Home /News /explainers /

Polio Virus: போலியோவுக்கு முடிவு கட்டுவதில் உள்ள பிரச்சனைகள் என்ன ?

Polio Virus: போலியோவுக்கு முடிவு கட்டுவதில் உள்ள பிரச்சனைகள் என்ன ?

ஒட்டுமொத்த cVDPVs நோய் பாதிப்புகளில் 90% type 2 வைரஸ் வகையைச் சார்ந்ததாக இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுமொத்த cVDPVs நோய் பாதிப்புகளில் 90% type 2 வைரஸ் வகையைச் சார்ந்ததாக இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுமொத்த cVDPVs நோய் பாதிப்புகளில் 90% type 2 வைரஸ் வகையைச் சார்ந்ததாக இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி (Malawi) நாட்டில் ஐந்து வயது பெண் குழந்தைக்கு WPV1 போலியோ வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று, தடுப்பூசி மூலம் பெறப்பட்ட cVDPV3 வைரஸ் இஸ்ரேல் நாட்டில் கண்டறியபட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுகள்,  போலியோவை ஒட்டுமொத்தமாக அகற்றுதல் என்ற உயர்ந்த இலக்கினை  அடைய தீவிர நடவடிக்கைகள் தேவை என்பதை  வலியுறுத்திகின்றன.

போலியோ வைரஸ்:  போலியோ என்பது குழந்தைகளை அதிகம்  தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயாகும்.  இந்த வைரஸ் திறந்தவெளி மலம் அல்லது வாய் நிமிங்கள் வழியாக மனிதரில் இருந்து மனிதருக்கு பரவுகிறது. வாயின் வழியே நுழையும் இந்த வைரஸ் கலீரலில் பெருக்கம் செய்கிறது. பின்னர், நரம்பு மண்டலத்தை ஆக்கிரமித்து நிரந்தர முடக்கத்தை ஏற்படுகிறது. (தோராயமாக 200ல் ஒருவர்). நிரந்தர முடக்கம் அடைந்தவர்களில் 2முதல் 10% மரணமடைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

போலியோ வைரஸ் ஆர்.என்.ஏ மரபணுப் பொருளைக் கொண்டுள்ளது( சார்ஸ்- கோவிட் -19 போன்று).இதில், Type 1 (Wild Poliovirus 1 - WPV1), Type 2 (WPV2- Wild Polio Virus 2), Type 3 (WPV3 -Wild Polio Virus 3) மூன்று வகைப்பாடுகள் உள்ளன.



இதில்,  WPV2 போலியோ வைரஸ் கடைசியாக 1999ம் இந்தியாவில் கண்டறியப்பட்ட நிலையில், 2015ம் ஆண்டு உலகத்தில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே போன்று, WPV2 வைரஸ் 2019ம் ஆண்டு உலகத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டது. WPV1 வைரஸ் இன்னமும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஆண்டு முழுவதும் பரவிய நோயாக (Endemic) இருக்கிறது. ஆனால், தற்போது WPV1  வைரஸ்  தென்கிழக்கு ஆப்பிரிக்கா  உள்ள மலாவி நாட்டில் காணப்பட்டுள்ளதால்,  போலியோ வைரஸின் பரவல் தன்மை குறித்து ஆய்வாளர்கள் கவலை கொண்டு வருகின்றனர்.

போலியோ மருந்து:  போலியோ நோய்த் தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும், தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இரண்டு வகையான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வாய்வழி போலியோ தடுப்பு மருந்து (sabin- Oral Polio Vaccine)

மற்றும்

போலியோ தடுப்பூசி (Salk -inactivated polio vaccine).   

வாய்வழி தடுப்பு மருந்தில் உயிருள்ள மற்றும் வீரியம் குறைந்த போலியோ வைரஸ் திரிபுகளின் கலவை இருக்கும். வீரியம் அழிக்கப்பட்ட  போலியோ தடுப்பூசி (IPV) போலியோ தடுப்பு மருந்தின் ஒரு வடிவமாகும். இது தசை வலி செலுத்தப்படும்.



