ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

நோய் எதிர்ப்பு அமைப்பு மூலமே நோயைக் கண்டறியலாம்! கர்ப்பிணிகள் குறித்து ஆய்வு சொல்லும் உண்மை- Explainer

நோய் எதிர்ப்பு அமைப்பு மூலமே நோயைக் கண்டறியலாம்! கர்ப்பிணிகள் குறித்து ஆய்வு சொல்லும் உண்மை- Explainer

கர்ப்பத்தில் ஏற்படும் அழற்சியைப் படிக்கும் குழுவை வழிநடத்தும் பேராசிரியர் ஆன்-சார்லோட் ஐவர்சன், இரண்டு ஆய்வுகளும் அற்புதமான முன்னோக்குகளை வழங்குவதாக தெரிவித்தார்.

கர்ப்பத்தில் ஏற்படும் அழற்சியைப் படிக்கும் குழுவை வழிநடத்தும் பேராசிரியர் ஆன்-சார்லோட் ஐவர்சன், இரண்டு ஆய்வுகளும் அற்புதமான முன்னோக்குகளை வழங்குவதாக தெரிவித்தார்.

கர்ப்பத்தில் ஏற்படும் அழற்சியைப் படிக்கும் குழுவை வழிநடத்தும் பேராசிரியர் ஆன்-சார்லோட் ஐவர்சன், இரண்டு ஆய்வுகளும் அற்புதமான முன்னோக்குகளை வழங்குவதாக தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

கர்ப்ப காலம் என்பது ஒரு தாயின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆரம்பத்திலிருந்தே சவாலான காலமாக இருக்கும். கருவில் உள்ள மரபணுக்களில் பாதி அவளது உடலுக்கு அந்நியமானதாக இருக்கும். அந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு அமைப்பு, கருவை சகித்துக்கொள்வதற்கும் தாய் மற்றும் கருவை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். அதன்படி கர்ப்ப காலம் முழுவதும், தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நோய் எதிர்ப்பு சமநிலை நடைபெறுகிறது.

இந்த நிலையில், கர்ப்பத்தில் ஏற்படும் அழற்சி குறித்த ஆராய்ச்சியில், நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NTNU) மூலக்கூறு அழற்சி ஆராய்ச்சி மையத்தின் (CEMIR), ஒரு ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் கண்டுபிடிப்புகளை குழு வெளியிட்டுள்ளது. மேலும், ஆராய்ச்சி திட்ட மாணவரான ஆண்டர்ஸ் ஹேகன் ஜார்மண்ட் மற்றும் CEMIR இல் உள்ள அவரது சகாக்கள், கர்ப்பம் முழுவதும் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் வளர்ச்சியை ஆய்வு செய்த முதல் ஆராய்ச்சி குழு ஆவார்கள்.

இந்த ஆய்வுக்காக ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்த 707 பெண்களை ஆய்வு செய்தனர். இது குறித்து ஜார்முண்ட் கூறியதாவது, "நம் நோய் எதிர்ப்பு அமைப்பு சைட்டோகைன்கள் எனப்படும் செல் சிக்னலிங் மூலக்கூறுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. சிக்னலிங் மூலக்கூறுகள் நோயெதிர்ப்பு மறுமொழிகளைத் தூண்டலாம் அல்லது நிறுத்தலாம். எங்கள் ஆய்வில் கர்ப்பிணி தாயின் எளிய இரத்த மாதிரியைப் பயன்படுத்தி இரத்தத்தில் பல்வேறு சைட்டோகைன்களை பற்றி ஆய்வு செய்தோம். நிறைய சைட்டோகைன்களின் அளவீடுகளை இணைத்தோம். கர்ப்பத்தின் பல புள்ளிகள் தாயின் நோய் எதிர்ப்பு சக்தியின் முத்திரையை எங்களுக்கு அளித்தன. ஆய்வில் பல ஆரோக்கியமான கர்ப்பிணிப் பெண்கள் இருப்பதால், சாதாரண கர்ப்பத்தின் போது நோய் எதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான 'தரநிலையை' எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது" என்றார்.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1

தாயிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரிகள் அவர்கள் உடலில் ஏற்படும் அழற்சி நிலைகள், கருவில் உள்ள சிரமம் மற்றும் நோய் எதிர்ப்புக் கோளாறின் ஆரம்ப அறிகுறிகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகின்றன. மேலும், சாதாரண கர்ப்பத்தில் நோய் எதிர்ப்பு செயல்பாடு ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். முதல் மூன்று மாதங்களில் உயர்ந்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டுடன் இருக்கின்றனர். பின்னர் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமைதியான கட்டம் மற்றும் கடைசி மூன்று மாதங்களில் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிக செயல்பட்டுடன் இருக்கும் என்பதைக் கண்டறிந்தனர். சாதாரண கர்ப்பத்தில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் நடத்தையைப் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜார்முண்ட் நம்புவதாக தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, " எங்கள் கணக்கெடுப்புடன் கர்ப்பிணிப் பெண்ணின் இரத்த மாதிரிகளின் பகுப்பாய்வுகளை ஒப்பிடுவதன் மூலம், அசாதாரணங்களை மிக விரைவாகக் கண்டறிய முடியும். இந்த முன்கூட்டிய கண்டறிதல், பெண்ணுக்கு நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளதா மற்றும் கூடுதல் நெருக்கமான பின்தொடர்தல் தேவையா என்பதை மருத்துவர் மதிப்பிட உதவும்." என்று ஜார்முண்ட் கூறினார். நோய் எதிர்ப்பு மறுமொழியில் அசாதாரணங்களை உருவாக்கும் தாய் அல்லது கருவில் உள்ள பல நிலைமைகளை கண்டுபிடித்ததாக ஜார்முண்ட் தெரிவித்தார்.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுவது ஏன்? அதன் நோக்கம் என்ன? முதன்மை மருத்துவர் பகிரும் தகவல்கள்- பகுதி 2

