Home /News /explainers /

பூமியில் மொத்தம் எத்தனை எறும்புகள் உள்ளன: சுவாரஸ்யமான தகவல்கள்! 

பூமியில் மொத்தம் எத்தனை எறும்புகள் உள்ளன: சுவாரஸ்யமான தகவல்கள்! 

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Explainer Ant | எறும்பு கூட்டத்தைப் போலவே அள்ள, அள்ள குறையாத பல சுவாரஸ்யமான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
எறும்புகளை போல் சுறுசுறுப்பாகவும், கூட்டு மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என பள்ளி பாடப்புத்தகத்திலேயே கற்றுத்தரப்படுகிறது. சுவற்றில் ஊர்ந்து செல்லும் எறும்புகளை பார்க்கும் போது இவை எப்படி இப்படி அணிவகுத்து செல்கிறது என்ற எண்ணம் அனைவருக்குமே எழுந்திருக்கும். அதற்கான விடையை கூகுளில் தட்டி படித்திருப்பவர்களும் ஏராளமாக இருக்கலாம். ஆனால் எறும்பு கூட்டத்தைப் போலவே அள்ள, அள்ள குறையாத பல சுவாரஸ்யமான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹாங்காங்கில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் கிடைத்த தரவுகளை வைத்து 489 ஆய்வுகளை நடத்தியுள்ளது. அதன் படி பூமியில் ஒவ்வொரு மனிதனுக்கும் சமமாக, 2.85 மில்லியன் எறும்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. பூமி முழுவதும் 20 குவாட்ரில்லியன் எறும்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உயிரியங்கள் மற்றும் வாழ்விடங்களை அடிப்படையாக கொண்டு 20 குவாட்ரில்லியன்களில் எண்ணிக்கையை வகைக்கப்படுத்தியுள்ளனர்.

20 குவாட்ரில்லியன் எறும்புகளின் மொத்த பயோமாஸ் 12 மெகா டன் உலர் கார்பன் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. பயோமாஸ் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள உயிரினங்களின் மொத்த அளவு அல்லது எடை ஆகும். எறும்புகளின் பயோமாஸ் 12 மெகா டன் என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், காட்டுப் பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் பயோமாஸ் 2 மில்லியன் டன்கள் மட்டுமே என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது. அதாவது எறும்புகளில் பயோமாஸ் பறவைகள் மற்றும் பாலூட்டிகளை விடவும் அதிகமாக இருப்பதோடு, மனிதர்களின் 20 சதவீதத்திற்கு சமமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Read More : லிப்ஸ்டிக் போடுவதால் சிறுநீர் நிறம் மாறும்..! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


வாழ்விடங்களின் அடிப்படையில் பிற இடங்களை விட வெப்பமண்டலங்களில் ஆறு மடங்கு எறும்புகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தில் வசிக்கும் எறும்புகளில் பெரும்பாலானாவை வெப்ப மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.

அமேசான் போன்ற அடர்த்தியான காடுகளில் இலை-வெட்டு எறும்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதேசமயம் தரையில் தீவிரமாக உணவு தேடும் எறும்புகளின் எண்ணிக்கை வறண்ட பகுதிகளில் அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது பூச்சி உயிரியலை பாதிக்கும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு எறும்புகளின் பதில்களை கணிக்க இந்த ஆராய்ச்சி முடிவுகள் உதவக்கூடும் என நம்பப்படுகிறது.

விலங்கு சூழலியல் தொடர்பான இதழில் வெளியிடப்பட்ட முந்தைய ஆய்வு முடிவுகளில்,எறும்புகள் அவற்றின் உள்ளூர் சூழலில் இரண்டு தனித்துவமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை கண்டறிந்துள்ளது.ஒன்று, அவற்றின் கூடு கட்டுதல் மற்றும் உணவு சேகரிக்கும் செயல்பாடு மண்ணில் உள்ள ஊட்டச்சத்து அளவை பாதிக்கிறது. இரண்டாவதாக, பாலூட்டிகளை விட அதிக எண்ணிக்கையில் இருப்பதால், பெரிய அளவிலான விலங்குகளைக்கூட அவை வேட்டையாடக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் கால்நடைகளை எறும்புகள் தாக்கி கண்பார்வையை இழக்கச் செய்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. யெல்லோ கிரேஸி ஆன்ட்ஸ் என்ற எறும்பு கூட்டம் ஆடு, மாடு, முயல் போன்றவற்றின் கண்களை தாக்கி, உயிரிழக்கும் அளவுக்கு ஆபத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Ants, Explainer

அடுத்த செய்தி