ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

திடீரென்று அதிகப்படியான அயோடின் மாத்திரைகளை வாங்கிக்குவிக்கும் உக்ரைன் மக்கள்... காரணம் என்ன?

திடீரென்று அதிகப்படியான அயோடின் மாத்திரைகளை வாங்கிக்குவிக்கும் உக்ரைன் மக்கள்... காரணம் என்ன?

அயோடின் மாத்திரைகள்

அயோடின் மாத்திரைகள்

கதிரியக்க அயோடின் சுவாசிப்பதன் மூலம் அல்லது அசுத்தமான உணவை உண்பதன் மூலம் உடல் உள்ளே செல்கிறது. மேலும் தைராய்டு புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] |

உக்ரேனியர்கள் அணு ஆயுத தாக்குதலால் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வரும் நிலையில், அயோடின் மாத்திரைகள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது

ரஷ்ய - உக்ரைன் போர் கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் நிலையில் எப்போது அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்ற அச்சத்தில் உக்ரைன் மக்கள் பீதியில் உள்ளனர். மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில் அணுசக்தி விபத்து ஏற்பட்டால் குடியிருப்பாளர்களுக்கு ‘பொட்டாசியம் அயோடைடு’ மாத்திரைகள் விநியோகிக்கப்படும் என்று கடந்த வாரம் கியுவ் நகர கவுன்சில் அறிவித்தது. இதனை அடுத்து அங்குள்ள மருந்தகங்களில் அயோடின் மாத்திரைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் ஏற்கனவே மாத்திரைகளை சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளன. அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் அவசர காலத்தில் குடும்பங்களுக்கு ஒரு டோஸ் வாங்க பரிந்துரைத்தது.

போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு.. ரஷ்யா திரும்பிய 108 பெண்கள்!

அயோடின் மாத்திரைகள் என்றால் என்ன? அணுசக்தி கசிவு அல்லது தாக்குதலின் போது அவர்களால் என்ன செய்ய முடியும்?

பொட்டாசியம் அயோடைடு, அல்லது KI, ஒரு வகையான கதிர்வீச்சு வெளிப்பாட்டிற்கு எதிராக குறிப்பிட்ட பாதுகாப்பை வழங்குகிறது. அணு விபத்தின் போது வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கதிரியக்க அயோடினை கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி எடுப்பதைத் தடுக்கிறது.

கதிரியக்க அயோடின் சுவாசிப்பதன் மூலம் அல்லது அசுத்தமான உணவை உண்பதன் மூலம் உடல் உள்ளே செல்கிறது. மேலும் தைராய்டு புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும். மேலும் இது பல ஆண்டுகள் உடலிலேயே நீண்ட நாட்கள் நீடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அயோடின் மாத்திரைகள் தைராய்டை அயோடினின் நிலையான பதிப்பில் நிரப்புவதன் மூலம் கதிரியக்க வகை உள்ளே செல்ல முடியாதபடி தடுக்கிறது. மாத்திரைகள் மலிவான விலையில் உலகம் முழுவதும் விற்கப்படுகின்றன. அமெரிக்கா உட்பட பல நாடுகள் அவற்றைக் குவித்து வைத்துள்ளன.ஆனால் பொட்டாசியம் அயோடைடு மற்ற வகையான கதிரியக்க பாதிப்புகளிலிருந்து பாதுகாக்காது. உடலின் மற்ற பாகங்களில் ஏற்படும் பாதிப்புகளையும் இது தடுக்காது. பொட்டாசியம் அயோடைடு சில அணுசக்தி அவசரநிலைகளில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.முன்கூட்டியே ஒரு தடுப்பு நடவடிக்கையாக எடுக்கப்படக்கூடாது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இது.

குளிர்கால காற்றுமாசைக் குறைக்க மாற்று வழி கண்டுபிடித்த ஐஐடி ஆய்வாளர்கள்!

அணுசக்தி பேரழிவு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அச்சுறுத்தல்கள் மட்டும் அணுசக்தி பேரழிவு பற்றிய அச்சத்தை தூண்டவில்லை. சபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டுகள் பற்றிய கவலைகள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளன. அவை உருகும் அபாயத்தை அதிகரித்துள்ளன. போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய துருப்புக்கள் ஆலையை ஆக்கிரமித்ததிலிருந்து அணுசக்தி பேரழிவு குறித்த அச்சங்கள் அதிகம் உள்ளன.

1986 இல் செர்னோபில் பேரழிவு, 2011 இல் சுனாமி தாக்கியபோது ஜப்பானில் உள்ள புகுஷிமா ஆலையில் ஏற்பட இருந்த அணு உலை பேரழிவை தடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அணு உலை மூடல்கள், அதன் வெப்பத்தை தணித்து அதிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைக்கும் என்று கற்றுக் கொடுத்தது. இதனால் உக்ரைனிலும் தற்போது அணு உலைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அதன் மீதான தாக்குதல் மற்றும் பேரழிவு பயத்தால் அயோடின் மாத்திரைகள் சேகரிப்பு என்பது அதிகரித்து வருகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Iodine Salt, Nuclear, Russia - Ukraine