ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

இருசிறகு பூச்சிகள் எப்படி தங்கள் உணவை தேர்வு செய்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா? ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல்!

இருசிறகு பூச்சிகள் எப்படி தங்கள் உணவை தேர்வு செய்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா? ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல்!

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஈக்கள் தங்கள் புலன்களின் மூலம் பெறும் தகவல்களை மூளையின் ஒரு பகுதிக்கு அனுப்பின.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஈக்கள் தங்கள் புலன்களின் மூலம் பெறும் தகவல்களை மூளையின் ஒரு பகுதிக்கு அனுப்பின.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஈக்கள் தங்கள் புலன்களின் மூலம் பெறும் தகவல்களை மூளையின் ஒரு பகுதிக்கு அனுப்பின.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பொதுவாக சாணம் அல்லது இறந்த விலங்குகளை சாப்பிட ஈக்கள் போன்ற இருசிறகு பூச்சிகள் திரள்வதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் இருசிறகுகளை மட்டுமே கொண்ட பூச்சிகள் நல்ல சத்தான கலோரிகளை உணவாக உண்ணும் பழக்கம் கொண்டவையாக அறியப்படுகின்றன. அதே போல இருசிறகி பூச்சிகள் நச்சுத்தன்மையுள்ள மற்றும் கசப்பான உணவுகளைத் தவிர்த்து, இனிப்பு மற்றும் சத்தான உணவை தேடி தேடி தின்பதில் ஒரு உணவு நிபுணரை போல வல்லவர்களாக இருக்கின்றன. சுவையான மற்றும் சத்தான உணவுகளை தேடி இவை நேரத்தை செலவிடுகின்றன.

தங்களுக்கான உணவை ஈ உள்ளிட்ட இருசிறகி பூச்சிகள் திறம்பட எவ்வாறு தேர்வு செய்கின்றன? குறிப்பிட்ட சத்து நிறைந்த உணவை தேர்வை செய்ய இந்த பூச்சிகளின் மூளை எவ்வாறு செயல்படுகிறது? என்பதை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள ஆராய்ச்சி ஒன்று நடந்தது. மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளை கண்டறிய, யேல் பல்கலைக்கழக (Yale University) ஆராய்ச்சியாளர்கள் இந்த சிறிய சுவை வேட்டை பூச்சிகளின் மூளை செயல்பாடுகளை பார்த்தனர். இரண்டு உணவு விருப்பங்களுக்கு இடையே ஒன்றை தேர்ந்தெடுக்கும் போது இருசிறகி பூச்சிகளின் மூளையில் என்ன நடக்கிறது என்பதை அறிய, பூச்சிகளின் உணவு தேர்வுகள் (food choices) குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும் ஒரு சிறிய பூச்சியான பழ ஈக்களை இந்த ஆய்விற்காக பயன்படுத்தி உள்ளனர். இந்த ஆய்வின் போது பசியுடன் இருந்த பழ ஈக்களுக்கு இரண்டு உணவு விருப்பங்கள் வழங்கப்பட்டன. கசப்பான குயினினில் மூடப்பட்ட இனிப்பு மற்றும் சத்தான உணவு மற்றொன்று கசப்பு இல்லாத ஆனால் குறைவான கலோரிகளுடன் கூடிய குறைந்த இனிப்பை கொண்ட உணவு. இந்த உணவு தந்திர முறை அந்த பழ ஈக்கள் தங்கள் உணவை தேர்வு செய்வதை கடினமாக்குவதற்காக பின்பற்றப்பட்டது.

Also Read | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

எந்த உணவை தேர்வு செய்வது என்ற உணர்ச்சி மோதலுக்கு பழ ஈக்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் கவனித்தனர். ஈக்கள் தங்கள் உணவை தேர்வு செய்யும் போது, விஞ்ஞானிகள் நியூரல் இமேஜிங்கை (neural imaging) பயன்படுத்தி அவற்றின் மூளை செயல்பாட்டைப் பார்த்தார்கள். பழ ஈக்கள் எவ்வளவு பசியாக இருக்கின்றன என்பதை பொறுத்து அவற்றின் உணவு தேர்வு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆராய்ச்சியின் மூத்த நிபுணர் மைக்கேல் கூறுகையில், அவை அதிக பசியுடன் இருந்தால், அதிக கலோரிகளைப் பெறுவதற்கு கசப்பான சுவையை அவர்கள் பொறுத்து கொள்வார்கள் என்றார்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஈக்கள் தங்கள் புலன்களின் மூலம் பெறும் தகவல்களை மூளையின் ஒரு பகுதிக்கு அனுப்பின. சிக்கனல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, செயல்பட வேண்டிய உறுப்புகளுக்குத் திரும்ப அனுப்பப்படும் ஒரு நிர்வாக முடிவு அதன் உடலில் நடந்தது. புதிய உணவு தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதன் உடலில் உள்ள நியூரான்களின் செயல்பாடு புதிய தேர்வுகளுக்கு ஏற்ப தானே மாறியது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் விசிறி வடிவ உடலில் (fan-shaped body) உள்ள நியூரான்களின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் கையாண்ட போது, அவர்களால் ஈக்களின் உணவு தேர்வு முடிவை மாற்ற முடிந்தது. அதாவது பசியுள்ள ஈக்களை அவற்றின் வழக்கத்திற்கு மாறாக, குறைந்த கலோரி உணவை சாப்பிட கட்டாயப்படுத்த முடிந்தது. இது பற்றி குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், என்ன சாப்பிடலாம் என்ற முடிவை மற்ற எல்லாவற்றையும் விட நரம்பியல் வேதியியலால் (neurochemistry) அதிகமாக கட்டுப்படுத்த முடியும். இந்த சோதனை மூலம் பசி மற்றும் உணர்ச்சி நிலைகள் மனிதர்களின் உணவுத் தேர்வுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

Published by:Archana R
First published:

Tags: Explainer, Fruit flies