EPF விதிகளில் மாற்றம்! உடனடியாக ஒரு லட்ச ரூபாய் மெடிக்கல் அட்வான்ஸ் பெறுவது எப்படி?

EPF Withdrawal

சிகிச்சைக்கு தேவையான மருத்துவச் செலவுக்கு, மதிப்பீடு சான்றுகளை சமர்பிக்கத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சுற்றறிக்கை CS(MA) மற்றும் CGHS - ஸ்கீம் உள்ள மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா நெருக்கடி காலத்தில் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் வருங்கால வைப்பு நிதியை பெற்று மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டனர். மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வருங்கால வைப்பு நிதி பெறுவதில் இருக்கும் சிரமங்களை களைந்து, நடைமுறைகளை மத்திய அரசும் எளிதாக்கியது. தற்போது, வருங்கால வைப்பு நிதியில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு அட்வான்ஸ் பெறுவதற்கான நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சிகிச்சைக்கு தேவையான மருத்துவச் செலவுக்கு, மதிப்பீடு சான்றுகளை சமர்பிக்கத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சுற்றறிக்கை CS(MA) மற்றும் CGHS - ஸ்கீம் உள்ள மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள வருங்கால வைப்பு நிதி அமைப்பு, உயிருக்கு ஆபத்தான நோய்களில், நோயாளின் உயிரைக் காப்பாற்ற அவர்களை அவசர, அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கட்டாயமாகிறது. இதுபோன்ற நேரங்களில் மருத்துவமனையில் மருத்துவச் செலவுக்கான மதிப்பீட்டை பெற முடியாது எனத் தெரிவித்துள்ளது.

Also Read:   மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

சில நேரங்களில் நோயாளி ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் நோயாளி இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் கூட மருத்துவ அட்வான்ஸை விண்ணப்பித்து ஒரு லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

PF மருத்துவ அட்வான்ஸ் பெற்றுக்கொள்வது எப்படி?

1) விதிமுறைகளின்படி நோயாளி அரசு / பொதுத்துறை நிறுவனம் / சி.ஜி.எச்.எஸ் (CGHS) எம்பனேல் செய்யப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும். அவசரநிலை காரணமாக நோயாளி ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் நிலை குறித்து விளக்கமளித்து விதிகளில் தளர்வு வழங்குவதற்கு தகுதியானவர்கள் என உரிய அதிகாரியிடம் முறையிடலாம். இதன் மூலம் மெடிக்கல் அட்வான்ஸ் மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

Also Read:   பாகிஸ்தானுடன் சேரலாம் இல்லனா தனி நாடாகலாம்: காஷ்மீர் மக்களுக்கு இம்ரான் கானின் புதிய ஆஃபர்!

2) ஊழியர் அல்லது ஒரு குடும்ப உறுப்பினர் யாரேனும் ஒருவர் மெடிக்கல் அட்வான்ஸ் பெறுவதற்கான விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அப்போது, செலவு பற்றிய மதிப்பீடுகளை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பத்தில் மருத்துவமனை மற்றும் நோயாளிகளின் விவரங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

3. நோயாளி அல்லது குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த சான்றுகளின் அடிப்படையில் ரூ.1 லட்சம் வரையிலான மெடிக்கல் அட்வான்ஸ் தொகையை உரிய அதிகாரி வழங்குவார். அந்தத் தொகை நேரடியாக மருத்துவமனையின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். தேவையின் அடிப்படையில் கோரிக்கை கொடுக்கப்பட்ட நாள் அல்லது அதற்கு அடுத்த நாட்களில் மெடிக்கல் அட்வான்ஸ் கொடுக்கப்படும். மருத்துவமனை செலவு தொடர்பான ஆவணங்கள் சமர்பிக்கத் தேவையில்லை.

Also Read:   டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா?

4. ஒரு லட்சத்துக்கும் மேலாக சிகிச்சை செலவு மதிப்பீடு இருந்தால், வருங்கால வைப்பு நிதியில் ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளின்படி இரண்டாவது அட்வான்ஸ் பரிசீலிக்கப்படும். 2வது அட்வான்ஸ் பெற வேண்டும் என்றால் கட்டாயம் சிகிச்சைக்கான மதிப்பீடு ஆவணம் அல்லது சிகிச்சை நிறைவு பெற்றதற்கான பில்கள் சமர்பிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த பில் தொகையில், ஏற்கனவே கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் கழிக்கப்பட்டு, எஞ்சிய தொகை செலுத்தப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5. ஊழியர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் நோயாளி மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 45 நாட்களுக்குள் மருத்துவ செலவு ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். கொடுக்கப்படும் பில் தொகைக்கு ஏற்ப அட்வான்ஸ் தொகையில் வருங்கால வைப்பு நிதி விதிமுறைகளின்படி மாற்றம் செய்யப்படும்.
Published by:Arun
First published: