Home /News /explainers /

Standing Deposit Facility: துணைநில் வைப்பு வசதி வீதம் என்றால் என்ன?

Standing Deposit Facility: துணைநில் வைப்பு வசதி வீதம் என்றால் என்ன?

வளர்ச்சிக்கு புத்தாக்கம் அளிப்பதைக் காட்டிலும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான  நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது. தற்போது, முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக பணவீக்கம் உருவாகி உள்ளது.

வளர்ச்சிக்கு புத்தாக்கம் அளிப்பதைக் காட்டிலும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான  நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது. தற்போது, முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக பணவீக்கம் உருவாகி உள்ளது.

வளர்ச்சிக்கு புத்தாக்கம் அளிப்பதைக் காட்டிலும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான  நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது. தற்போது, முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக பணவீக்கம் உருவாகி உள்ளது.

RBI Monetary Policy Committee: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, தொடர்ந்து 11வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் 4 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. ரிசர்வ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதம் எனும் அளவில் உள்ளது.

துணைநில் வைப்பு வசதி வீதம் (Standing Deposit Facility) என்று சொல்லப்படுகின்றன புதிய வட்டி விகிதத்தை ஆர்பிஐ நேற்று அறிவித்துள்ளது. இது, வர்த்தக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் செலுத்தும் வைப்புத் தொகைக்கான  விகிதமாகும்(Standing Deposit Facility). இது, ரிசர்வ் ரெப்போ விகிதத்தை விட 0.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் முதன்மை முன்னுரிமைகளாக இருக்கும்: 

ஆறு நபர் நிதி கொள்கை குழுவின் முடிவுகளை  இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் நேற்று அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய  அவர், "நடப்பு நிதியாண்டில் (2022-23) நடைபெறும் முதலாவது பணக்கொள்கை கூட்டம் இதுவாகும். பெருந்தொற்றின் தொடக்கத்தில் இருந்து வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ரிசர்வ் வங்கி சாதகமான நடவடிக்கைகளை (accommodative stance) எடுத்து வருகிறது.

ஆனால், தற்போது வளர்ச்சிக்கு புத்தாக்கம் அளிப்பதைக் காட்டிலும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான  நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது. தற்போது, முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக பணவீக்கம் உருவாகி உள்ளது. எனவே, விலைவாசி மற்றும் பணவீக்கம் படிப்படியாகஅதிகரித்து வருவதால் சாதகமான நிதிக் கொள்கையில் இருந்து பின்வாங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

இந்த நிதியாண்டின், அடுத்தடுத்த காலாண்டுகளில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி எச்சைத்துள்ளது.


துணைநில் வைப்பு வசதி வீதம் என்றல் என்ன? 

இந்தியாவின் பண அதிகார அமைப்பாக (Monetary Authority) இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. இந்தியாவின் பணவீக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ரெப்போ விகிதத்தை முக்கிய கருவியாக ஆர்பிஐ பயன்படுத்துகிறது.

ரெப்போ விகிதம், மீள் ரெப்போ விகிதம், துணைநில் கடன் வழங்கல் வசதி விகிதம் ( Standing Marginal Facility), குறுகிய கால வட்டி விகிதம் (Short Term Interest rate) போன்றவைகள் இந்தியாவின் கொள்கை வட்டி விகித தொகுப்பினை (Interest Rate Corridor) உருவாக்குகின்றன.    

இதில், மீள் ரெப்போ விகிதம் (Reverse Repo) குறைந்த மட்டமாகவும் துணைநில் வழங்கல் வசதி வீதமானது (Standing Marginal Facility) உயர்ந்த மட்டமாகவும் இருக்கின்றன. ஆரம்ப வீதத்திற்கும் உச்சவீதத்திற்குமான மாற்றங்கள் அடிப்படையில் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகிறது.

நன்றி: Arthapedia


தற்போது, பணத்தின் அளிப்பைக் கட்டுப்படுத்த (Absorb Excess Liquidity), துணைநில் வைப்பு வசதி வீதம் என்ற புதிய கருவியை ஆர்பிஐ தேர்ந்தெடுத்துள்ளது. 

