ஹோம் /நியூஸ் /Explainers /

மகப்பேறு மருத்துவரிடம் மறைக்கக்கூடாத 5 விஷயங்கள்- ஏன் இங்கு வெளிப்படைத்தன்மை அவசியம்?- Explainer

மகப்பேறு மருத்துவரிடம் மறைக்கக்கூடாத 5 விஷயங்கள்- ஏன் இங்கு வெளிப்படைத்தன்மை அவசியம்?- Explainer

உங்கள் உடல் ரீதியான ஆரோக்கியம், மன ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல உங்களுடைய பாலியல் ஆரோக்கியமும் முக்கியம்.

உங்கள் உடல் ரீதியான ஆரோக்கியம், மன ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல உங்களுடைய பாலியல் ஆரோக்கியமும் முக்கியம்.

உங்கள் உடல் ரீதியான ஆரோக்கியம், மன ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல உங்களுடைய பாலியல் ஆரோக்கியமும் முக்கியம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பொதுவாக மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் எதையும் மறைக்க கூடாது என்று கூறுவார்கள். உங்கள் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் நோய்க்கான சிகிச்சைக்கு நீங்கள் மருத்துவரை அணுகும் போதோ, மருத்துவரிடம் உங்கள் உடல் நிலையை பற்றி முழுமையாக தெரிவிக்க வேண்டும்.

உங்கள் உடல் ரீதியான ஆரோக்கியம், மன ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல உங்களுடைய பாலியல் ஆரோக்கியமும் முக்கியம். செக்ஸுவல் ஹெல்த் மற்றும் reproductive health சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும் பொழுது நீங்கள் உங்கள் மகப்பேறு அல்லது மகளிர் சிறப்பு மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியமாகிறது.

உங்கள் பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, எரிச்சல், அல்லது மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தாலோ நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் போது, நீங்கள் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை கூச்சப்படாமல் நீங்கள் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். இது உங்கள் பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை வழங்க உதவுவதோடு குழந்தை பெறுவதில் பிரச்சினை ஏற்படாமலும், எதிர்காலத்தில் உடல்நலக் கோளாறுகளை தவிர்க்கவும் உதவுகிறது. என்ன மாதிரியான பிரச்சனைகளை நீங்கள் உங்கள் மருத்துவரிடம் மறைக்கக் கூடாது.

வலி நிறைந்த மாதவிடாய்:

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது, மிதமானது முதல் தீவிரமான வலி உண்டாகும். வலி இல்லாத மாதவிடாய் நாட்களைக் கடக்கும் சில பெண்களும் உள்ளனர். சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு மாதவிடாய் காலத்தில் வலி ஏற்படும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தீவிரமான வலி என்பது எண்டோமெட்ரியோசிஸ் அல்லது கர்ப்பப்பைக்குள் ஃபைப்ராடுகள் பிரச்சனை ஆகியவற்றுக்கான அறிகுறிகளாகும். எனவே மாதவிடாய் காலத்தில் வலி இயல்பானதுதான் என்று நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் வலி அதிகரிக்கும் போது உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

உடலுறவின் பொழுது அசௌகரியமாக உணர்தல் அல்லது வலி ஏற்படுவது:

இன்டர்கோர்ஸ் எனப்படும் உடலுறவின்போது உங்களுக்கு தீவிரமாக வலி ஏற்பட்டால் அதைப் பற்றி நீங்கள் சங்கப்படாமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். பெண்களின் பிறப்பு உறுப்பில் vaginal dryness எனப்படும் வறட்சித் தன்மை இருந்தால் உடலுறவின்போது அசௌகரியமும் வலியும் ஏற்படும். அதுமட்டுமின்றி உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவாக இருந்தாலும் வலி உண்டாகும். பிறப்புறுப்பில் வறட்சி இருப்பதை நீங்கள் உணர்ந்தால் அல்லது உடல் உறவுக்கு பின்பு ரத்தம் கசிந்தால் நீங்கள் மகப்பேறு மருத்துவரிடம் சரியான ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.

வெள்ளைப்படுதல்:

ஒரு சில பெண்களுக்கு பிறப்புறுப்பில் இருந்து வெள்ளை நிறத்தில் திரவம் வெளியாகும். வெள்ளைப்படுதல் என்று கூறப்படும் இது மாதவிடாய் நாட்களுக்கு முன்னும் பின்னும் ஏற்படும். ஆனால், ஒரு சிலருக்கு இது உடல் பலவீனமாக இருப்பதற்கான அறிகுறியாகும். இவ்வாறு வெள்ளைபடுதல் ஏற்படும் போது ஒரு விதமான வாடை வீசினால் அது நோய்த்தொற்றாக இருக்கலாம். எனவே, நீங்கள் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து உரிய மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

பிறப்புறுப்பின் வல்வா பகுதியில் வீக்கம் அல்லது கட்டி:

பிறப்புறுப்பின் உட்பகுதி வல்வா என்று கூறப்படும். அதில் கட்டி அல்லது லேசான வீக்கம் போன்றவை காணப்பட்டால் நீங்கள் உடனடியாக மகளிர் சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும். இது பாலியல் நோய்த்தொற்று அறிகுறியாக இருக்கலாம்.

கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேற்றம்:

ஒரு சிலருக்கு பல காரணங்களால் சிறுநீர் கட்டுப்பாடின்றி சொட்டு சொட்டாக வெளியேறும். Urinary leakage என்று கூறப்படும் இந்த நிலை, அதிகப்படியான உடல் வேலை, மன அழுத்தம், அறுவை சிகிச்சை, குழந்தை பிறப்பு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உண்டாகும்.

Published by:Archana R
First published:

Tags: Explainer, Pregnancy