தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த மாதிரியான தகவல்களை பெறலாம் ?

மாதிரிப்படம்

இந்த சட்டம் நிர்வாக, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை உட்பட அனைத்து அரசியலமைப்பு மையங்களையும் உள்ளடக்கியது.

 • Share this:
  ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசுத் துறை மற்றும் அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்களில் தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ள உரிமை அளிப்பதே தகவல் அறியும் உரிமை சட்டம் (Right To Information Act 2005 - RTI) ஆகும்.

  தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன ?

  மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். ஒருவருக்கு நமது அரசின் திட்டங்களில் ஏதாவது சந்தேகம் இருப்பின் அது எந்த துறையின் கீழ் வருகிறது என்பதை அறிந்து அங்கு விண்ணப்பித்து தெரிந்து கொள்ளலாம். அந்த துறை சார்பில் உங்களுக்கு 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

  எந்த மாதிரியான தகவல்களை பெறலாம் ?

  அரசின் அறிவிப்புகள், டாக்குமென்ட்கள், பதிவுகள், பத்திரிக்கை அறிக்கை, அரசு ஆணை உள்ளிட்டவை குறித்த தகவல்களை கேட்டு பெற முடியும். அரசு உதவி பெறும் தனியார் துறைகளின் விவரங்களையும் உங்களால் பெற முடியம்.

  Also Read: நிலவை துல்லியமாக போட்டோ எடுத்து 10ம் வகுப்பு மாணவர் சாதனை - குவியும் பாராட்டு!

  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாய்ப்புகள் என்னென்ன ?

  இந்த சட்டம் நிர்வாக, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை உட்பட அனைத்து அரசியலமைப்பு மையங்களையும் உள்ளடக்கியது. பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றம் என எந்தவொரு நிறுவனம் அல்லது அமைப்பின் அரசாங்க ஆவணங்களையும் ஆய்வு செய்யலாம். எந்தவொரு அரசாங்க வேலைகளையும் ஆய்வு செய்யலாம்.

  குடிமக்கள் எந்தவொரு அரசு ஆவணங்களையும், அரசு பணிகளையும் ஆய்வு செய்யலாம்

  Also Read: காதலின் நினைவு.. லவ் லாக்கை உடைக்க 10,000 கிமீ பயணம் மேற்கொண்ட பெண்

  தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது ?

  குடிமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற விண்ணப்பத்தை பொது தகவல் அதிகாரிக்கு ரூ.10 கட்டணத்துடன் அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பி 30 நாட்கள் ஆகியும் உங்களுக்கு தேவையான தகவல் கிடைக்கவில்லை என்றால் மத்திய தகவல் ஆணையத்தை (Central Information Commission (CIC)) அணுகலாம்.

  தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏதாவது பிரத்யேக விண்ணப்ப மனு இருக்கிறதா?

  இதற்கு பிரத்யேக விண்ணப்ப மனு என்று எதுவும் இல்லை. விண்ணப்பமானது, உங்களது பெயர், முகவரி, எதைப்பற்றிய தகவல் தேவை என்பது பற்றியதாக இருக்க வேண்டும்.

  இந்த சட்டம் பகுதி தகவல்களை மட்டும் சொல்லுமா ?

  தகவல் உரிமை சட்டத்தின் பிரிவு 10-ன் கீழ் இந்த சொல்லக்கூடாத சில விஷயங்கள் தவிர்த்துவிட்டு வழங்கப்படும்.

  விண்ணப்பதாரர் தகவல்களை பெற, அதற்கான காரணத்தை கூற வேண்டுமா?

  விண்ணப்பதாரர் காரணங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

  பொது தகவல் அலுவலர் நாம் கேட்கும் தகவல்களை மறுக்க முடியுமா ?

  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 11 விவரங்கள் குறித்த தகவல்களை ஒரு அலுவலர் மறுக்க முடியும். உதாரணமாக வெளிநாட்டு அரசாங்கத்திடம் பெறப்பட்ட தகவல்கள், பாதுகாப்பு, விஞ்ஞான அல்லது பொருளாதார தகவல்கள் போன்றவை அதில் அடங்கும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: