ஹோம் /நியூஸ் /Explainers /

ரேஷன் கார்டு தொலைந்து போனால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

ரேஷன் கார்டு தொலைந்து போனால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு தொலைந்து போனால், உங்கள் கையில் செல்போன் இருந்தால் போதும் 20 நிமிடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு பின்பு ரேஷன் கார்டு வாங்க, பெயர் மாற்ற, முகவரி மாற்ற கூட்டம் அலைமோதும் செய்திகளை அடிக்கடி வாசித்திருப்பீர்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று பயணம் செய்யும்போது தவறுதலாக ரேஷன் கார்டைத் தொலைக்க நேரிடுவது. கவனக்குறைவு ஏற்படும் போது மட்டுமே இது நிகழும். ஒருவேளை அப்படி தெரியாமல் போனால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உடனே ஆன்லைனில் ஈஸியாக விண்ணப்பிப்பது.

  உங்கள் கையில் செல்போன் இருந்தால் போதும் இதை 20 நிமிடத்தில் செய்து முடிக்கலாம். அதற்கான படிகள் இதோ

  1. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும். https://www.tnpds.gov.in/

  2. இப்போது நீங்கள் பதிவு செய்துள்ள தொலைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஒடிபி எண் வரும். அதனைக் கொண்டு உங்கள் சுயவிவர பக்கத்திற்கு உள்நுழையவும்.

  3. இப்போது, நீங்கள் TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள்.  (இதில் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளும் இருக்கும்)

  4. உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.அதன் பின்பு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.

  5. உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும்  உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

  இதுத் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற ஹெல்ப்லைனில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Ration card