2000ல் உலகிலிருந்து போலியாவோ அகற்ற வேண்டும் என்ற உன்னத இலக்கை உலக சுகாதார மையம் 1988 அறிவித்தது. தற்போது, போலியோ பாதிப்புகள் எண்ணிக்கை  கிட்டத்தட்ட 99.9% ஆக  குறைந்துவிட்டன. வாய்வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்து இதற்கு முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு  தடுப்பூசி போடுவதை விட சொட்டு மருந்துக் கொடுப்பது எளிதாகவும், செலவு குறைவாகவும் இருந்தது. தடுப்பு மருந்தைவிட விட தடுப்பூசியின் விலை ஐந்து மடங்கு அதிகம் என்று  புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசிக்கு முறையான சேமிப்பு வசதிகள், விநியோக சங்கிலி இணைப்புகள், கண்காணிப்பு முறைகள், பயிற்சி பெற்ற சுகாதார பணியாளர்கள், ஊசி கருவிகள், விழிப்புணர்வு உத்திகள் போன்ற எண்ணற்ற தேவைகள் இருந்தன. மேலும், தடுப்பூசி உற்பத்தியும் மிகவும் கடினமானது, செலவினம் மிகுந்தது, ஏழை நாடுகளுக்கு அணுகல் இல்லாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தியா, இலங்கை போன்ற தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகள் சொட்டு மருந்தையே தங்கள் முதன்மையான ஆயுதமாக கொண்டிருந்தனார்.

தடுப்பு மருந்து மூலம் போலியோ வைரஸ் (vaccine-derived poliovirus): வாய்வழி போலியோ தடுப்பு மருந்தில் வீரியம் மிகக் குறைவான ஆனால் உயிருள்ள வைரஸ் (மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தாதவாறு வைரசை மாற்றி) மனிதர்களுக்குள்  செலுத்தப்படுகிறது. இந்த வைரஸ், நமது கல்லீரலில் பெருக்கம் செய்து நமது உடம்பில் ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்து போலியோ வைரஸ் அழித்தொழிக்கிறது. இந்த வைரஸ்கள் சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தையின் மலத்தின் மூலம் வெளியேறுகிறது. குறிப்பாக, இந்த வெளியேற்றம் சொட்டு மருந்து போட்டுக் கொண்ட முதல் இரண்டு வாரங்களுக்கு அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி வெளியேற்றப்பட்ட வைரஸ்கள்,காலப்போக்கில் உருமாறி இயற்கையாக உருவாகும் போலியோ வைரசாக மாறும் தன்மை அடைகிறது.   

இந்த வைரஸ் மீண்டும் திறந்தவெளி மலம் அல்லது வாய் நிமிங்கள் வழியாக மனிதரில் இருந்து மனிதருக்கு பரவுகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா போன்ற  மேற்கத்திய நாடுகளில்  போலியோ சொட்டு மருந்தை முற்றிலுமாக நிறுத்தி விட்டன.

2000 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் ஒட்டுமொத்த cVDPVs நோய் பாதிப்புகளில் 90% type 2 வைரஸ் வகையைச் சார்ந்ததாக இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, type 1 மற்றும் type 3 வைரஸ் வகைகளை மட்டும் குறிவைக்கும் Bivalent போலியோ தடுப்பு மருந்தை இந்தியா உள்ளிட்ட  நாடுகள் அறிமுகப்படுத்தின. Top (Trivalnet  போலயோ மருந்து) தடுப்பு மருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.

2018-19 ஆண்டுகளில் cVDPVs நோய்த் தோற்று எண்ணிக்கை விகிதம் 


ஒருபுறம், ஆபிரிக்காவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அதிகமாக பரவி வரும்  WPV1 தொற்று, தற்போது தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறுமியிடம் காணப்பட்டுள்ளது. மறுபுறம், போலியோ தடுப்பூசியை தனது கேடயமாக்கிக் கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டில் cVDPVs - 3 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே , போலியோ தொற்றுக்கு எதிரான போர் மிகவும் சிக்கலானது என்பதை இந்த சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன. தடுப்பூசியைத் தாண்டி, ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளுக்கு சொட்டு மருந்தின் இன்றியமையாத தேவைகளையும் உணர்த்துகின்றன.
Published by:Salanraj R
First published:

Tags: Polio vaccine

அடுத்த செய்தி