ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவது ஏன்? முக்கிய அறிகுறிகள் என்ன? விளக்கும் அலர்ட் பதிவு- Explainer

சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவது ஏன்? முக்கிய அறிகுறிகள் என்ன? விளக்கும் அலர்ட் பதிவு- Explainer

ஒரு ஆரோக்கியமான நபர் நாளொன்றுக்கு 6-10 முறை சிறுநீர் கழிக்கிறார். இதை விட அதிகமாக ஒருவர் சிறுநீர் கழித்தால் அது சிறுநீரக பாதிப்புக்கு அறிகுறியாக இருக்கலாம்.

ஒரு ஆரோக்கியமான நபர் நாளொன்றுக்கு 6-10 முறை சிறுநீர் கழிக்கிறார். இதை விட அதிகமாக ஒருவர் சிறுநீர் கழித்தால் அது சிறுநீரக பாதிப்புக்கு அறிகுறியாக இருக்கலாம்.

ஒரு ஆரோக்கியமான நபர் நாளொன்றுக்கு 6-10 முறை சிறுநீர் கழிக்கிறார். இதை விட அதிகமாக ஒருவர் சிறுநீர் கழித்தால் அது சிறுநீரக பாதிப்புக்கு அறிகுறியாக இருக்கலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உடலில் இருக்கும் கழிவுகளை வடிகட்டுவது நமக்குள் இருக்கும் கிட்னிகளின் பொறுப்பாகும். உடலில் ஏற்படும் காயங்கள், உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற நிலைமைகள் காரணமாக கிட்னிகள் பாதிப்படையும் போது, அவற்றால் உடலில் இருந்து கழிவுகளை வடிகட்ட முடியாது. இது உடலில் நச்சு தன்மையை உருவாக்க வழிவகுக்கிறது. சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் மிகவும் நுட்பமானவை.

பிரச்சனை தோன்றும் துவக்க கட்டத்தில் பெரும்பாலும் சிறுநீரக பாதிப்புகள் கவனிக்கப்படாமல் போகும் அளவிற்கு சிறிதாக இருக்கும். எனவே இந்த காரணத்திற்காக சிறுநீரக பாதிப்பு ‘சைலண்ட் கில்லர்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. சிறுநீரகத்திற்கு சேதம் விளைவிக்கும் நச்சு உடலில் வெளிப்படும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உடலில் உள்ள அதிகப்படியான சிறுநீர் மற்றும் கழிவுகளை அகற்ற முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது. சிறுநீரகங்கள் முறையாக செயல்படவில்லை என்பதைக் குறிக்கும் சில பொதுவான அறிகுறிகளை இங்கே பார்க்கலாம்.

வீக்கம்:

அடிவயிற்றில் இருக்கும் 2 பீன்ஸ் வடிவ கிட்னிகள் உடலில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான சோடியத்தை ஃபில்ட்டர் செய்ய உதவுகிறது. சிறுநீரகங்கள் சரியாக செயல்பட முடியாமல் போனால், உடலில் சோடியம் தங்க தொடங்குகிறது. இது கணுக்கால் மற்றும் முழங்காலிலிருந்து பாதம் வரையிலான கால் முன்பகுதியில் வீக்கம் ஏற்படவழிவகுக்கிறது. இந்த நிலை எடிமா என குறிப்பிடப்படுகிறது. கண்கள் மற்றும் முகம் போன்ற உடலின் மற்ற பகுதிகளிலும் வீக்கம் காணப்படலாம். ஆனால் இது முதன்மையாக கைகள், கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களை பாதிக்கிறது.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

எப்போதும் சோர்வு:

எந்த நேரமும் சோர்வாக அல்லது பலவீனமாக இருப்பது பொதுவாக கல்லீரல் பிரச்சனையின் ஆரம்ப அறிகுறி என்றாலும், சிறுநீரக கோளாறு தீவிரமடைந்தாலும் ஒருவர் மேலும் பலவீனமாக மற்றும் சோர்வாக உணரக்கூடும். சில எளிய வீட்டு வேலைகளை செய்வது அல்லது சிறிது தூரம் நடப்பது கூட பாதிக்கப்பட்ட நபருக்கு பெரும் சுமையாகத் தோன்றலாம். சிறுநீரக செயலிழப்பு காரணமாக ரத்தத்தில் குவியும் நச்சுக்களால் இந்நிலை ஏற்படுகிறது.

பசி குறைவு:

சிறுநீரக பாதிப்பு காரணமாக உடலில் நச்சுகள் மற்றும் கழிவுகள் குவிவது பசியை குறைக்கலாம். இது எடை இழப்பை ஏற்படுத்தும். குறைந்த பசிக்கு மற்றொரு காரணம் அதிகாலையில் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவது. ஒருவர் எப்போதும் வயிறு நிரம்பி இருப்பதை போன்ற உணர்வு, எதையும் சாப்பிட விரும்பாத உணர்வை கொண்டிருந்தால் இது சிறுநீரகம் தொடர்பான ஒரு ஆபத்து அறிகுறியாக இருக்கலாம்.

இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

எண்ணிக்கை:

ஒரு ஆரோக்கியமான நபர் நாளொன்றுக்கு 6-10 முறை சிறுநீர் கழிக்கிறார். இதை விட அதிகமாக ஒருவர் சிறுநீர் கழித்தால் அது சிறுநீரக பாதிப்புக்கு அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சனை இருப்பவர் மிக குறைவாக அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம். சிலர் தங்கள் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை காணலாம். ரத்த அணுக்கள் சிறுநீரில் வெளியேற தொடங்குவதால் இது நிகழ்கிறது.

தோல் அரிப்பு:

சிறுநீரகங்களால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற முடியாமல் போகும் போது நச்சுக்கள் ரத்தத்தில் குவிந்து, தோலில் அரிப்பு மற்றும் வறட்சி ஏற்பட காரணமாகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளர்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகம். இவர்கள் மற்ற உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிய ஆண்டுதோறும் ஹெல்த் செக்கப்களை செய்ய வேண்டும்.

Published by:Archana R
First published:

Tags: Explainer, Kidney