பான் மற்றும் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி, ஏற்கனவே முடிந்து விட்டது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இன்னும் பான் மாற்றும் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பையும் தவற விட்டால் சில விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும என மத்திய நேரடி வரிகள் வாரியமே (Central Board of Direct Taxes - CBDT) அதன் சமீபத்திய சுற்றறிக்கையில் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆதார் மற்றும் பான் எண்களை இணைக்காதவர்களுக்கு அடுத்த ஆண்டு வரை அதை செய்வதற்கான அவகாசம் கிடைக்கும், ஆனால் அதை செய்ய ரூ.1,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவுப்படுத்தி இருந்தது.
அறிக்கையின்படி, ஜூன் 30, 2022 க்குள் பான் - ஆதாரை இணைக்கத்தவர்கள் அதை செய்ய ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும். அந்த தேதிக்குள்ளும் பான் - ஆதார் நம்பர்களை இணைக்க தவறினால், அடுத்த காலக்கெடு மார்ச் 31, 2023 க்குள் ரூ.1,000 அபராதம் செலுத்தி பான் - ஆதாரை இணைக்கலாம்.ஒருவேளை, நீங்கள் இப்போதும் தவற விடும் பட்சத்தில், உங்கள் பான் கார்டு செயலிழிந்து போய்விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, ஜூன் 30 2022க்குள் நீங்கள் ஆதார் - பான் எண்ணை இணைத்தால் ரூ. 500 அபராதத்துடன் முடிந்து விடும், தவறவிட்டால் அபராதத்தொகை ரூ. 1000.
இதையும் படிங்க.. டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டதா? உடனே இதை செய்யுங்கள்!
எப்படி இணைப்பது?
நீங்கள் இரண்டு வழிகளில் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம்.வருமான வரி e-filing தளம் பயன்படுத்தி ஆன்லைனில் இணைக்கலாம் அல்லது SMS வழியாக பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
1. வருமான வரித்துறையின் அதிகாரபூர்வமான இணையத்தளத்தில், முகப்புப் பக்கத்திலேயே ‘link aadhaar’ என்பதை கிளிக் செய்யுங்கள்
2. இப்போது உங்கள் பான் எண், ஆதார் எண், உங்கள் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
3. அடுத்தது, திரையில் கொடுக்கப்பட்டிருக்கும் captcha குறியீட்டை உள்ளிடவும். பின்னர், OTP ரெக்வஸ்ட் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
4. இப்போது ‘Link Aadhar’ என்பதைக் கிளிக் செய்தால் போதும் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்படும்.
read more..PF balance check : மொத்தம் 4 வழி இருக்கு.. பிஎஃப் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்குன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!
SMS வழியாக பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் முறை:
1. உங்கள் ஆதார் எண்ணுடன்இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, UIDPAN என்று டைப் செய்து உங்கள் 12 இலக்க எண்ணை உள்ளிட்டு, பத்து இலக்க பான் எண்ணை உள்ளிடுங்கள்.
UIDPAN <12digitaadhaar> <10digitpan>
2. இந்த SMS ஐ, 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.நீங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுவிடும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.