ஹோம் /நியூஸ் /Explainers /

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்!

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

ரேஷன் அட்டை ரத்து செய்யப்பட்டால் அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ரேஷன் அட்டைதாரர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அப்டேட் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் மாத மாதம் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். ஒருவேளை இவற்றை சரிவர தொடர்ந்து வாங்காமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுவிடும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் பொருளாதார அடிப்படையில் சர்க்கரை அட்டை, அரிசி அட்டையை பொறுத்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை தொடர்ந்து 6 மாதங்கள் ரேஷன் கார்டுகளில் உணவு தானியங்களை அட்டைத்தாரர்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.

அட்டைதாரருக்கு மலிவான உணவு தானியங்கள் தேவையில்லை அல்லது அவர் மலிவான உணவு தானியங்களை வாங்கத் தகுதியற்றவர் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி ஒருவேளை உங்களது ரேஷன் அட்டை ரத்து செய்யப்பட்டால் அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

மீனவர்களுக்கு விரைவில் கூட்டுறவு வங்கிகள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டிருந்தால், அதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய , முதலில் மாநில அல்லது மத்திய அரசின் AePDS போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். பின்பு கீழே குறிப்பிடப்படும் படிகளை பின்பற்றி ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய கோரிக்கை விட வேண்டும். அதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டால் ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும்.

https://www.tnpds.gov.in/ போர்ட்டலில் இருக்கும் 'Ration Card Correction’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்பு ரேஷன் கார்டு திருத்தம் பக்கத்தில் படிவத்தை நிரப்ப வேண்டும்.

அடுத்தது, உங்கள் ரேஷன் கார்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யலாம்.

கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!!

விவரங்கள் நிரப்பிய இந்த விண்ணப்பத்தை PDS(பொது விநியோக அமைப்பு) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ரேஷன் கார்டை ஆக்டிவேட் செய்யவதற்கான விண்ணப்பத்தை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டால், ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்படும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Ration, Ration card, Ration Shop, Smart ration card