Home /News /explainers /

மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியம் உங்களுக்கும் வேண்டுமா? அப்ப இதை செய்யுங்கள்!

மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியம் உங்களுக்கும் வேண்டுமா? அப்ப இதை செய்யுங்கள்!

ஓய்வூதியம்

ஓய்வூதியம்

60 வயது நிறைவடைந்த பிறகு, உங்களுக்கான ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்

    வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்து, களைப்படையும் நமக்கு ஓய்வு காலத்திலாவது நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். நீங்கள் ஒரு நல்ல நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் பணி செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கு நீங்கள் எளிமையாக திட்டமிட்டுக் கொள்ள முடியும். ஆனால், முறைசாரா துறைகளில் தினப்படி கூலிக்கு நீங்கள் பணி செய்பவர் என்றால், உங்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் என்பது கிடைக்க வழியில்லை என்ற சூழல் நிலவியது.

    இத்தகைய சூழலில் தான், பிராதன் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (PMSYM) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, உங்களுக்கு என்று நிலையான வருமானம் இல்லாத சூழலில், உங்களுக்கான ஓய்வு காலத்தில் நிச்சயிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிதி பாதுகாப்பை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

    குறிப்பாக, முறைசாரா தொழிலாளர்களுக்கு, அவர்களுடைய ஓய்வு காலத்தில் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    ஆதார்.. பான் கார்டு உங்களிடம் இருக்கா? இதை செய்யலனா ரூ1,000 அபராதம் கட்ட வேண்டும்

    யாரெல்லாம் இதில் சேர முடியும்?

    வீடுகளில் பணிப்பெண் அல்லது உதவியாளராக வேலை செய்பவர்கள், தெருவோர வியாபாரிகள், சத்துணவு திட்டப் பணியாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், செங்கல் சூளைப் பணியாளர்கள், துணி வெளுப்பவர்கள், நிலமற்ற விவசாய தொழிலாளிகள், பீடி தயாரிப்பு தொழிலாளிகள், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இதேபோன்று அன்றாடக் கூலி வேலை செய்யக் கூடிய அனைவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

    திட்டத்தின் பலன்கள்

    இது தாமாக முன்வந்து பங்களிப்பு செய்யும் திட்டம் ஆகும். இதன் கீழ், உங்கள் ஓய்வு காலத்தில் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை ஓய்வூதியம் பெறுபவர் இறந்து விட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு, குடும்ப ஓய்வூதியம் என்பதன் அடிப்படையில் இதில் 50 சதவீத தொகை கிடைக்கும்.

    இதையும் படிங்க.. மாதம் ரூ. 5000 சேமித்தால் ரூ. 40,000க்கு மேல் பென்சன் கிடைக்கும்! எப்படி தெரியுமா?

    வயது தகுதி

    18 வயது முதல் 40 வயது வரையிலான தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். உங்கள் வயதைப் பொறுத்து மாதந்தோரும் ரூ.55 முதல் ரூ.200 வரையில் சந்தா தொகை உங்களின் 60ஆவது வயது வரையில் செலுத்த வேண்டும். 60 வயது நிறைவடைந்த பிறகு, உங்களுக்கான ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். திட்டப் பலன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    பிற தகுதிகள்

    உங்கள் மாத வருமானம் ரூ.15,000 க்கு கீழ் இருக்க வேண்டும். ஈபிஎஃப்ஓ, ஈஎஸ்ஐசி, என்பிஎஸ் போன்ற திட்டங்களில் நீங்கள் உறுப்பினராக இருக்கக் கூடாது. வருமான வரி செலுத்துபவர் இதில் சேர முடியாது. உங்களிடம், ஆதார் அட்டை, அனைவருக்கும் வங்கித் திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்குப் புத்தகம் ஆகியவை இருக்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Atal Pension Yojana Scheme, Govt Scheme, Pension Plan

    அடுத்த செய்தி