ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய ஆவணம் ஆகும். பல இடங்களில் அடையாள ஆவணமாகவும், முகவரி சான்றிதழாகவும் ரேஷன் கார்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதுமட்டுமில்லை அரசு சார்பில் வழங்கப்படும் நிதியுதவி, அரசின் நலத்திட்டங்களை பெறவும் ரேஷன் கார்டு மிக மிக அவசியம். புதியதாக திருமணம் ஆனவர்கள் கணவரின் பெயர் அல்லது மனைவியின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க மறந்து விடாதீர்கள். அதே போல் குடும்பத்தில் புதியதாக உறுப்பினர் சேர்ந்தாலோ அவர்களின் பெயரையும் கட்டாயம் கார்டில் சேர்க்க வேண்டும்.
போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து சந்தேகமா? இந்த நம்பருக்கு ஃபோன் செய்தாலே போதும்!
புதியதாக திருமணம் ஆனவர்கள் ஒருவேளை தனி வீட்டில் இருந்தால், அவர்கள் ஏற்கெனவே தனது குடும்பத்துடன் ரேஷன் கார்டில் இருக்கும் பெயரை நீக்கம் செய்து விட்டு தான் புதிய கார்டில் பெயரை சேர்க்க முடியும். அதுமட்டுமில்லை இதற்கு ஆதார் திருத்தமும் மிக மிக முக்கியம். தற்போது இருக்கும் முகவரிக்கு ஆதார் கார்டு முகவரியை திருத்தம் செய்துவிட்டு புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்ய வேண்டும். ஒருவேளை குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஆதார் கார்டு வாங்விட்டு அதன் மூலம் குழந்தையின் பெயரையும் ரேஷன் கார்டில் இணைக்கலாம். இதை எல்லாம் செய்ய தவறினால், அரசு மூலம் கிடைக்கும் நலத்திட்டங்களை நீங்கள் பெறுவது சிக்கலாகி விடும்.ரேஷன் பொருட்களும் கிடைக்காது.
ஆன்லைனிலும் இதை செய்யலாம்:
1. ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். முதலில் உங்கள் மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ https://tnpds.gov.in/ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
SBI : உங்கள் பணத்திற்கு ஸ்டேட் பேங்கில் அதிக வட்டி கிடைக்க போகுது! எப்படி தெரியுமா?
2. வலது புறத்தில் இருக்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. அங்கு உங்களுடைய மொபைல் எண் மற்றும் அங்கு தோன்றும் கேப்சா குறீயீடுகளை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
3. அதில் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு தேவையான ஆவணங்களை அப்லோட்செய்ய வேண்டும்.
4. இறுதியாக ஓடிபி சரிபார்க்கப்பட்டு உங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.