Home /News /explainers /

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த காரணம் என்ன?

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த காரணம் என்ன?

 ஜான்சன் & ஜான்சன்

ஜான்சன் & ஜான்சன்

பிறப்புறுப்பு பகுதி அல்லது சானிட்டரி நாப்கின்களில் பயன்படுத்தப்படும் போது, ​​டால்கம் பவுடர் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கடந்த ஆகஸ்ட் 11 அன்று உலகின் பெரிய மருத்துவ வேதியல் நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது குழந்தைகளுக்கான பேபி பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனையை 2023 முதல் நிறுத்துவதாக அறிவித்தது.

நிறுத்த முதன்மைக் காரணம்:

1894 முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனை செய்து வருகிறது. குழந்தைகளுக்கு டயபர் போடுவதால்  வரும் எரிச்சல், தழும்பு, ராஷஸ் முதலியவற்றைத் தடுக்க இந்த பவுடர் தயாரிக்கப்பட்டது. குழந்தைகள் மட்டுமின்றி தாய்மார்களும், பெண்களும் இதை பயன்படுத்தினர்.

ஆனால் 1990 முதல், ஆஸ்பெஸ்டாஸ் கலப்படமான இந்த பவுடரைப் பயன்படுத்தியதால் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் கேன்சர் நோய் வந்துள்ளதாக பல்வேறு பெண்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தனர். பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு கொடுத்து வந்த நிறுவனம் இப்போது அதன் திவாலாகும் நிலை கருதி தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் இப்போதும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பவுடர் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பும் இல்லாதது. பயன்பாட்டுக்கு பாதுகாப்பானது என்றே கூறுகிறது,

டால்கம் பவுடர்.

டால்க் ஒரு மென்மையான ஹைட்ரஸ் மெக்னீசியம் சிலிக்கேட் எனும் கனிமம் ஆகும். நிலத்தடியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.  நன்றாகப் பொடியாக அரைக்கப்படும் இது ஈரப்பதத்தை உறிஞ்சி, உராய்வைக் குறைக்கிறது. இது சருமத்தை உலர வைத்து, தடிப்புகளைத் தடுக்கிறது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) படி, இது பேபி பவுடர், உதட்டுச்சாயம், ஐ ஷேடோ மற்றும் அடித்தளம் போன்ற பல்வேறு ஒப்பனை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

கேன்சர் காரணி:

அஸ்பெஸ்டாஸ், இயற்கையான சிலிக்கேட் தாதுக்களின் மற்றொரு கனிமம் ஆகும். டால்க் கனிமத்திற்கு அருகிலேயே இந்த கனிமமும் அமைந்திருக்கும். இதனால் அஸ்பெஸ்டாஸுடன் டால்க் மாசுபடுவதற்கான சாத்தியம் உள்ளது. அஸ்பெஸ்டாஸ் கட்டுமானம் மற்றும் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் நுரையீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், மீசோதெலியோமா மற்றும் பிற சுகாதார நோய்களை ஏற்படுத்துகிறது.

கால்நடைகளை விட குறைவான விலைக்கு குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை - நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி வேதனை

பிறப்புறுப்பு பகுதி அல்லது சானிட்டரி நாப்கின்களில் பயன்படுத்தப்படும் போது, ​​டால்கம் பவுடர் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு டால்கம் பவுடர்களை பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வழக்குகள்:

டார்லீன் கோக்கர் என்பவர்தான் முதன் முதலில் தன் குழந்தைக்கும் தானும் பயன்படுத்திய டால்க், பல்வேறு உறுப்புகளின் திசுக்களை பாதித்து புற்றுநோயான மீசோதெலியோமாவை ஏற்படுத்தியதாக, வழக்குத் தொடுத்தார். ஆனால் எந்த கலப்படமும் இல்லை என்று நிறுவனம் மறுத்துவிட்டது . அதற்கான நிறுவன உள்ளீட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க மறுத்துவிட்டது.

அதன் பின்னர் அமெரிக்காவில் மட்டும் சுமார் 40,300 வழக்குகள் இந்த நிறுவனத்தின் மீது போடப்பட்டது. அவற்றிற்கு தீர்ப்பளித்த நீதிமன்றம் $3.5 பில்லியன் தொகையை நஷ்ட ஈடாக பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தந்தது.

2018 இல் 22 பெண்கள் தொடுத்த வழக்கில் $4.7 பில்லியன் டாலர்கள் நஷ்டஈடு விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2020 இல் அமெரிக்கா, கனடாவில் தங்கள் டால்கம் விற்பனையை நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்தது.

நிறுவனத்தின் தந்திரம்:

கடந்த அக்டோபரில், J&J டெக்சாஸில் LTL மேனேஜ்மேண்ட் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கி அனைத்து குழந்தை பவுடர் உரிமைகோரல்கள் மற்றும் எதிர்கால பொறுப்புகளை புதிய நிறுவனத்திற்கு மாற்றியது, அதே நேரத்தில் அதன் சொத்துக்களை தனித்தனியாக பிரித்து, பின்னர் திவால்நிலையை பிரகடனப்படுத்தியது. இதைக் காரணமாக வைத்து தனது டால்கம் பவுடர் தயாரிப்புகளை நிறுத்தியுள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Baby, Baby Care, Johnson and johnson, Ovarian Cancer

அடுத்த செய்தி