• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • FACT CHECK: மூக்கில் 2 சொட்டு எலுமிச்சை சாறு விட்டால் COVID-19 தொற்றிலிருந்து தப்பிக்கலாமா.? உண்மை என்ன

FACT CHECK: மூக்கில் 2 சொட்டு எலுமிச்சை சாறு விட்டால் COVID-19 தொற்றிலிருந்து தப்பிக்கலாமா.? உண்மை என்ன

கொரோனா

கொரோனா

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா தொற்றை பார்த்து பீதியில் இருக்கும் மக்கள், எளிய முறையில் வைரஸிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நாட்டை சுழற்றி அடித்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையை விட தற்போது பரவி வரும் வைரஸ் அதிதீவிர விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா தொற்றை பார்த்து பீதியில் இருக்கும் மக்கள், எளிய முறையில் வைரஸிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர்.

கொரோனா வைரஸை விட வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொரோனவை விரட்ட உதவுவதாக கூறப்படும் டிப்ஸ்கள் அதிவேகத்தில் பரவி வருகின்றன. வீட்டு வைத்தியம் முதல் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகள் மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ ஆலோசனைகள் வரை எளிமையாக இருப்பதாக கூறி சில நேரங்களில் வைரலாகியும் விடுகின்றன.

இப்படி சமூகவலைத்தளங்களில் வரும் ஆலோசனைகளை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சரிபார்த்து கொள்ளாமல் பலரும் தங்களது வீடுகளில் பின்பற்ற துவங்கி விடுகின்றனர். இவை சில நேரங்களில் ஆபத்தாக கூட முடிகின்றன. வெறும் 2 - 3 சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்கில் விடுவதன் மூலம் கொரோனா வைரஸை உடலில் இருந்து அகற்ற முடியும் என்று ஒரு வீடியோ போஸ்ட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.



வைரல் போஸ்டில் இருந்தது என்ன.?

அந்த வீடியோவில் பேசிய நபர் 'எலுமிச்சை சிகிச்சை' ('lemon therapy')ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆபத்தான கொரோனா வைரஸிலிருந்து அவர்களை காப்பாற்றும் என குறிப்பிட்டார். மேலும் 2 சொட்டு எலுமிச்சை சாறை எடுத்து மூக்கிற்குள் விடுமாறும் அறிவுறுத்தினார். இப்படி செய்வதன் மூலம் கண், காது, மூக்கு மற்றும் இதயம் உள்ளிட்ட அனைத்து முக்கிய உறுப்புகளும் வெறும் ஐந்தே வினாடிகளில் சுத்திகரிக்கப்படும். தவிர இது அனைத்து சளி மற்றும் இருமல் நோய்களையும் எதிர்கொள்பவர்களுக்கு இந்த முறை நிவாரணம் அளிக்கும் என்று அந்த நபர் வீடியோவில் கூறுகிறார்.



மூக்கில் 2 சொட்டு எலுமிச்சை சாற்றை விடுவதன் மூலம் கோவிட்-19 தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியுமா.? 

இந்த வீடியோ மற்றும் குறிப்பு பற்றி தெளிவுபடுத்தியுள்ள PIB எனப்படும் பத்திரிகை தகவல் பணியகம், எலுமிச்சை தெரபி என கூறப்படும் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது அல்லது COVID-19 நோய் தொற்றை தடுக்காது. இந்த வைரல் வீடியோ முற்றிலும் போலியானது என்று குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்து பெண்களுக்கு எழும் சந்தேகங்களும், கேள்விகளும்... மருத்துவரின் விளக்கம்

PIB கூற்றுப்படி மூக்கில் எலுமிச்சை சாற்றை விடுவதன் மூலம் கொரோனா வைரஸ் அகற்றப்படுவதில்லை. இது தொடர்பாக அதிகாரபூர்வ ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள PIB Fact Check " வெறும் 2 சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்கில் போடுவது உடனடியாக கொரோனா வைரஸைக் கொல்லும் என்று கூறும் வீடியோ வைரலாகி உள்ளது. ஆனால் வீடியோவில் கூறப்பட்டுள்ள டிப்ஸ் போலியானது. மூக்கில் எலுமிச்சை சாறு விடுவதன் மூலம் கோவிட்-19 ஐ அழிக்க முடியும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை" என கூறப்பட்டுள்ளது.



மற்றொரு கோவிட்-19 கட்டுக்கதை..

உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது Aspidosperma Q 20 எனப்படும் ஹோமியோ மருந்தை மாற்றாக எடுத்துக் கொள்ளலாம் என்று சமீபத்தில் ஒரு போஸ்ட் வைரலானது. ஆனால் ஆயுஷ் அமைச்சகம் இந்த தகவலை நிராகரித்ததுடன், ஆபத்தான நிலையில் சுய மருந்து செய்ய வேண்டாம் என்று மக்களை எச்சரித்தது. அதே நேரத்தில் ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் பாதிக்கப்பட்டவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது சிகிச்சை தரும் மருத்துவரின் முடிவாகும்" என்று கூறியது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: