ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை மாதம் தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு, சரியான நேரத்தில் தங்கள் வாழ்க்கை சான்றிதழை (life certificates) சமர்ப்பிப்பது முக்கியம். பொதுவாக ஜீவன் பிரமான் பத்ரா (Jeevan Pramaan Patra) என அழைக்கப்படும் தங்களின் ஆண்டு வாழ்க்கை சான்றிதழை சமர்பிப்பிக்க அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த மாத இறுதி அதாவது பிப்ரவரி 28-ஆம் தேதி காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுவாக ஜீவன் பிரமான் பத்ரா சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 தேதி ஆகும்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் அப்போது கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்ததால் அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களை நிவாரணமாக அந்த காலக்கெடு 2 முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க மத்திய அரசால் கொடுக்கப்பட்ட அவகாசம் விரைவில் முடிவடைய இருக்கிறது
. Jeevan Pramaan Patra மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்க்கை சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். இது ஓய்வூதியதாரர்களுக்காக. ஆதார் அடிப்படையில், டிஜிட்டல் முறைப்படி வழங்கப்படும் ஒரு சேவை ஆகும்.
இதையும் படிங்க.. அட இத்தனை நாள் தெரியாம போச்சே… கிரெடிட் கார்டை பயன்படுத்தி மளிகை பொருட்கள் வாங்கினால் இத்தனை சலுகையா?
முன்னதாக ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கான வாழ்க்கை சான்றிதழைப் பெற பென்ஷன் ஏஜென்சி சென்று நேரில் ஆஜராகி பெற வேண்டி இருந்தது. இந்த செயல்முறை நீண்ட மற்றும் சிக்கல் நிறைந்ததாக இருந்தது. தற்போது பயோமெட்ரிக் வசதியுடன் டிஜிட்டல் சான்றிதழ் சமர்ப்பிப்பு தொடங்கப்பட்டதும், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் அலுவலகத்துக்கு செல்லும் சிரமத்தை தவிர்த்து வருகின்றனர்.
டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் (Digital Life Certificate):
ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விரல் நுனியில் தங்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (ஜீவன் பிரமான்) உருவாக்க முடியும். டிஜிட்டல் சான்றிதழில் பயோமெட்ரிக் வசதி உள்ளதால், ஓய்வூதியம் பெறுவோர் டிஸ்பர்சிங் ஏஜென்சி அலுவலகத்திற்கு (disbursing agency's office) செல்ல வேண்டியதில்லை. ஆதார் எனேபிள்டு பயோமெட்ரிக் அங்கீகார நுட்பத்தைப் பயன்படுத்தி இதை உருவாக்க முடியும். ஓய்வூதியதாரரின் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஜீவன் பிரமான் ஆதார் பிளாட்ஃபார்மை பயன்படுத்துகிறது. ஒரு வெற்றிகரமான பயோமெட்ரிக் அங்கீகாரம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை உருவாக்குகிறது. இது லைஃப் சான்றிதழ் களஞ்சியத்தில் ஸ்டோர் செய்யப்படும். ஓய்வூதியம் வழங்கும் முகமைகள் சான்றிதழை அவர்களது வாழ்க்கை ஆன்லைனில் அணுகலாம்.
இதையும் படிங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் உருவாக்க தேவையான ஆவணங்கள்..
* ஆதார் எண்
* ஏற்கனவே இருக்கும் மொபைல் எண்
* ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சியில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்
* பயோமெட்ரிக் டிவைஸ்
* இன்டர்நெட்
ஜீவன் பிரமான் App-ல் எவ்வாறு ரிஜிஸ்டர் செய்யலாம்:
* ஓய்வூதியம் பெறுபவர் முதலில் அரசின் Jeevan Pramaan App-ஐ இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்
* புதிய யூஸராக இருப்பின் ஓய்வூதியதாரராக ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்
* ஆதார் எண், பேங்க் அக்கவுண்ட் எண், பெயர், பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் (PPO) ஆகியவற்றை என்டர் செய்யவும்
* சரிபார்ப்பு செயல்முறையை தொடங்க, Send OTP-ஐ தேர்ந்தெடுக்கவும்
* பின் OTP எண்ணை என்டர் செய்யவும்.
ஆதாரைப் பயன்படுத்தி இது அங்கீகரிக்கப்படும்
* OTP-ஐ சமர்ப்பித்த பிறகு, சரிபார்ப்பு, வெற்றிகரமாக முடிந்த பிறகு குறிப்பிட்ட ஓய்வூதியதாரர் Pramaan ID-ஐ பெறுவார்.
டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்டை உருவாக்குவது எப்படி.?
* Pramaan ID-யை பயன்படுத்திJeevan Pramaan App-ற்குள்நுழைந்து புதிய OTP-ஐ உருவாக்கும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
* ‘Generate Jeevan Pramaan’ ஆப்ஷனை கிளிக் செய்து, ஆதார் மற்றும் மொபைல் எண்களை உள்ளிடவும்
* Generate OTP ஆப்ஷனை மீண்டும் கிளிக் செய்து அதை என்டர் செய்யவும்
* PPO நம்பர், ஓய்வூதியம் பெறுபவரின் பெயர், பணம் வழங்கும் ஏஜென்சியின் பெயர் ஆகியவற்றை என்டர் செய்யவும்
* இறுதியாக ஆதார் டேட்டாவை பயன்படுத்தி ஓய்வூதியம் பெறுபவரின் கைரேகை அல்லது கருவிழியை ஸ்கேன் செய்து சரிபார்க்கப்படும்
இந்த சரிபார்ப்பு முடித்த பிறகு ஓய்வூதியதாரரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.