Home /News /explainers /

30 ஆண்டுகளில் இல்லாத அளவு உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

30 ஆண்டுகளில் இல்லாத அளவு உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

உக்ரைன்  மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, உலகளாவிய உணவு தானியங்களின் விநியோக சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அவற்றின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைன்  மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, உலகளாவிய உணவு தானியங்களின் விநியோக சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அவற்றின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைன்  மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, உலகளாவிய உணவு தானியங்களின் விநியோக சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அவற்றின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

FAO Food Price Index:  உலகளவில் உணவு விலை குறியீட்டு எண், கடந்த மார்ச் மாதத்தில்  அதிகபட்சமாக 12.6  விழுக்காடு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நெல் , உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பால், சர்க்கரை, முட்டை - பண்ணை இறைச்சி ஆகிய உணவுப் பொருட்களின் உலகாளவிய விலை அசைவுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த குறியீட்டு எண் வெளியிடப்படுகிறது.



கடந்த மார்ச் மாதம், உணவு விலை குறியீட்டு எண் ஒட்டுமொத்தமாக 17.9 புள்ளிகள் உயர்ந்து 159.3 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.  இந்த குறியீட்டு எண்களில் அதிகபட்ச அதிகரிப்பு சமையல் எண்ணையில் (தலா 46.8 புள்ளிகள், 23% வளர்ச்சி) ஏற்பட்டுள்ளது.ரஷியா- உக்ரைன்  இடையேயான போரின் காரணமாக சர்வதேச சந்தையில்  விலையேற்றம் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோதுமை:  உக்ரைன்  மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக, உலகளாவிய உணவு தானியங்களின் விநியோக சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, கோதுமை மற்றும் மோட்டா ரக தானியங்களின் (Coarse Grains) விலை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நிலவும் மோசமான கோதுமை உற்பத்தி தற்போதைய நிலைமையை மேலும் கடினமாக்கியுள்ளது. மேலும், பார்லி, சோளம் மற்றும் இதர தானியங்களின் விலை அசைவும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் உள்ளன.

இதற்கிடையே, கோதுமையை ஏற்றுமதியை மேலும் அதிகாரிக்க இந்தியா முயற்சித்து வருகிறது.  இந்த இடையூறுகளை தக்க வாய்ப்பாக கொள்ள இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எகிப்துக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கான இறுதி கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. துருக்கி, சீனா, போஸ்னியா, சூடான், நைஜீரியா, ஈரான் போன்ற நாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதியைத் தொடங்குவதற்கான ஆலோசனையும் நடக்கிறது.

















2019-20

 


2020-21

 


2021-22 (ஏப்ரல் -ஜனவரி )

 
கோதுமை61.84549.671742

2021-22 ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் 1742 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது கடந்த 2020-21ம் ஆண்டின் இதே கால ஏற்றுமதியை விட 387 சதவீதம் அதிகம்.  உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. ஆனால், உலக ஏற்றுமதியில் அதன் பங்கு 1%க்கும் குறைவாக உள்ளது.

சமையல் எண்ணெய்: 

இந்த குறியீட்டு எண்களில் அதிகபட்ச அதிகரிப்பு சமையல் எண்ணையில் (தலா 46.8 புள்ளிகள், 23% வளர்ச்சி) ஏற்பட்டுள்ளது. சூரியகாந்தி விதை, சோயா விதை , பாமாயில் ஆகியவற்றால் விலையேற்றம் காணப்படுகிறது. கருங்கடல் பிராந்தியத்தில் (Black Sea Regions) நிலவும் பதற்றமான சூழல்  காரணமாக விநியோக சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

























Year

(April-March)


Import of edible oils from Ukraine

(in LMT)


Importsof edible oils from Russia

(in LMT)
2018-1924.870.46
2019-2019.773.81
2020-2117.443.48

இந்தியா ஆண்டு ஒன்றுக்கு 15 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இது, நாட்டின் ஒட்டுமொத்த பய்னபாட்டில் 65% ஆகும். இதில், ரஷ்யா-உக்ரைன் ஆகிய நாடுகளிடம் இருந்து 20-25 லட்சம் மில்லியன் டன்கள் இறக்குமதியாகின்றன.

சமையல் எண்ணெய்களின் விலையைக் குறைக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான அடிப்படை இறக்குமதி வரி  செப்டம்பர் 30, 2022 வரை  பூஜ்ஜிய சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்தது.

கருங்கடல் பிராதியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாகவும், வரவிருக்கும் ஈஸ்டர் பண்டிகைத் தினத்தை முன்னிட்டும் உலகளவில் முட்டை, இறைச்சி உணவுப பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்தது. மேலும், சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வு காரணமாக சர்க்கரை பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணவீக்கம்:  இந்தியாவில், பணவீக்கம் அதிகரித்து வருவதை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் முன்னதாக எச்சரித்திருந்தார். இரு தினங்களுக்கு முன்பு நிதி கொள்கை குழுவின் முடிவுகளை அறிவித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பெருந்தொற்றின் தொடக்கத்தில் இருந்து வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ரிசர்வ் வங்கி சாதகமான நடவடிக்கைகளை (accommodative stance) எடுத்து வருகிறது.

ஆனால், தற்போது வளர்ச்சிக்கு புத்தாக்கம் அளிப்பதைக் காட்டிலும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது. தற்போது, முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக பணவீக்கம் உருவாகி உள்ளது. விலைவாசி மற்றும் பணவீக்கம் படிப்படியாகஅதிகரித்து வருவதால் சாதகமான நிதிக் கொள்கையில் இருந்து பின்வாங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
Published by:Salanraj R
First published:

Tags: Food, Inflation

அடுத்த செய்தி