துள்ளார்.

அந்த வழியாக இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 5 காட்டு யானைகளில் இரண்டு பெண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை என்று மூன்று யானைகள் பலியாகின. அதில் இரண்டு குட்டி யானைகள் மட்டும் உயிர் தப்பின.

இதில் பலரையும் அதிக அளவில் வேதனையடையச் செய்த விஷயம் என்பது, மின்வேலியில் தப்பிய குட்டி யானைகள், தாயின் அருகில் வந்து பார்த்துச் செல்வதுதான்.

யானைகள் இறப்பு

மின்சாரம் வேலி அமைப்பதற்கான வரைமுறை?

மின் வேலிகள் அமைப்பது, பயிர்களைப் பாதுகாக்க மட்டுமே என்பதுதான் எதார்த்தம். விளைநிலங்களில் மின்வேலி அமைக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படிக் குறைந்த அளவில் மின்சாரம் மட்டும் மின் வேலியில் பாய்ச்சப்படும் போது யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை மட்டும் ஏற்படுத்தும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாது.

2015-ம் ஆண்டு, களக்காடு முண்டந்துறை வனப்பகுதிக்கு அருகில், வனப்பகுதிக்கு அருகில், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலிக்கு எதிராகத் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மனுவில், அதிக அளவு மின்சாரம் பாய்ச்சப்பட்ட மின் வேலியால் கரடி ஒன்று இறந்து போனதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் சுதாகர் மற்றும் வி.எம்.வேலுமணி ஆகியோர், அந்த பகுதியில் 230 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டதே கரடியின் இறப்பிற்குக் காரணம். வனத்துறையில் அறிவுறுத்தல் அடிப்படையில் 23 வோல்ட் உற்பத்தித் திறன் கொண்ட சோலர் மின் உருவாக்குதல் அமைத்து அதன் மூலமே மின்வேலிகள் அமைத்திருக்க வேண்டும், என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இது பற்றி வனவிலங்கு ஆர்வலர் அருண் பிரசன்னா பேசுகையில், “மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாக இருக்கிறது. காட்டை சுற்றிப் போடப்படும் பயிர்கள் அனைத்தும், யானையைக் கவர்வதாக அமைந்தால், அவை எளிதில் பயிர்கள் மீதே படையெடுக்கும். நம்மைப் போன்று யானைகள் சூப்பர் மார்கெட்டிலா பொருட்கள் வாங்கும்?..

இவ்வளவு பெரிய யானை அடிப்பட்டு இறக்கும் அளவிற்கு ஏன் மின்சாரம் பாய்ச்சுகின்றனர்? இது ஒரு குழந்தையின் கையில் பட்டிருந்தால் என்ன ஆகும்?

முன்பு மக்னா யானை ஒன்று வாயில் புண்ணுடன் சுற்றித்திரிந்தது. அந்த யானையை அதைத் தமிழ்நாடு, கேரளா எல்லையில் யாருடைய இடத்தில் இருக்கிறது என்ற மோதலில், இரு வனத்துறையும் சிகிச்சை அளிக்கவில்லை. அதற்கு நீதிமன்றம் போய் அனுமதி பெற்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது அது இறந்து போய்விட்டது. அந்த அளவுதான் தமிழ்நாடு வனத்துறையின் செயல்படுகின்றனர்.

தற்போது இறந்த யானைகளில், குட்டி யானைகள் தனியாக உலவுகின்றன. அவற்றை மீட்க நீதிமன்றம் போய் வருவதற்குள், அவை என்ன ஆகும் என்று தெரியாது” என்று தன் கருத்தை முன்வைத்தார்.

யானைகள்

studyiq தகவல்படி இந்தியாவில் 25,000ல இருந்து 29,000 யானைகள் உள்ளன. அதில் வெறும் 1200 ஆண் யானைகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு ஆண் யானைக்கு 20ல் இருந்து 30 பெண் யானைகள் இருக்கின்றன. ஆசிய யானைகளைப் பொறுத்தவரையில் 50 சதவீதம் இந்தியாவில்தான் இருக்கிறது. மற்ற நாடுகளில் அழிவின் விழிப்பை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகப் பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், எல்லையோர மாவட்டங்களான கோவை, கிருஷ்ணகிரி(ஓசூர்), தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் யானைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதுவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலேயே அவற்றின் வாழ்விடம் அமைந்துள்ளது. 2022-ம் ஆண்டு கோவை வாளையாறு பகுதியில் கருவுற்ற யானை உள்ளிட்ட 3 யானைகள் ரயில் அடிப்பட்டு இறந்தது, 2021-ம் ஆண்டு தந்தம் கடத்தலுக்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் யானைகள் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பலவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தான் இன்று (07.03.2023) அதிகாலையில் மூன்று யானைகள் இறப்பு பெரும் சோக்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Animals, Elephant, Elephant and calf