Home /News /explainers /

PAN card : ஆதார் நம்பர் இருந்தால் மட்டும் போதும்.. 10 நிமிடத்தில் பான் கார்டு பெறலாம் தெரியுமா?

PAN card : ஆதார் நம்பர் இருந்தால் மட்டும் போதும்.. 10 நிமிடத்தில் பான் கார்டு பெறலாம் தெரியுமா?

பான் கார்டு

பான் கார்டு

PAN card: ஆதார் அட்டை இருந்தால் e-PAN-க்கு விண்ணப்பிக்க ஆதார் நம்பரை பயன்படுத்தலாம்

    ோஉங்கள் அடையாளத்தை (identity) நிரூபிக்கவும், அரசு வழங்கும் சலுகைகளைப் பெறவும் உங்களிடம் சில முக்கிய ஆவணங்கள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த முக்கிய ஆவணங்களில் ஆதார் அட்டை, நிரந்தர கணக்கு எண் (PAN card), வாக்காளர் அடையாள அட்டை போன்றவை அடங்கும். இவை அனைத்தும் உங்களிடம் உள்ளதென்றால் எதற்கும் சிக்கல் இல்லை. அப்படி இல்லை என்றால் மேற்கண்ட இந்த அனைத்து ஐடி-க்களுக்கும் அதிகாரப்பூர்வ வெப்சைட்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

    முழு செயல்முறையையும் எளிதாக்கும் விஷயம் என்னவென்றால், உங்களிடம் ஆதார் அட்டை இருந்தால் e-PAN-க்கு விண்ணப்பிக்க ஆதார் நம்பரை பயன்படுத்தலாம். இருப்பினும், உங்களிடம் பான் கார்டு (PAN card) இல்லையென்றால் மட்டுமே இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சரியான ஆதார் அட்டையை வைத்திருப்பது அவசியம் மற்றும் உங்கள் KYC விவரங்கள் அப்டேட் செய்யப்படும்.

    ஆதார் கார்டு UIDAI-ஆல் வழங்கப்படுகிறது. இதுவருமான வரி தாக்கல் செய்தல், வங்கி கணக்கை உருவாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். பான் கார்டு (PAN Card) வருமான வரி துறையால் வழங்கப்படுகிறது. e-PAN என்பது வருமான வரி துறையால் எலெக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் வடிவத்தில் வழங்கப்படும் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட PAN Card ஆகும். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது உங்கள் PAN நம்பரை குறிப்பிடுவது கட்டாயமாகும்.

    எனவே உங்களுக்கு permanent account number எனப்படும் PAN நம்பர் இல்லை என்றால், உங்கள் ஆதார் மற்றும் உங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் உதவியுடன் உங்கள் e-PAN நம்பரை இலவசமாக கிரியேட் செய்யலாம். மேலும் e-PAN-ஐ கிரியேட் செய்வது மற்றும் இதற்கு ஆன்லைன் செயல்முறை போதுமானது மற்றும் நீங்கள் எந்த படிவத்தையும் நிரப்ப தேவையில்லை.

    இதையும் படிங்க.. நிதி மேலாண்மை முதல் முதலுதவி வரை... டீனேஜ் பிள்ளைகளுக்கு பொறுப்புணர்வு ஏன் அவசியம்?

    ஆதார் மூலம் e-PAN-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

    * முதலில் வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும் அல்லது https://www.incometax.gov.in/iec/foportal என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

    * ஹோம் பேஜில் இருக்கும் Quick Links செக்ஷனில் உள்ள 'Instant E-PAN' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

    * ஓப்பனாகும் புதிய பேஜில் காணப்படும் 'Get New e-PAN' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

    * உங்களுக்கான e-PAN ஒதுக்கீட்டை பெற நீங்கள் உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும். பின் I confirm that என்ற பாக்ஸை டிக் செய்த பிறகு, Continue பட்டனை tap செய்ய வேண்டும்.

    * இதற்கு பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆதார் OTP-யை பெறுவீர்கள். நீங்கள் தேவையான இடத்தில் இந்த OTP ஐ வழங்க வேண்டும் மற்றும் 'Validate Aadhaar OTP and Continue' பட்டனை கிளிக் செய்யவும்.

    * OTP வேலிடேஷன் பேஜில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று, Continue பட்டனை அழுத்த வேண்டும்.

    * உங்கள் OTP-ஐ டைப் செய்து பாக்ஸை சரிபார்த்து Continue பட்டனை மீண்டும் ஒருமுறை tap செய்யவும்.

    * உங்கள் இமெயில் ஐடி அங்கீகரிக்கப்படவில்லை எனில், 'Validate email ID' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் credentials-களை என்டர் செய்து Continue பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

    * உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்க்க சமர்ப்பித்தவுடன் உங்களுக்கு ஒப்புகை எண் (acknowledgment number) வழங்கப்படும்.

    * உங்கள் ஆதார் எண்ணை என்டர் செய்வதன் மூலம் உங்கள் பான் ஒதுக்கீட்டின் (PAN allotment) ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்.

    இதையும் படிங்க.. தாய்ப்பால் வங்கி என்றால் என்ன? ஏன் அவசியம்? மகப்பேறு மருத்துவர் பகிரும் தகவல்

    * உங்களுக்கான e-PAN கிடைத்த பிறகு அதை டவுன்லோட் செய்ய 2 ஸ்டெப்ஸ்களை முடிக்க வேண்டும், 'Check Status/Download PAN' ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண் மற்றும் captcha code-ஐ வழங்கவும், பின் Submit ஐகானை தட்டவும், OTP-ஐ என்டர் செய்து சரிபார்த்து ப்ராசஸை முடிக்கவும்.

    * PAN allocation வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருந்தால் PDF ஃபைல் லிங்க் 10 நிமிடங்களுக்குள் வழங்கப்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Aadhaar card, Pan card

    அடுத்த செய்தி