"சைட்டோகைன் விவரக்குறிப்பு மூலம் கண்டறியப்பட்ட நோய் எதிர்ப்பு மாற்றங்கள் மிகவும் உணர்திறன் கொண்டவை. அவை தாயின் உடல் பருமன் மற்றும் புகைப்பழக்கத்தின் விளைவுகளை பிரதிபலிக்கின்றன. கருவின் வளர்ச்சி குன்றியிருந்தால் நோய் எதிர்ப்பு அமைப்பும் பாதிக்கப்படும், மேலும் இது ஒரு ஆணா அல்லது பெண்ணா என்பதைக் குறிக்கலாம்," என்று அவர் விளக்கினார். மற்றொரு கண்டுபிடிப்பு என்னவென்றால், ஏற்கனவே குழந்தைகளை பெற்றெடுத்த பெண்களுக்கு அவர்களின் கர்ப்பத்தின் தொடக்கத்தில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. ஆனால் பிரசவம் நெருங்கும்போது முதல் கற்பதில் இருந்ததை விட எதிர்ப்புசக்தி குறைவாக இருந்தது.

இதற்கிடையே, ஜார்முண்டின் அதே மையத்தில் பிஎச்டி வேட்பாளராக இருந்தவர் தான் லைவ் மேரி டி. ஸ்டோக்லேண்ட். இவர் PCOS (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) உள்ள பெண்களின் குழுவைப் ஆய்வு செய்து வருகிறார். பிசிஓஎஸ் என்பது ஹார்மோன் கோளாறு ஆகும், இது ஆண் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பு மற்றும் கருப்பையில் கொப்புளங்களால் வகைப்படுத்தப்படுகிறது. குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களில் 17 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிசிஓஎஸ் உள்ள பெண்கள் அடிக்கடி ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக எடை மற்றும் முகம் மற்றும் உடலில் முடி வளர்ச்சி அதிகரிப்பது போன்றவற்றை அனுபவிக்கிறார்கள். மேலும் அவர்கள் பெரும்பாலும் கருத்தரிக்க சிரமப்படுவார்கள். கர்ப்ப காலத்தில் PCOS உள்ள பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் ப்ரீக்ளாம்ப்சியா, கர்ப்பகால நீரிழிவு மற்றும் முன்கூட்டிய பிறப்பு ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

பிசிஓஎஸ் உள்ள 358 பெண்களின் ரத்த மாதிரிகள் மற்றும் ஆரோக்கியமான பெண்களின் மாதிரி குழுவை ஸ்டோக்லேண்ட் ஆய்வு செய்தார். அதில், ஆரோக்கியமான பெண்களை விட இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்ப்பம் முழுவதும் அதிக நோயெதிர்ப்பு செயல்பாடு இருப்பதை அவர் கண்டறிந்தார். மேலும் கர்ப்பத்தின் மூன்று கட்டங்களில் அவர்களின் நோய் எதிர்ப்பு மறுமொழிகள் வித்தியாசமாக வளர்ந்தன. புகைபிடித்த அல்லது அதிக எடை கொண்ட PCOS உடைய பெண்கள் இன்னும் வலுவான நோயெதிர்ப்பு செயல்பாட்டைக் காட்டியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஸ்டோக்லேண்ட் கூறியதாவது, கர்ப்பத்தின் பல்வேறு சிக்கல்களை வகைப்படுத்தும் மாற்றங்களை நாங்கள் வரைபடமாக்கியதும், நோயின் வளர்ச்சியை கூடிய விரைவில் கண்டறிவதற்கு எந்த அசாதாரணங்களை நாம் கவனிக்க வேண்டும் என்பதை இது காண்பிக்கும். அதன்படி, பிசிஓஎஸ் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் அதிகப்படியான சைட்டோகைன்கள் மன அழுத்தத்தைக் குறிக்கும் ஒரு சாதகமற்ற பதில் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இது சிக்கல்களின் அதிக ஆபத்துக்கு பங்களிக்கும் காரணியாக இருக்கலாம்" என்று கூறினார்.

கர்ப்பத்தில் ஏற்படும் அழற்சியைப் படிக்கும் குழுவை வழிநடத்தும் பேராசிரியர் ஆன்-சார்லோட் ஐவர்சன், இரண்டு ஆய்வுகளும் அற்புதமான முன்னோக்குகளை வழங்குவதாக நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூறியதாவது, "சைட்டோகைன் சுயவிவரம் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மிகவும் உணர்திறன் அளவீடு ஆகும். மேலும் கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சி மற்றும் அது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி இப்போது எங்களுக்கு நன்றாகப் புரிந்து கொள்ள உதவுகிறது" என்று கூறினார்.

மேலும் "பல்வேறு கர்ப்பகால சிக்கல்களைக் குறிக்கும் மாற்றங்களை நாங்கள் வரைபடமாக்கியவுடன், நோயின் வளர்ச்சியை கூடிய விரைவில் கண்டறிவதற்கு எந்த அசாதாரணங்களை நாம் கவனிக்க வேண்டும் என்பதை இது நமக்குக் காண்பிக்கும். இந்த உணர்திறன் முறையைக் கொண்டிருப்பது அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களைக் குறிப்பிடுவதற்கு நமக்கு உதவும். தாய் மற்றும் கருவை நாம் இன்னும் நெருக்கமாகப் பின்தொடர முடியும். அதுதான் எங்கள் இலக்கு" என்று தெரிவித்தார்.

First published:

Tags: Explainer, Pregnancy