இந்தியாவில் பெரியம்மை பாதிப்புகளும்... தடுப்பூசி எதிர்ப்பின் வரலாறும்- ஒரு பார்வை!

இந்தியாவில் பெரியம்மை பாதிப்புகளும்... தடுப்பூசி எதிர்ப்பின் வரலாறும்- ஒரு பார்வை!

மாதிரி படம்

விஞ்ஞானி எட்வர்ட் ஜென்னர் உருவாக்கிய இந்த தடுப்பூசி, பெரியம்மை நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கவ்பாக்ஸைப் (Cowpox) பயன்படுத்தியது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  1802ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பம்பாயில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரிக்கு பிறந்த மூன்று வயது அன்னா டஸ்டால் என்ற குழந்தை தான் பெரியம்மைக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாகப் பெற்றார். மேலும் இந்தியாவிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் குழந்தையாக இருந்தார். தடுப்பூசி போட்டப் பின் அவரது தோலில் உருவான சீழில் இருந்து, மேலும் ஐந்து குழந்தைகளுக்கு பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு, அவளது நிணநீரை பயன்படுத்தி போதுமான தடுப்பூசி பொருட்கள் சேகரிக்கப்பட்டு, துணைக் கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

  அந்த சமயங்களில் பெரியம்மை இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவி காணப்பட்டது. மேலும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை குழந்தைகளுக்கு இது தொற்றுநோயாக பரவ ஆரம்பித்தது. இந்த நோய் பாதிப்பால் மூன்றில் ஒருவர் உயிரிழந்தனர். இதன் காரணமாகவே தடுப்பூசியின் வெற்றி ஏகாதிபத்திய நம்பிக்கைக்கு ஒரு காரணமாக இருந்தது. ஆனாலும் தடுப்பூசி இந்திய மக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி, பிரிட்டிஷ் மற்றும் இந்திய அதிகாரிகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு போராட வேண்டியிருந்தது.

  பெரியமைக்கான முதல் தடுப்பூசி ஷாட் உருவான விதம்:

  விஞ்ஞானி எட்வர்ட் ஜென்னர் உருவாக்கிய இந்த தடுப்பூசி, பெரியம்மை நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கவ்பாக்ஸைப் (Cowpox) பயன்படுத்தியது. முதன் முதலில் 1800ம் ஆண்டு, ஜென்னரின் தடுப்பூசி “arm-to-arm" என்ற முறையில் வழங்கப்பட்டது. அதாவது ஒருவருக்கு கைகளில் தடுப்பூசி போடப்பட்டவுடன் அதில் இருந்து வெளியாகும் நிணநீரை எடுத்து மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 1799ம் ஆண்டில், ஜென்னர் நிணநீர் தடுப்பூசியில் நனைத்த நூல்களை வியன்னாவுக்கு அனுப்பினார், மற்றும் வியன்னாவிலிருந்து கான்ஸ்டான்டினோபிள் (இன்றைய இஸ்தான்புல்) வழியாக பாக்தாத் வரை தடுப்பூசி அனுப்பப்பட்டது.

  பாக்தாத்தில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட ஒரு குழந்தை புஸ்ஸோராவுக்கு அனுப்பப்பட்டது. மேலும் அந்த குழந்தையின் கையில் இருந்து பெறப்பட்ட நிணநீர் மூலம் வெற்றிகரமான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து 1802ம் ஆண்டு மே மாதம் ஒரு தொகுதி நிணநீர் பம்பாய்க்கு அனுப்பப்பட்டது. இந்த தடுப்பூசியை பெற 20-ஒற்றைப்படை குழந்தைகளில் அன்னா டஸ்டாலுனும் ஒருவராக இருந்தார். தடுப்பூசி போடப்பட்ட பின்னர் இந்தியாவிலும் சரி, உலகிலும் சரி வெற்றிகரமாக முடிவினை பெற்ற ஒரே குழந்தையாக திகழ்ந்தார். ஆனால் பிரிட்டிஷ் நிர்வாகம் இன்னும் நிணநீர் தளவாடங்களின் சிக்கலை முழுமையாக புரிந்து கொண்டிருக்கவில்லை.

