உங்கள் நிதி முதலீட்டுத் திட்டங்களின் இலக்கை அடைய ஸ்மார்ட்டான சில டிப்ஸ்..

உங்கள் நிதி முதலீட்டுத் திட்டங்களின் இலக்கை அடைய ஸ்மார்ட்டான சில டிப்ஸ்..

பணம்

தனக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு சரியாக தெரிந்தால், சேமிப்பு மற்றும் முதலீட்டு நடவடிக்கையை நீங்கள் தெளிவாக மேற்கொள்ளலாம்.

  • Share this:
பணத்தை முதலீடு செய்ய நினைக்கும் ஒவ்வொருவரும் எதில் முதலீடு செய்தால் அதிக வட்டி விகிதம் கிடைக்கும் என்பது குறித்து தான் முதலில் யோசிப்பார்கள். அதிக வருமானம் கிடைக்கும் முதலீடுகளைத் தேடுவதை விட எதில் சரியான நேரத்தில் நமக்கு தேவையான பணம் கிடைக்கும் என்ற இலக்குடன் முதலீடு செய்வது நல்லது.

எங்கே முதலீடு செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது மற்றும் உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? என்பது உள்ளிட்ட நிதி இலக்குகளில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக வரையறுத்து அதன்படி உங்கள் முதலீடு திட்டத்தை தொடங்கலாம்.

தெளிவாக வரையறுக்கப்பட்ட நிதி இலக்குகள் அல்லது ஸ்மார்ட் நிதி இலக்குகள் ஆகியவை ஒரு சிறந்த நிதித் திட்டத்தை உருவாக்கவும், உங்கள் இலக்குகளை அடைய உதவுகின்றன.

ஸ்மார்ட் நிதி இலக்கை நீங்கள் உருவாக்க சில டிப்ஸ் :

நிதி இலக்கு உங்கள் மனதில் தெளிவாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என நினைப்பது ஒரு நல்ல குறிக்கோள்தான். மும்பை போன்ற முக்கிய நகரங்களில் ஒரு படுக்கையறை, ஹால், சமையலறை (1BHK) கொண்ட வீட்டிற்கு பணத்தை முதலீடு செய்வது அர்த்தமுள்ளதாக அமைகிறது.

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ள நிலையில், உங்கள் குறிக்கோளுக்கு உணர்ச்சிபூர்வமான தொடர்பு இருப்பதை நீங்கள் உறுதிசெய்தால் அதை எளிதில் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்

அளவிடக்கூடியது :உங்கள் குறிக்கோள் எப்போதும் ஒரு நல்ல பண மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். இது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. மேலே குறிப்பிட்டபடி, உதாரணமாக ஒருவர் ரூ .70 லட்சம் மதிப்பிலான ஒரு வீட்டை வாங்க திட்டமிடுகிறார். இதற்காக அவர் 20% பணத்தை முன்பணமாக கட்ட வேண்டும் என கூறப்படுகிறது. அதன்படி அவர், ரூ .14 லட்சம் பணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீங்கள் சேமித்த பணத்தின் அளவு மற்றும் உங்கள் இலக்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து உங்கள் இலக்குகளை சரிசெய்ய பண மதிப்பு உங்களை அனுமதிக்கிறது.

எளிதில் அடையக்கூடியதுஉங்கள் குறிக்கோள் எளிதில் அடையக்கூடியதாக இருக்க வேண்டும். சில நேரங்களில் இலக்குகள் எதிர்காலத்தில் அடைய முடியாது. எவ்வாறாயினும், இலக்குகளை அடைய ஒருவர் நேரத்தை சரியாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அதேபோல இந்த இலக்குகள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒருவரால் அடையமுடியாத இலக்கு, அவர் அதிக முயற்சி செய்யும் நேரத்தில் அடையக்கூடியதாக மாறும்.

மிகக் குறைந்த ஆபத்துள்ள சுயவிவரத்தைக் கொண்ட தனிநபர்களுக்கு அடைய முடியாததாகத் தோன்றும் இலக்குகள், அதிக வருமானத்தை வழங்கும் ஆபத்தான சொத்துக்களுக்கு சில ஒதுக்கீடு செய்தால் அடையக்கூடியதாகிவிடும்.

உதாரணமாக, ஒரு நபருக்கு மாத சம்பளம் ரூ .1 லட்சம் மற்றும் மாத சேமிப்பு ரூ.30,000 என வைத்துக்கொள்வோம். அவர் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஒரு குறிப்பிட்ட மிகப்பெரிய தொகையை சேமிக்க விரும்பினால் இலக்கு சாத்தியமற்றதாக தோன்றுகிறது. ஆனால் அவர் மேலும் சில காலம் எடுத்துக் கொண்டால், அவரது குறிக்கோள் அடையக்கூடியதாகிவிடும்.

 யதார்ததமானதாக இருக்க வேண்டும்உங்கள் நிதி இலக்கு யதார்த்தமாக இருக்க வேண்டும். ரூ. 1 லட்சம் மாத சம்பளம் வாங்கும் ஒரு நபர் தென் மும்பையில் ஒரு பல மாடி மாளிகையை கட்ட முடிவு செய்தால், போதிய வருமானம் இல்லாத சூழலில் அது சாத்தியமற்றதாகத் தோன்றும். இதுபோன்ற சூழ்நிலைகளில் சில அதிசயங்கள் மட்டுமே உதவ முடியும். அதேபோல 1BHK ஐ வாங்குவதற்கான உங்கள் இலக்கை நீங்கள் வைத்திருந்தாலும், மறுபுறம் வெளிநாட்டிற்கு ஊர் சுற்ற செல்வது, வீட்டிற்கு ஆடம்பர பொருட்கள், வாகனங்கள் வாங்க உங்கள் பணத்தை செலவழித்தால் அது நடக்காத காரியம் ஆகிவிடும்.

நேரம் :நிதி இலக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என திட்டமிட வேண்டும். ஒவ்வொரு நிதி குறிக்கோளும் ஒரு விலையை கொண்டுள்ளது. ஆனால் பணவீக்கம் சம்பந்தப்பட்ட நேரத்தில் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. உதாரணமாக, மேற்கண்ட எடுத்துக்காட்டில் நாம் பணவீக்கத்தை 5 சதவீதமாகக் கருதினால், அதே வீடு இப்போதிலிருந்து 5 ஆண்டிற்குள் ரூ .89.34 லட்சத்திற்கும், ஏழாம் ஆண்டின் இறுதியில் ரூ .98.5 லட்சத்திற்கும் கிடைக்கும்.

தனக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு சரியாக தெரிந்தால், சேமிப்பு மற்றும் முதலீட்டு நடவடிக்கையை நீங்கள் தெளிவாக மேற்கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published: