40 வயதின் பிற்பகுதியில் அல்லது 50களின் முற்பகுதியில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நிற்க தொடங்குகிறது. ஆனால், முன்கூட்டியே மாதவிடாய் நிற்கும் காலத்தில், உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியில் வீழ்ச்சி காரணமாக மாதவிடாய் காலத்தின் முடிவு மிகவும் முன்னதாகவே வருகிறது. முன்கூட்டிய மாதவிடாய் 40 வயதிற்கு முன்பே தொடங்குவது உடல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
முன்கூட்டிய மெனோபாஸ் என்றால் என்ன?
40 வயதிற்கு முன்பே மாதவிடாய் நிற்றல் ஏற்படுவது முன்கூட்டிய மெனோபாஸ் ஆகும். முன்கூட்டிய மாதவிடாய் நிற்றல் சில நேரங்களில் கருப்பை பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், கருப்பைகள் ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வதை நிறுத்துகின்றன. நீங்கள் 20 வயதிற்குட்பட்டவராகவும், மாதவிடாய் நின்றவராகவும் இருந்தால், நீங்கள் ப்ரீமெச்சூர் மெனோபாஸ்ஸை அனுபவிக்கிறீர்கள் என்று அர்த்தம். இது உங்கள் உடலுக்கு நல்லதல்ல.
ப்ரீமெச்சூர் மெனோபாஸின் அறிகுறிகள்:
மெனோபாஸ் அறிகுறிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த அறிகுறிகளில் சில:
Must Read | ‘வெரிகோஸ் வெயின்ஸ்’ நோய் குறித்து தெரியுமா? மருத்துவர் பகிரும் எச்சரிக்கை தகவல்!
முன்கூட்டிய மெனோபாஸுக்கு என்ன காரணம்?
ப்ரீமெச்சூர் மெனோபாஸுக்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதில் மரபணு வேறுபாடுகள், குடும்ப வரலாறு, கருப்பை அறுவை சிகிச்சை, வைரஸ் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தியில் குறைப்பாடு ஆகியவை அடங்கும்.
முன்கூட்டிய மெனோபாஸுக்கு என்ன சிகிச்சை?
முன்கூட்டியே மாதவிடாய் நிற்றலால், பல பெண்களுக்கு இதய நோய்கள், கண் பார்வையில் குறைப்பாடு ஆகியவை ஏற்படும். ஆராய்ச்சியாளர்கள் குறிக்கும் சிகிச்சைகள் பின்வருமாறு,
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Explainer, Menopause, Women Health