  வலி மிகுந்த தடுப்பூசிகள்:

  இன்றைய காலகட்டத்தில் கிடைக்கும் தடுப்பூசிகள் போல, அப்போதெல்லாம் தடுப்பூசிகள் மிகவும் எளிதாக அமைந்து விடவில்லை. மேலும், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டினர். மேலும் பலர் தங்களது குழந்தைகளுடன் தலைமறைவாகினர். 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகள் பலவிதமான கூர்மையான கருவிகளால் செயல்படுத்தப்பட்டது. மேலும் arm-to-arm முறை மூலம், குழந்தைகள் வலிமிகுந்த செயல்முறையைத் தாங்க வேண்டி இருந்தது மட்டுமல்லாமல், தடுப்பூசிகளுக்காக குழந்தைகளின் கையில் இருந்து நிணநீர் பிரித்தெடுப்பதும் அதிக வலி நிறைந்ததாக இருந்தது. அதேபோல, நிணநீரின் தரம் குறித்த கவலைகளும் அப்போது அதிகம் எழுந்தன. ஏனெனில் அப்போது இந்தியாவில் வெப்பமான காலநிலை நிலவியதால் ஆற்றலை இழந்தனர்.

  காந்தியின் எதிர்ப்பு:

  இதையடுத்து 1898ம் ஆண்டில், பிரிட்டன் arm-to-arm தடுப்பூசிகளை நிறுத்தியது. ஏனெனில் அவ்வாறு செய்ததன் மூலம் சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் ஆகிய நோய்கள் பரவுவதாகக் கூறியது. இதற்கு மாற்றாக கன்று நிணநீர் பாதுகாப்பானதாக கருதப்பட்டது. மேலும் தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் நிணநீர் மூலம் தடுப்பூசி போடுவது சடங்கு மாசுபடுத்துவதாக நம்பிய உயர் சாதி இந்தியர்களுக்கு இந்த முறை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசிகளுக்கு காந்தி உட்பட பலரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பின.

  1913ம் ஆண்டில், காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, தடுப்பூசிக்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார், அதை "தியாகம்" என்று அழைத்தார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, "தடுப்பூசி ஒரு காட்டுமிராண்டித் தனமான வழக்கமாகத் தெரிகிறது. இது நம் காலத்தின் விஷ மூடநம்பிக்கைகளில் ஒன்றாகும். இது சமமான பழமையான சமூகங்களிடையே கூட காணப்படாது. தடுப்பூசி என்பது ஒரு இழிந்த தீர்வு. பாதிக்கப்பட்ட பசுவிலிருந்து தடுப்பூசி நம் உடலில் அறிமுகப்படுத்தப்படுகிறது; மேலும், பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து தடுப்பூசி கூட பயன்படுத்தப்படுகிறது.

  Also read... பிரசவ வலியால் துடித்தபோதும் பேய் ஓட்டும் சடங்குகள் செய்த கொடூர குடும்பம். கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு.. கணவர் உட்பட 4 பேர் கைது..

  இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் நாம் ஒரு தியாகத்திற்கு குற்றவாளியாக இருக்கிறோம் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். " என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, 1929ல் ‘நவ்ஜீவன்’ மற்றும் அதே ஆண்டு மணிலால் மற்றும் சுஷிலா காந்தி ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் காந்தியடிகள் குறிப்பிட்டிருந்ததாவது, “சைவ உணவு உண்பவர்கள் எப்போதுமே இதுபோன்ற தடுப்பூசியை எவ்வாறு எடுக்க முடியும்” என்று ஆச்சரியப்பட்டார். மேலும் தடுப்பூசி போடுவதை “மாட்டிறைச்சியில் பங்கெடுப்பதற்கு ஒப்பானது” என்று விவரித்தார்.

  இந்தியா எதிர்பாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய பிரிட்டிஷ் ஆன்டி-வாக்ஸ்சர்கள்:

  இதையடுத்து, கடந்த 20ம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில், இந்திய சமுதாயத்தின் ஆங்கிலம் வாசிக்க தெரிந்த உயரடுக்கு பிரிவினர், லண்டனில் உள்ள தேசிய தடுப்பூசி எதிர்ப்பு லீக்கின் ‘தடுப்பூசி என்க்யூயர்’ இல் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதாவது, யுனைடெட் கிங்டமில் உள்ள லெய்செஸ்டரில், "பெரியம்மை நடைமுறையில் மறைந்துவிட்டது. இருப்பினும் அவர்கள் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தடுப்பூசியை நிராகரித்தனர்" என்று ஆன்டி-வாக்ஸ்சர்கள் வாதிட்டனர். இதன் காரணமாகவும் பெரும்பாலான பிரிவினர் பெரியம்மை தடுப்பூசியை நிராகரித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: