Explainer: ட்விட்டருக்கு தடை விதித்த கையோடு இந்திய செயலி "koo" -உடன் கைகோர்க்கும் நைஜீரியா : பின்னணி என்ன?

இந்திய செயலி "koo"

அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த சோசியல் நெட்ஒர்க், சமீபத்தில் நைஜீரிய அதிபர் முகமது புஹாரியின் டீவீட்டை நீக்கியது.

  • Share this:
அமெரிக்க மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை காலவரையின்றி தடை செய்யப்படுவதாக அறிவித்த ஒரு வாரத்திற்குள், இந்தியாவில் அதற்கு மாற்றாக வெளியான koo செயலியுடன் நைஜீரிய அரசாங்கம் இணைந்துள்ளது.

ட்விட்டர் தடைக்குப் பின்னர், koo செயலி நைஜீரியாவில் பயன்பாட்டிற்கு கிடைப்பதாக அறிவிப்பு வெளியான பிறகு, அந்நாட்டின் உள்ளூர் மொழிகளை தனது தளத்தில் சேர்க்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நைஜீரியா அரசாங்கம் ட்விட்டருக்கு ஏன் தடை விதித்தது?

நைஜீரியாவில் ட்விட்டரை காலவரையின்றி நிறுத்த முடிவு செய்ததற்கு காரணம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த சோசியல் நெட்ஒர்க், சமீபத்தில் நைஜீரிய அதிபர் முகமது புஹாரியின் டீவீட்டை நீக்கியது. விதிகளை மீறியதற்காக அந்த ட்வீட்டை நீக்கியாக நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது அந்நாட்டில் கடந்த 1967 முதல் 1970 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் சுமார் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். இன்றளவும் கூட பல்வேறு குழுக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன.

ALSO READ | கோவிட் வைரஸ் எச்சரிப்பது என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது!

இதுகுறித்து நைஜீரியா அதிபர் முகமது புஹாரி தனது டிவீட்டில் கூறியிருந்ததாவது, "அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசை எதிர்ப்பவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியிலேயே பதில் அளிக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நைஜீரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போரை தூண்டும் வகையில் அதிபர் முகமது புஹாரியின் கருத்து இருப்பதாக குற்றம்சாட்டிய ட்விட்டர் நிர்வாகம், அவரது பதிவை நீக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, வன்முறை விளைவுகளை ஏற்படுத்தும் போலி செய்திகளை பரப்புவதன் மூலம் நைஜீரியாவின் பெருநிறுவன இருப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்த மைக்ரோ பிளாக்கிங் தளம் பயன்படுத்தப்படுவதாக நைஜீரிய அரசாங்கம் குற்றம் சாட்டியது. இதுவே, ட்விட்டர் அங்கு தடை செய்யப்பட்டதற்கு மூலகாரணமாகும்.

ALSO READ | உயிர் வாழ முடியாத கிரகமாக வீனஸ் மாறியது ஏன் - ஆராய்ச்சிக்காக இரு மிஷன்களை திட்டமிட்டுள்ள நாசா!

தடைக்கு பிறகு ட்விட்டரின் ரியாக்சன்:

பேச்சு சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறியதற்காக ட்விட்டர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த சில பிரிவுகளும் நைஜீரியாவிற்குள் இருந்தன. மேலும் இது குறித்து ட்விட்டர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.

இலவச மற்றும் ஓபன் இன்டர்நெட்டுக்கான அணுகல் நவீன சமூகத்தில் இன்றியமையாத மனித உரிமை ஆகும். நைஜீரியாவில் ட்விட்டரை நம்பியுள்ள அனைவரும் விரைவில் உலகத்துடன் இணைவதற்கும் தொடர்புகொள்வதற்கும் தேவையான அணுகலை மீட்டெடுப்போம். ” என்று கூறியுள்ளது.

ALSO READ | கற்பூரம், ஓமம் ஆகியவற்றை நுகர்வதால் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்குமா? மருத்துவர்களின் பதில்

ஏற்கனவே, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிறுவனத்தால் முடக்கம் செய்யப்பட்டது. தற்போது ட்விட்டரை தடை செய்த நைஜீரியாவை பலரும் வாழ்த்தியதுடன், பிற நாடுகளும் அவ்வாறு செய்ய வேண்டும் என ட்ரம்ப் ஆதரவாளர்கள் குரல் உயர்த்தி வருகின்றனர்.

சுதந்திரமான மற்றும் மனம் திறந்த பேச்சை அனுமதிக்காததற்காக பெரும்பாலான நாடுகள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை தடை செய்ய வேண்டும் என்றும் அனைவரின் குரல்களும் கேட்கப்பட வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்திய செயலி koo-வுக்கு கிடைத்த வாய்ப்பு:

இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட koo செயலி தற்போது, நைஜீரியாவிலும் தனது நிலையை வழிபடுத்தப்போகிறது. அந்நாட்டில் ட்விட்டரை தடை செய்த பிறகு அதற்கு மாற்று செயலியை தேடி வந்த அரசாங்கம் koo செயலியுடன் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் கூட, ட்விட்டருடன் இந்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பல கருத்து வேறுபாடுகளின் காரணமாக koo செயலி வந்தது.

கடந்த ஆறு மாதங்களாக, பல ட்வீட்களை அகற்றவும், சட்டவிரோதமானது எனக் கருதப்படும் கணக்குகளை முடக்கவும் ட்விட்டரை மத்திய அரசு கேட்டு வந்தது. மத்திய அரசின் இந்த கோரிக்கைகளுக்கு ட்விட்டர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இணங்கவில்லை. இதுவே இரு தரப்பினருக்கும் இடையிலான உராய்வுக்கு வழிவகுத்தது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, டிஜிட்டல் மீடியா இடைத்தரகர்களுக்கான இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ட்விட்டர் இன்னும் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.

ALSO READ | சமையல் எண்ணெய்களின் விலை உயர காரணம் என்ன.? விலையை கட்டுப்படுத்த அரசு என்ன செய்யலாம்

நைஜீரிய அரசாங்கத்தின் வருகையை அறிவிக்கும் வகையில் கூவின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அப்ரமேயா ராதாகிருஷ்ணா தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்ததாவது, “ Kooindia செயலியில் நைஜீரிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வருகைக்கு அன்பான வரவேற்பு! இப்போது இந்தியாவுக்கு அப்பால் எங்கள் இறக்கைகள் விரிகின்றன ” என்று தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published: