ஐரோப்பிய ஸ்ட்ரோக் அமைப்பு (ESO) மாநாட்டின் சார்பில் சமர்பிக்கப்பட்ட புதிய ஆய்வின்படி, பணி அழுத்தம், தூக்கக் கோளாறுகள் மற்றும் சோர்வு ஆகியவை ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான சில காரணிகளாகக் கருதப்படுகின்றன. நீரிழிவு நோய்,
உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த கொலஸ்ட்ரால், புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் உடல் செயலற்ற தன்மை ஆகியவை இருதய நோய்க்கான ஆபத்து காரணிகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், சமீபத்தில், பாரம்பரியமற்ற (non-traditional) ஆபத்து காரணிகளான பணி அழுத்தம் மற்றும் தூக்கப் பிரச்சனைகள் இருதய ஆபத்தை கணிசமாக அதிகரித்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, பெண்களை விட ஆண்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், பெண்களை விட ஆண்கள் புகைபிடிப்பதற்கும் உடல் பருமனாக இருப்பதற்கும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பெண்களிடையே மாரடைப்பு மற்றும் பக்கவாதம், பணி அழுத்தம், தூக்கக் கோளாறுகள் மற்றும் சோர்வாக இருப்பது போன்ற பாரம்பரியமற்ற ஆபத்து காரணிகளில் அதிகரிப்பு இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஜூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் மார்ட்டின் ஹான்செல் மற்றும் அவரது குழுவினர் இதனை தெரிவித்தனர்.
இந்த அதிகரிப்பு முழு நேரமும் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையுடன் ஒத்துப்போகிறது என்றும், அத்துடன் நமது தினசரி பிஸியான வாழ்க்கையில் கணக்கில் கொள்ள முடியாத பெண்களின் குறிப்பிட்ட சுகாதார கோளாறுகளும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Must Read | 50 வயதை தாண்டிய பெண்கள் கவனத்திற்கு… சாப்பிட வேண்டிய உணவுகளும்… இன்றே தவிர்க்க வேண்டிய உணவுகளும்..!
இதற்கிடையே, ஆராய்ச்சியாளர்கள் 2007, 2012 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இருந்து சுவிஸ் சுகாதார கணக்கெடுப்பில் 22,000 ஆண்கள் மற்றும் பெண்களின் தரவை ஒப்பிட்டு, இருதய நோய்க்கான ஆபத்து காரணிகளைப் புகாரளிக்கும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் கண்டறிந்தனர். 2007ஆம் ஆண்டில் 38 சதவிகிதமாக இருந்த பெண்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 44 சதவிகிதமாக அதிகரித்தவுடன் இந்த ஆய்வு ஒத்துப்போனது.
ஒட்டுமொத்தமாக, இருபாலரிலும், பணியில் மன அழுத்தத்தைப் பதிவு செய்யும் எண்ணிக்கை 2012-இல் 59 சதவிகிதத்திலிருந்து 2017-இல் 66 சதவிகிதமாக உயர்ந்தது. மேலும் சோர்வாகவும் களைப்பாகவும் இருப்பது 23 சதவிகிதத்திலிருந்து 29 சதவிகிதமாக அதிகரித்தது (பெண்களில் 33 சதவிகிதம் மற்றும் ஆண்களில் 26 சதவிகிதம் ஆகும்).
அதே காலகட்டத்தில், தூக்கக் கோளாறுகளின் எண்ணிக்கை 24 சதவிகிதத்திலிருந்து 29 சதவிகிதமாக உயர்ந்தது. கடுமையான தூக்கக் கோளாறுகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களில் 8 சதவிகிதம் கூர்மையாக உயர்ந்துள்ளது. அதே சமயம், ஆண்களில் அது 5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இருதய நோயை வளர்ப்பதற்கான ஆபத்து காரணிகள் ஒரே நேரத்தில் நிலையானதாக இருப்பதையும், 27 சதவிகிதம் பேர் உயர் இரத்த அழுத்தத்தாலும், 18 சதவிகிதம் கொலஸ்ட்ரால் மற்றும் 5 சதவிகிதம் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளனர். உடல் பருமன் 11 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் இது ஆண்களில் அதிகமாக காணப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.