ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி நாள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதில் மத்திய மாநில அரசுகள் தெளிவாக இருக்கின்றனர். இப்படி இருக்கையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
read more..Ration Card : தவறுதலாக ரேஷன் கார்டை தொலைத்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டியவை.. முழு விபரம்!
இதற்கு பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலும் ரேஷன் பெற முடியும். முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது. தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ளது. நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், வரும் ஜூன் 30 2022க்குள் அதை செய்து முடிக்கவும்.
தேவையான ஆவணங்கள்: ஒரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ். ஆன்லைனில் இந்த ஆவணங்களை கொண்டு ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கலாம்.
இதையும் படிங்க.. புதியதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் கார்டு வாங்குவதற்கு முன்பு இதை கவனியுங்கள்!
இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ' start now' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும்.
பின்பு ‘ration card benefit' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.