ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

டவ் ஷாம்பூ ஆபத்தானதா?

டவ் ஷாம்பூ ஆபத்தானதா?

ஷாம்பூக்களை திரும்பப்பெறும் யூனிலீவர் நிறுவனம். காரணம் என்ன?

ஷாம்பூக்களை திரும்பப்பெறும் யூனிலீவர் நிறுவனம். காரணம் என்ன?

dove: பென்சீன் என்பது பெட்ரோலியப் பொருட்களின் அறியப்பட்ட மாசுபாடு ஆகும். இது மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

யுனிலீவர் நிறுவனம், டவ் உள்ளிட்ட ஏரோசல் உலர் ஷாம்பூவில் புற்றுநோயை உண்டாக்கும் பென்சீன் எனப்படும் ரசாயனம் இருப்பதை கண்டறிந்த பிறகு பிரபலமான பிராண்டுகளின் பொருட்களை திரும்பப் பெறுகிறது.

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இணையதளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடட்ட அறிவிப்பின்படி, ராக்காஹோலிக் மற்றும் பெட் ஹெட் வகை உலர் ஷாம்பூக்களை உருவாக்கும் Nexxus, Suave, Tresemmé மற்றும் Tigi போன்ற பிராண்டுகளையும் திரும்பப் பெற உள்ளது.

உலர் ஷாம்பு என்பது தூள் அல்லது ஸ்ப்ரே வடிவில் இருக்கும் . இது முடியை ஈரப்படுத்தாமல் சுத்தம் செய்ய பயன்படுத்தபடுகிறது. ஆல்கஹால் அல்லது ஸ்டார்ச் அடிப்படையிலான ஸ்ப்ரேக்கள் முடியில் இருந்து கிரீஸ் மற்றும் எண்ணெய்களை அகற்றிவிடுகிறது. இதனால் தலைக்கு குளித்தது போலவே இருக்கும்.

உருகும் பனிப்பாறைகள்.. வெளிவரும் படிந்துபோன வைரஸ்கள்... மீண்டும் தொற்று நோய்? அதிர்ச்சி ரிப்போர்ட்

சில உலர் ஷாம்புகளில் ஏரோசல் ஸ்ப்ரே வடிவில் உள்ளது. சில நிறுவனங்களின் ஷாம்பூக்கள் முடி நிறத்திற்கு பொருந்தக்கூடிய வண்ண தூள் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஏரோசோல்களில் உள்ள பிரச்சனை பெரும்பாலும் கேன்களில் இருந்து அழகு சாதன பொருட்களை தெளிக்கப் பயன்படுத்தப்படும் உந்துசக்திகளில் இருந்து தோன்றியுள்ளது.

ரசாயனங்கள்:

உலர் ஷாம்பூக்கள் போன்ற ஸ்ப்ரே-ஆன் பெர்சனல்-கேர் தயாரிப்புகளில் பெரும்பாலும் கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதன் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோலியம் பொருட்களான புரொப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற ரசாயனங்கள் உள்ளன. அனால் தற்போது யூனிலீவர் பொருட்களில் பென்ஸீன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பென்சீன் என்பது பெட்ரோலியப் பொருட்களின் அறியப்பட்ட மாசுபாடு ஆகும். இது மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எஃப்.டி.ஏ கூற்றுப்படி, "பரிசோதனையில் திரும்பப்பெறப்பட்ட பொருட்களில் பென்சீன் அளவு உயிருக்கு ஆபத்தான அளவு இல்லாவிடினும் அந்த பென்சீனின் வெளிப்பாடு லுகேமியா மற்றும் இரத்த புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்று கூறியது.

யுனிலீவர் தயாரிப்புகளில் காணப்படும் பென்சீனின் அளவை நிறுவனம் வெளியிடவில்லை, இருப்பினும் எச்சரிக்கை காரணங்களுக்காக அவற்றை திரும்பப் பெறுவதாகக் கூறியது.

திரும்ப பெறப்படும் ..

இதனால் அக்டோபர் 2021க்கு முன் தயாரிக்கப்பட்ட யுனிலீவர் தயாரிப்புகள் சந்தையில் இருந்து திரும்ப பெறப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களில் ஏரோசோல்களின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்புகிறது.

இங்கிலாந்து செல்ல டிக்கெட்டுக்கு கூட பணம் இல்லாமல் தவித்த பாட்டி.. நாட்டையே ஆள போகும் பேரன்... ரிஷி சுனக் பற்றி சுவாரஸ்ய தகவல்

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ஜான்சன் & ஜான்சனின் நியூட்ரோஜெனா, எட்ஜ்வெல் பெர்சனல் கேர் கோ.வின் பனானா போட் மற்றும் பீர்ஸ்டோர்ஃப் ஏஜியின் காப்பர்டோன் மற்றும் ப்ராக்டர் & கேம்பிள் கோ போன்ற ஸ்ப்ரே-ஆன் அழகு சாதன பொருட்கள் சந்தையில் நிறுத்தப்பட்டது. மே 2021 முதல், நியூ ஹேவன், கனெக்டிகட்டை தளமாகக் கொண்ட Valisure எனப்படும் ஒரு பகுப்பாய்வு ஆய்வகம், அத்தகைய தயாரிப்புகளில் பென்சீனைக் கண்டறிந்ததன் மூலம் திரும்பப்பெறப்பட்டன.

ஸ்ப்ரே-ஆன் ட்ரை ஷாம்பு ஒரு பிரச்சனையாக அடையாளம் காணப்படுவதும் இது முதல் முறை அல்ல. Valisure இன் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து P&G ஏரோசல் தயாரிப்புகளின் முழு தயாரிப்புகளையும் சோதித்தது. பென்சீன் மாசுபாட்டால் டிசம்பரில் அதன் Pantene மற்றும் Herbal Essences உலர் ஷாம்புகளை திரும்பப் பெற்றது.

உலர் ஷாம்பு போன்ற அழகுசாதனப் பொருட்களுக்கான பென்சீன் வரம்புகளை FDA அமைக்கவில்லை என்றாலும், தயாரிப்புகளில் "எந்தவொரு விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்" இருக்கக்கூடாது என்று அது கூறுகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Beauty Hacks, Deadly Chemical, Health issues