சிக்கிம் மணிப்பால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் சுமார் 100 மாணவர்கள் நைரோபி பூச்சியால் ஏற்பட்ட தோல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நைரோபி பூச்சி என்றால் என்ன?
நைரோபி பூச்சி, கென்ய ஈ அல்லது டிராகன் பூச்சி என்றும் அழைக்கப்படுகின்றன. அவை சிறிய, வண்டு போன்ற பூச்சிகள். அவை பெடரஸ் எக்ஸிமியஸ் மற்றும் பெடெரஸ் சபேயஸ் ஆகிய இரண்டு இனங்களைச் சேர்ந்தவை. அவை ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளன. அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும். மற்ற பூச்சிகளைப் போல இதுவும் வெளிச்சத்தைக் கண்டால் அதை நோக்கி பயணிக்கும்.
மேக வெடிப்பு என்றால் என்ன? ஆண்டுதோறும் இமயமலை பகுதியில் மேகவெடிப்பு நிகழக் காரணம் என்ன?
இவை பயிர்களை உண்ண வரும் பூச்சிகளை உண்டு வாழும். இதனால் பயிர்கள் செழித்து வளரும். இதனால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
வேறு இடத்தில் இந்த நோய் ஏற்பட்டுள்ளதா?
கென்யாவிலும் கிழக்கு ஆப்பிரிக்காவின் இந்த நோயின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 1998 இல், வழக்கத்திற்கு மாறாக கனமழையால் ஏராளமான பூச்சிகள் இப்பகுதிக்குள் வந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளன. ஆப்பிரிக்காவுக்கு வெளியே, இந்தியா, ஜப்பான், இஸ்ரேல் மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் இந்த நோயின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மனிதர்களை எப்படி பாதிக்கிறது:
இந்த பூச்சி வசித்த பயிர்களை உண்ணும் மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கூட எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் இந்த பூச்சி மனிதனின் தோலின் மேல் அமர்ந்தால் பெடெரின் என்ற ஒரு வகை அமிலத்தை வெளியிடும். அந்த அமிலம் மனிதர்களின் தோலில் படும் போது ஒரு வகை எரிச்சலை உண்டாகும். தோல் மீது புண், அசாதாரண தழும்பு, பழுப்பு நிறத்தை ஏற்படுத்தும்.
ஆனால், ஓரிரு வாரங்களில் தோல் குணமடையத் தொடங்குகிறது. ஆனால் இந்த பாதிப்பால் சில இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளும் ஏற்படலாம். குறிப்பாக பாதிக்கப்பட்டவர் எரிச்சலூட்டும் தோலை சொறிந்தால் மிக வேகமாக பரவி, நோய் தீவிரமடையும்.
சிக்கிமில் நோய் பரவல்:
சிக்கிமில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. நைரோபி பூச்சிகள் இந்த மாதிரியான இடங்களில் எளிதாக இனப்பெருக்கம் செய்யும். அதன் வாழ்வுக்கு ஏற்ற சூழல் இருப்பதால் தான் சிக்கிமில் இவ்வளவு வேகமாக பரவியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
இந்த பூச்சி நம்மீது அமர்ந்தால் அதை அடிக்காமல் தோலை விட்டு மெதுவாக அகற்றி விட வேண்டும். அமிலம் வெளியேறிய கையால் உடலின் மற்ற பகுதிகளை தொட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பூச்சி பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீர் வைத்து கழுவ வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sikkim, Skin Disease