ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

ஒளிமாசு இல்லாத டார்க் ஸ்கை தேசமாகும் நியூசிலாந்து.... அப்படியென்றால் என்ன?

ஒளிமாசு இல்லாத டார்க் ஸ்கை தேசமாகும் நியூசிலாந்து.... அப்படியென்றால் என்ன?

நட்சத்திர வானம்

நட்சத்திர வானம்

இரவில் நகரத்தில் உள்ள வெளிச்சத்திற்கு மத்தியில் நட்சத்திரங்களைக் காண முடியாது. அதுவே ஒளி இல்லாத இடத்தில் இருந்து பார்த்தால் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் ஒளிரும். இது தான் ஒளிமாசின் எளிய அளவுகோல்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மனிதனை பாதிக்கத் தொடங்கிய பின்னர் தான் உலகம் காற்று மாசு, கடல்மாசு என்று கவனம் செலுத்தி வருகிறது. காற்றும் நீரும் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது என்ற நிலை வந்து அவசர அவசரமாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்கச் செய்துள்ளது.

இதன் பின்னால் ஒளிந்திருக்கும் ஒளி மாசுபாட்டை இதுவரை எந்த உலக அமைப்பும்  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுவும் ஒரு நாள் பூதமாய் வியாபிக்கும் போது தான் ஓடப்போகிறோம். ஆனால் இரண்டு நாடுகள் அதையும் கருத்தில் கொண்டு செயல்பட தொடங்கிவிட்டது.

ஒளிமாசு என்றால் என்ன?

மின்சாரம் கண்டு பிடிக்கும் முன்னர் பூமியில் வாழ்ந்த அனைத்து உயிர்களுக்கும் சூரியன் மட்டும் தான் ஒளிதரும் விளக்கு. சூரிய உதயம் தொடங்கி சூரியன் மறையும் வரை தான் மனிதனின் வேலைகள் நடக்கும். அதன் பின்னர் ஒரு இடத்தில் தங்கி தூங்கி விடுவான்.

மின்சாரம் கண்டுபிடித்த பின்னர் பகலையே மிஞ்சும் அளவுக்கு மின்விளக்குகள் இரவை ஒளிர்விக்கின்றன. அளவுக்கு அதிகமாக வீசும் எந்த செயற்கை ஒளியும் ஒளி மாசு தான். இதுவரை ஒளி மாசுபாடு உலகின் 80 சதவீதத்தை பாதித்துள்ளது.

இதையும் படிங்க : 'மைனர் என்றாலும் உண்மையான காதல் குற்றமல்ல' - போக்சோ வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

இது கண் பார்வை, தோல் வியாதி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இரவில் நகரத்தில் உள்ள வெளிச்சத்திற்கு மத்தியில் நட்சத்திரங்களைக் காண முடியாது. அதுவே ஒளி இல்லாத இடத்தில் இருந்து பார்த்தால் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் ஒளிரும். இது தான் ஒளிமாசின் எளிய அளவுகோல்.

டார்க் ஸ்கை தேசம்

ஒளி மாசை கட்டுப்படுத்த, இரவில் பயன்படுத்தும் ஒளிவிளக்குகளை குறைத்து நட்சத்திரங்கள் நிறைந்த இரவுகளை காணும் அளவுக்கு பாதுகாக்கப்பட்ட இரவு நேர சூழலைக் கொண்ட நிலமாக வைத்திருப்போம் என்று உறுதி பூண்டு நடைமுறை படுத்தும் நாடுகளே டார்க் ஸ்கை தேசம் அல்லது இருண்ட வான நாடு என்று அழைக்கப்படுகிறது.

2020 இல் பசிபிக் தீவான நியுவே இதை முதலில் நடைமுறைப்படுத்தி சர்வதேச இருண்ட வான இடமாக மாறிய உலகின் முதல் நாடானது. சர்வதேச டார்க் ஸ்கை சரணாலயம் மற்றும் சர்வதேச டார்க் ஸ்கை சமூகம் என சர்வதேச டார்க்-ஸ்கை அசோசியேஷன் (ஐடிஏ) இலிருந்து முறையான அங்கீகாரத்தைப் பெற்றது.

இதையும் படிங்க: 800 கோடியை எட்டப்போகும் மக்கள் தொகை... 1950ல் இருந்து கடந்துவந்த பாதை

அதைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்து இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. விரைவில் உலகின் இரண்டாவது டார்க் ஸ்கை தேசமாகவும் மாற உள்ளது. இதுவரை உலகில் 115 இருண்ட வானம் பூங்காக்கள், 16 இருண்ட வானம் சரணாலயங்கள் மற்றும் 20 இருண்ட வான இடங்கள் மட்டுமே உள்ளன.

​​நியூசிலாந்து நாட்டின் பழங்குடி மவோரி மக்கள் இருண்ட வானம் பாதுகாப்பின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதன் மூலம் இந்த சாதனையை அடைவதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் அவை மரமடகாவை (சந்திர நாட்காட்டி) பின்பற்றும் மாவோரி மக்களுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. நம் ஊரில் சூரியனை பார்த்து விவசாயம் செய்வது போல் அவர்கள் சந்திரனின் நிலையை வைத்தே செய்கின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: New Zealand, Pollution