முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / நவராத்திரி விரதம் நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்குமா? அறிவியல் காரணங்கள் இதோ!

நவராத்திரி விரதம் நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்குமா? அறிவியல் காரணங்கள் இதோ!

நவராத்திரி விரதம்

நவராத்திரி விரதம்

சாத்விக் உணவுகள் சீரானதாக கருதப்படுகின்றன. இவை செரிமான அமைப்புக்கு ஓய்வு அளிக்கின்றன மற்றும் நச்சுத்தன்மை உடலில் நீக்க உதவுகின்றன

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நவராத்திரி இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் நேரடி அர்த்தம் ஒன்பது இரவுகள். இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவதுர்காவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் தேவியின் அவதாரத்துடன் தொடர்புபடுத்தி மிகுந்த பக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவை நம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்த  எப்படி திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். நவராத்திரிக்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை கண்டுபிடிப்போம். இந்து பண்டிகைகள் குறிப்பிடத்தக்க வானியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்களுடன் தொடர்புடையவை. நவராத்திரியும் அப்படியே.

பருவம் மாறும் நேரம்:

நவராத்திரி பெரும்பாலும் செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் வருகிறது. இது இலையுதிர்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாறும் நேரம். பருவகால மாற்றத்தின் காரணமாக, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. குளிர் காலம்  நமது நோயெதிர்ப்பு செல்களையும், நமது இரத்தம் மற்றும் கொழுப்பின் கலவையையும் பாதிக்கின்றன, என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

உலக அல்சைமர் தினம்: டிமென்ஷியாவையும் அல்சைமரையும் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த காலாண்டில் பூமியின் வடக்கு கோளம் சூரியனை விட்டு விலகி இருக்கும். இதனால் பகல் ஒளி என்பது குறைவாகவும் இரவு அதிகமாகவும் காணப்படும். இதனால் வடக்கு பகுதியில் குளிர் பரவும். சூரிய ஒளி பூமியில் படும் நேரம் குறையும். இந்த குளிரால் மனித உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் வர வழி வகுக்கும். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பயிற்சியாகவே இந்த நவராத்திரி விரதங்கள் மேற்கொள்ள படுகின்றன.

விரதம்:

இந்து முறைப்படி இந்த ஒன்பது நாட்களும் மக்கள் இடைவிடாத விரதம் செய்கிறார்கள். காலையில் இருந்து விரதம் இருப்பதால் உடலில் உள்ள கூடுதல் கொழுப்புகள் கரைய வழி செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் கூடுதல் கொழுப்பு உடலில் இருப்பதால் தான் நோய்கள் பல வருகின்றன.  அவை இந்த குளிர் காலத்தில் பெரிதளவில் கரையும் வாய்ப்புள்ளது. உடல் எடை குறைக்க போராடுபவர்கள் இந்த 9 நாள் விரதத்தை நிச்சயம் எடை குறைப்பிற்கு பயன் படுத்தலாம்.

சாத்விக் உணவு

விரதத்தோடு இந்த நேரத்தில் சாத்விக் உணவை உட்கொள்கிறார்கள். சாத்விக் என்ற சொல் சத்வா என்ற வார்த்தையிலிருந்து உருவானது. அதாவது தூய்மையான, இயற்கையான, உயிர்ப்பான, சுத்தமான, ஆற்றல் மிக்க ஒன்று என்று பொருள்.

நவராத்திரி கொலு வைப்பது எப்படி.? எத்தனை படிகள் முதல், என்ன பொம்மைகளை வைக்கலாம் என்பது வரை.!

சாத்விக் உணவுகளில் பழங்கள், தயிர், கல் உப்பு, பருவகால காய்கறிகள் மற்றும் மல்லி மற்றும் கருப்பு மிளகு போன்ற நுட்பமான மசாலாக்கள் அடங்கும். சாத்விக் உணவுகள் சீரானதாக கருதப்படுகின்றன. இவை அமைதியான உணர்வுகளை வழங்குகின்றன. செரிமான அமைப்புக்கு ஓய்வு அளிக்கின்றன மற்றும் நச்சுத்தன்மை உடலில் நீக்க உதவுகின்றன.

அதோடு உடலில் சூடு  ஏற்படுத்தும் வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களையும் தவிர்க்கின்றனர். இதனால் செரிமான மண்டலம் சுத்தமாவதோடு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவுகிறது. அதை சரி செய்ய இந்த விரதங்களும், மிதமான உணவுகளும் உதவுகின்றன.

பொதுவாகவே வாரத்திற்கு ஒரு முறை லேசான உணவை உட்கொள்வதன் மூலம், ஒருவர் செரிமான அமைப்புக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும். விரதம் குடலை சுத்தப்படுத்த அனுமதிக்கிறது மற்றும் அதன் அமைப்புகளை பலப்படுத்துகிறது.

First published:

Tags: Fasting, Navarathri