ரெப்போ விகிதம் என்றால் என்ன? 

வணிக வங்கிகளுக்கு நிதிபற்றாக்குறை ஏற்படும் போது பத்திரங்களை கடனாக வைத்து இந்திய ரிசர்வ் வங்கியில் கடன்களை பெறும். அந்நிலையில், விதிக்கப்படும் கடன் விகிதமே ரெப்போ வட்டி விகிதமாகும். பணவீக்கத்தை கட்டுபடுத்த இந்த வட்டி விகிதத்திணை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவை அதிகப்படுத்த முடியும். இதன் மூலம், ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் கடன் வாங்கும் திறன் குறையும். நாட்டில் உற்பத்தி குறையும் , பணவீக்கம் மட்டுப்படுத்த முடியும்.

நன்றி: Arthapedia


மீள் ரெப்போ விகிதம் என்றால் என்ன ?

பணவாட்ட (Deflation) சூழ்நிலையில் வணிக வங்கிகளிடம் இருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதம் மீள் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விகிதத்தை அதிகப்படுத்தினால், வணிக வங்கிகள் தொழில்நிறுவனங்களுக்கு பணம் அளிப்பதற்கு பதிலாக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு பணத்தைக் கொடுக்கும் சூழல் உருவாகும். ஏனெனில், ரிசர்வ் வங்கிக்கு அளிப்பதனால் தனது பணத்துக்கு உயர் பாதுகாப்பு கிடைக்கும் என்று வணிக வங்கிகள் எண்ணலாம். இதன்காரணமாக, வங்கிகளிடம் உள்ள பணம் ரிசர்வ் வங்கியிடம் வந்து சேர்கிறது. நாட்டில் பணப்புழக்கம் குறைவதினால், பணவீக்கம் குறையத் தொடங்கும்.

தற்போது,  மீள் ரெப்போ விகிதத்திற்குப் பதிலாகதுணைநில் வைப்பு வசதி வீதத்தை ஆர்பிஐ கையில் எடுத்திருக்கிறது. இதுவும், கிட்டத்தட்ட மீள் ரெப்போ மாதிரியாகும். ஆனால், இதில், உத்தரவாதம் இல்லாத இயல்பான கடன்கள் (collateral free) வழங்கப்படுகின்றன. உதாரணமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை வணிக வங்கிகளிடம் அளாவுக்கு அதிகமான பணங்கள் வந்து சேர்ந்தன. பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி மீள் ரெப்போ விகிதத்தை  அதிகப்படுத்தியது.  இதன், காரணமாக, வங்கிகள் தங்களிடம் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கியிடம் கொண்டு சேர்த்தன. இதன் விளைவாக, கடன் பத்திரங்களுக்கு பெறும் தட்டுப்பாடு நிலவியது. இதனை, சாரி செய்யும் பொருட்டு, 2018ல்  துணைநில் வைப்பு வசதி வீதத்தை ஆர்பிஐ  அறிமுகப்படுத்தியது.  இதன்கீழ், கடன் பத்திரிங்கள் போன்ற எந்த உத்தரவாதம் இல்லாமல் வணிக வங்கிகள் கடன் கொடுக்க முடியும். கடன் பத்திரங்களுக்கான தட்டுப்பாடும் குறையும்.

துணைநில் வழங்கல் வசதி வீதம் என்றால் என்ன?  ரெப்போ, மீள் ரெப்போ, மாற்று ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve ratio), சட்டப்பூர்வ நீர்மை விகிதம் (Statutory Liquidity ratio) போன்ற ரிசர்வ் வங்கியின் கருவிகளைத் தாண்டி (Liquidity Adjustment Facility (LAF) வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால கடன்களுக்கு விதிக்கப்படும் விகிதம் துணைநில் வழங்கல் வசதி வீதம் என்றழைக்கப்படுகிறது. இதற்கு, விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ விகிதத்தை விட மிக  அதிகமாக இருக்கும் (penal rate).   
Published by:Salanraj R
First published:

Tags: Economy, Inflation

அடுத்த செய்தி