ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

ஒமைக்ரான் அலர்ட்: பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அறிகுறிகள் என்னென்ன?

ஒமைக்ரான் அலர்ட்: பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அறிகுறிகள் என்னென்ன?

ஆழ்ந்த திசு காயம் ஏற்படும் வரை அல்லது காயம் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கும் வரை அந்த காயத்தை குணப்படுத்துவதை நாம் கவனிக்கத் தேவையில்லை.

ஆழ்ந்த திசு காயம் ஏற்படும் வரை அல்லது காயம் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கும் வரை அந்த காயத்தை குணப்படுத்துவதை நாம் கவனிக்கத் தேவையில்லை.

ஆழ்ந்த திசு காயம் ஏற்படும் வரை அல்லது காயம் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கும் வரை அந்த காயத்தை குணப்படுத்துவதை நாம் கவனிக்கத் தேவையில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து, நோய் எதிர்ப்பு சக்தி என்ற வார்த்தை நமது தினசரி உரையாடலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக்கொள்ளவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை தருகின்றனர். பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நமது நோய் எதிர்ப்பு சக்தியின் பெரும்பகுதி நேரடியாக நமது செரிமான அமைப்பின் நிலைக்கு தொடர்புடையது. நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திசுக்களில் 70 சதவீதம் நமது குடலில் அமைந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், கோடிக்கணக்கான நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளால் இது அதிகாரம் பெறுகிறது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளால் நீங்கள் அடிக்கடி அவதிப்பட்டால், இவை பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.

அடிக்கடி சளி மற்றும் இருமல்:

மூக்கு ஒழுகுதல் அல்லது அவ்வப்போது தும்மல் வருவது நமக்கு இயல்பான ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால், ஒவ்வொரு வருடமும் பெரியவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று முறை சளி அல்லது தொற்று இருப்பது இயல்பு. ஆரோக்கியமான நபர்கள் பொதுவாக ஒரு வாரத்தில் சளியிலிருந்து மீண்டுவிடுவார்கள். ஆனால், மீண்டும் மீண்டும் சளி வருவதாக இருந்தால், அவை மறைவதற்கு 10 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், தொண்டையில் தொடர்ந்து எரிச்சல் ஏற்பட்டால், உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கலாம்.

இதையும் படிங்க | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ’தக்காளி ஜூஸ்’- ஈசியா செய்யலாம்!

அடிக்கடி சோர்வு:

ஒரு நீண்ட நாளுக்குப் பிறகு சோர்வாக இருப்பது முற்றிலும் இயல்பு. ஆனால், நல்ல தூக்கத்திற்குப் பிறகும் நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்ந்தால் அது நிச்சயம் கவலையை ஏற்படுத்தும் ஒன்று. உங்கள் தூக்கப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யலாம் அல்லது இந்தப் பிரச்சனைகள் தற்காலிகமானதா என்பதைப் பார்க்க சிறிது நேரம் உங்கள் பிஸியான வேலையில் இருந்து சற்று ஓய்வு எடுக்கலாம். அப்படி இருந்தும் சோர்வு தொடர்ந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமாவதற்கான அறிகுறியாகும்.

இதையும் படிங்க | இந்த நாள் இனிய நாளா அமையணுமா? ஃபாலோ பண்ண வேண்டிய 5 விஷயங்கள்..!

காயம் குணமடைவதில் தாமதம்:

உடலில் சிறியதாக தீ காயம் அல்லது வெட்டு ஏற்பட்டால், காயங்கள் எளிதில் ஆறும். பொதுவாக, ஆழ்ந்த திசு காயம் ஏற்படும் வரை அல்லது காயம் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கும் வரை அந்த காயத்தை குணப்படுத்துவதை நாம் கவனிக்கத் தேவையில்லை. ஆனால், உங்கள் காயங்கள் குணமடைவதற்கு இயல்பை விட அதிக நேரம் எடுத்தால் அல்லது வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாட்கள் எரிச்சலாக இருந்தால், அது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியைக் குறிக்கும். இந்த தாமதத்தில் உங்கள் உடனடி கவனம் தேவைப்படும். நீரிழிவு நோய் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சனையின் முதல் அறிகுறியாக இவை இருக்கலாம்.

அடிக்கடி தொற்றுகளால் பாதிக்கப்படுவது:

பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உங்களை அடிக்கடி நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக்கும். மேலும், அவற்றிலிருந்து விடுபடுவதும் உங்களுக்கு கடினமாக இருக்கும். சைனஸ் மற்றும் காது நோய்த்தொற்றுகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் பூஞ்சை தொற்று ஆகியவை பொதுவான பிரச்சனைகள் ஆகும். உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு அவற்றின் தாக்குதலைத் தடுக்க போதுமான ஆன்டிபாடிகளை உருவாக்கத் தவறும் போது இந்த நோய்த்தொற்றுகள் பொதுவாக உங்கள் உடலில் படையெடுக்கின்றன. இந்த நோய்த்தொற்றுகள் உங்கள் உடலில் சில கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் அதை புறக்கணிக்காதீர்கள்.

Published by:Archana R
First published:

Tags: Explainer, Immunity