Explainer: பிரிட்டனில் முந்தைய கொரோனாவை விட தற்போதைய உருமாறிய கொரோனா 30 முதல் 100% அதிக ஆபாத்தானது!

Explainer: பிரிட்டனில் முந்தைய கொரோனாவை விட தற்போதைய உருமாறிய கொரோனா 30 முதல் 100% அதிக ஆபாத்தானது!

கோப்புப் படம்

இது முந்தைய கொரோனா விகாரங்களை விட 30% முதல் 100% வரை ஆபத்தானது என்று புதிய பகுப்பாய்வு விளக்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் SARS-CoV-2 இன் 'யுகே வேரியன்ட்' என அழைக்கப்படுகிறது. இது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் பரவியபோது கண்டுபிடிக்கப்பட்டு, உலகெங்கும் பரவுவதற்கு முன்பு கடந்த ஆண்டு இங்கிலாந்து முழுவதும் பரவியது. இது முந்தைய கொரோனா விகாரங்களை விட 30% முதல் 100% வரை ஆபத்தானது என்று புதிய பகுப்பாய்வு விளக்கியுள்ளது.

எக்ஸிடெர் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகங்களைச் (Universities of Exeter and Bristol) சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர்கள் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களிடையேயும் பிற விகாரங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் இறப்பு விகிதங்களை ஒப்பிட்டனர். புதிய வகை கொரோனா வைரஸ் B.1.1.7- ஆல் பாதிக்கப்பட்ட 54,906 நோயாளிகளில் 227 பேர் உயிரிழந்திருந்தனர். இது முந்தைய விகாரங்களைக் கொண்டிருந்த அதே எண்ணிக்கையில் நெருக்கமாக பொருந்திய நோயாளிகளில் 141 உயிரிழப்புகளோடு ஒப்பிடும்போது மிக அதிகம். அதாவது, முந்தைய கொரோனா வைரஸால் ஏற்பட்ட இறப்புகளை விட புதிய மாறுபாட்டால் இறப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளன.

முன்னணி எழுத்தாளர் ராபர்ட் சாலனை மேற்கோள் காட்டி எக்ஸிடெர் பல்கலைக்கழகம் கூறியதாவது," சமூகத்தில், கொரோனா வைரஸால் மரணம் என்பது இன்னும் ஒரு அரிய நிகழ்வுதான். ஆனால் B.1.1.7 என்ற உருமாறிய வைரஸ் ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. விரைவாக பரவுவதற்கான அதன் திறனுடன் இணைந்து, இது B.1.1.7 ஐ அச்சுறுத்தலாக மாற்றுகிறது. இதனை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த கென்ட் மாறுபாடு, 2020 செப்டம்பரில் இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. விரைவாக பரவுவதற்கு எளிதானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி முதல் இங்கிலாந்து முழுவதும் புதிய ஊரடங்கு விதிகளை அறிமுகப்படுத்தியதன் பின்னணி காரணமாக இந்த புதிய வகை இருந்தது. கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் N501Y, D614G, A570D, P681H, H69 / V70 நீக்குதல் மற்றும் Y144 நீக்குதல் உள்ளிட்ட பல பிறழ்வுகளை இந்த மாறுபாடு கொண்டுள்ளது. புதிய ஆய்வானது, இந்த வைரஸின் விகாரம் குறைந்த ஆபத்துள்ளதாகவே இருக்கும் என்று முன்னர் நினைத்திருந்தபோது, இதன் வீரியம் காரணமாக அதிகமான மக்கள் புதிய மாறுபாட்டு பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் மூத்த எழுத்தாளர் லியோன் டானன் கூறியதாவது, “ 2020 நவம்பர் முதல் 2021 ஜனவரி மாதம் வரை நிகழ்ந்த பாதிப்புகள் குறித்து எங்கள் பகுப்பாய்வை மையப்படுத்தினோம். அந்த சமயங்களில் இங்கிலாந்தில் பழைய மாறுபாடுகள் மற்றும் புதிய மாறுபாட்டின் பாதிப்புகள் என இரண்டுமே இருந்தன. இதன் பொருள் எங்களால் இரு பாதிப்புகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்க்க முடிந்தது. பிற சார்புகளின் தாக்கத்தை குறைக்கவும் முடிந்தது. அடுத்தடுத்த பகுப்பாய்வுகள் எங்கள் முடிவுகளை உறுதிப்படுத்தியுள்ளன" என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது, “SARS-CoV-2 விரைவாக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒன்றாக தெரிகிறது.

Also read... கொரோனா வைரஸ் தடுப்பூசி: COVID-19 தடுப்பூசி ஆண்களை விட பெண்களுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்... காரணம் இங்கே...!

மேலும் தடுப்பூசிகளுக்கு எதிராக மற்ற வகைகள் மேலும் எழும் என்பதில் ஒரு உண்மையான கவலை உள்ளது. புதிய மாறுபாடுகள் எழும்போது அவற்றைக் கண்காணித்தல், அவற்றின் குணாதிசயங்களை அளவிடுதல் மற்றும் சரியான முறையில் செயல்படுவது ஆகியவை எதிர்காலத்தில் பொது சுகாதார வேலைகளின் முக்கிய பகுதியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எல்லன் ப்ரூக்ஸ்-பொல்லாக் கூறியதாவது," வழக்கமான சோதனையால் மூடப்பட்ட மரபணுவின் ஒரு பகுதியில் இந்த பிறழ்வு நிகழ்ந்தது அதிர்ஷ்டம்.

எதிர்காலத்தில் வேறுசில பிறழ்வுகள் எழலாம் மற்றும் அவை சரிபார்க்கப்படாமல் பரவக்கூடும் ” என்று எச்சரித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புதிய மாறுபாடு ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய ஆய்வு அரசாங்கங்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் மாறுபாடு பரவுவதைத் தடுக்க முக்கியமான தகவல்களை வழங்குகிறது என்று எக்ஸிடெர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: