Home /News /explainers /

ஜனவரி 1 முதல் டெபிட், கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் - என்ன அது? விரிவான விளக்கம்

ஜனவரி 1 முதல் டெபிட், கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் - என்ன அது? விரிவான விளக்கம்

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டோக்கனைசேஷன் என்றால் என்ன, அது ஆன்லைன் பரிவர்த்தனைகளை எவ்வாறு பாதுகாப்பாக மாற்றுகிறது என்று இங்கே பார்க்கலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளை தவிர்க்கவும், கிரெடிட் மட்டும் டெபிட் கார்டு பயன்பாடுகளை பாதுகாப்பானதாக மாற்றவும் அவ்வப்போது ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டோக்கனைசேஷன் என்றால் என்ன, அது ஆன்லைன் பரிவர்த்தனைகளை எவ்வாறு பாதுகாப்பாக மாற்றுகிறது என்று இங்கே பார்க்கலாம்.

கார்டு விவரங்கள் நீக்க வேண்டும் :

பொதுவாக பேமெண்ட் கேட்வே என்பது வங்கி அல்லாத நீங்கள் வாங்கும் இணையதளம் அல்லாத, மூன்றாம் தரப்பு தளம் அல்லது செயலி ஆகும். டோக்கனைசேஷனை அறிமுகப்படுத்துவதன் மூலம், இனி நீங்கள் மூன்றாம் தரப்பினருடன் உங்கள் கார்டு விவரங்களை பகிர வேண்டாம். இதற்காக, அனைத்து வங்கிகளுக்கும், ஆன்லைன் வர்த்தகர்களுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை அறிவித்துள்ளது.

இணையதளங்களில், e-commerce தளங்களில் மற்றும் பல்வேறு ஆப்ஸ்களில் நாம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தும் போது, கார்டின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஒன்-கிளிக் பேமெண்ட் போல, நீங்கள் ஆன்லைனில் ஏதாவது வாங்க முயற்சித்தால், முன்கூட்டியே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தகவலைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை எளிதாக குறைந்த நேரத்தில் மேற்கொள்ள முடியும்.

ALSO READ | போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் தொடங்குவது ஏன் முக்கியம் தெரியுமா?

ஆனால், இனி கார்டு விவரங்களை வர்த்தகர்கள் மற்றும் பேமெண்ட் கேட்வெக்கல் சேமித்து வைக்கக் கூடாது, நீக்கி விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்த விதி ஜனவரி 1 முதல் ஆன்லைன் பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை அனுமதிக்கும் அனைத்து மெர்ச்சண்ட்களுக்கும் பொருந்தும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

டோக்கனைசேஷன் எவ்வாறு செயல்படுகிறது?

வழக்கமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது, பணம் செலுத்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் விவரங்களை உள்ளிடுகிறோம். இந்த விவரங்கள் இது நாள் வரை அந்தந்த டேட்டாபேசில் சேமிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கார்டு விவரங்களை நீக்க உத்தரவு வந்துள்ள நிலையில், ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு டோக்கன் எண் வழக்கப்படும். அதன் படி, உங்கள் கார்டு விவரம் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். கார்டு எண், CVV உள்ளிட்ட எந்த விவரமும் மூன்றாம் தரப்பு அமைப்பு அல்லது செயலிகளுக்குத் தெரிய வராது. உங்கள் கார்டுக்கு பதிலாக, உங்கள் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் டோக்கன் எண்ணை உள்ளிட்டால் போதும்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிக்கை :

ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் 2020 மாதம் ரிசர்வ் வங்கியால் டோக்கனைசேஷன் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல வங்கிகளும் இதை உடனே அமல்படுத்த தயாராகவில்லை.

ALSO READ | SBI நகைக்கடனில் இவர்களுக்கு மட்டும் இத்தனை சலுகைகள்! ஏன் தெரியுமா?

வரும் ஜனவரி 1ம் தேதியிலிருந்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வழங்கும் வங்கி அல்லது, கார்டு வழங்கும் நெட்வொர்க் நிறுவனம் தவிர்த்து, வேறு எந்த செயலியும், தளமும், அமைப்பும் கார்டுகளின் விவரங்களை சேமிக்க முடியாது. அதுமட்டுமின்றி, இந்த விதிமுறைகளை பற்றிய அறிக்கையை எல்லா வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டு உள்ளது அதன்படி அனைத்து வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்து வருகிறது.

வரும் ஜனவரி 1 முதல், உங்கள் கார்டு விவரங்கள் எந்த தளத்திலும் சேமிக்கப்படாது. எனவே நீங்கள் ஒவ்வொரு முறை கார்டு பயன்படுத்தி பரிவர்த்தனை மேற்கொள்ளும் போதும் உங்கள் காரின் முழு விவரங்களை வெளியிட வேண்டும் அல்லது நீங்கள் டோக்கன் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் என்று தனது வாடிக்கையாளர்களுக்கு HDFC வங்கி மெசேஜ் வழியாக தெரிவித்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: RBI, Reserve Bank of India

அடுத்த செய்தி