• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • National Statistics Day 2021: தேசிய புள்ளியல் நாள் 2021 - முக்கியத்துவமும், பின்னணியும்!

National Statistics Day 2021: தேசிய புள்ளியல் நாள் 2021 - முக்கியத்துவமும், பின்னணியும்!

பேராசிரியர் மஹாலனோபிஸ்

பேராசிரியர் மஹாலனோபிஸ்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்வதிலும் புள்ளியல் துறையின் பங்கின் அவசியத்தை உணர்த்தியவர் பேராசிரியர் மஹாலனோபிஸ்.

  • Share this:
ஆண்டுதோறும் தேசிய புள்ளியல் நாள் ஜூன் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்திய புள்ளியல் துறையை உருவாக்கி மாபெரும் பங்களிப்பை வழங்கிய பேராசிரியர் பிரசந்தா சந்திரா மஹாலனோபிஸின் பங்களிப்பை நினைவுகூறும் விதமாக, 2006ம் ஆண்டு அவரது பிறந்தநாளை தேசிய புள்ளியல் நாளாக ஒன்றிய அரசு அறிவித்தது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்வதிலும் புள்ளியல் துறையின் பங்கின் அவசியத்தை உணர்த்தியவர் பேராசிரியர் மஹாலனோபிஸ். இவர் 1893 ஆம் ஆண்டு ஜூன் 29ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

அவரின் 128வது பிறந்தநாளை இந்த ஆண்டு தேசிய புள்ளியல் தினத்தில் கொண்டாடப்படுகிறது. சமூக மற்றும் பொருளாதாரத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களிடையே நிலவும் வேறுபாடுகளை துல்லியமாக அறிவதில் புள்ளியல் துறை பங்கை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய அவருக்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருது கொடுத்து கவுரவித்துள்ளது. திட்டக் கமிஷன் உருவாவதில் முக்கியப் பங்காற்றிய அவர், 1955 முதல் 1967 ஆம் ஆண்டு வரை அதன் உறுப்பினராகவும் இருந்து, நாட்டின் தொழில்மயமாக்கலுக்கு வித்திட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேசிய புள்ளியல் நாள் 2021 :

ஆண்டுதோறும் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் தேசிய புள்ளியல் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப மையக்கருத்து தேர்தெடுக்கப்படும். அந்தவகையில் கடந்த ஆண்டு, அதாவது தேசிய புள்ளியல் நாள் 2020 -ல் நீடித்த வளர்ச்சி இலக்கு 3 (ஆரோக்கியமான வாழ்கை மற்றும் அனைத்து வயதினருக்குமான வாழ்வை மேம்படுத்துதல்) என்ற மையக்கருத்தும், நீடித்த வளர்ச்சி 5 (பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அதிகாரத்தை நிலைநாட்டுதல்) என்ற மையக்கருத்தையும் அடிப்படையாக கொண்டு கடைபிடிக்கப்பட்டது. இதேபோல், இந்த ஆண்டுக்கான மையக்கருத்தை மத்திய அரசு வெளியிடும்.

தேசிய புள்ளியல் நாளைப் பொறுத்தவரையில் அனைத்து தரப்பு மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. கல்வி மற்றும் கற்பித்தல் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை நெறிபடுத்துதலில் புள்ளியல் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்படுகிறது. சமூகத்துக்கு சீரிய பங்களிப்பை வழங்குபவர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் தேசிய புள்ளியல் நாளில் மத்திய அரசு சார்பில் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

திட்டங்கள் தொடர்பாக சேகரிக்கப்படும் தரவுகள், அவை மக்களிடையே சென்று சேரும் வேகம் மற்றும் விகிதங்களை புள்ளியல் தரவுகள் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டும். கவனம் செலுத்த வேண்டிய துறைகள், திட்டங்கள் மற்றும் தடைகள் குறித்து புள்ளியல் தரவுகளில் எளிதாக அடையாளம் காண முடியும். உலக புள்ளியல் நாள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Also read... International Day of the Seafarer 2021: சர்வதேச மாலுமிகள் தினம் 2021 - இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

தேசிய புள்ளியல் நாள் கொண்டாட்டம் :

தேசிய புள்ளியல் நாளில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு புள்ளியல்துறை ஆற்றும் பங்களிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்திய புள்ளியல் துறையை உருவாக்கிய பேராசிரியர் மஹாலனோபிஸின் பங்களிப்பு நினைவுகூறப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய புள்ளியல் நாள் கொரோனா காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லியில் உள்ள நிதி அயோக் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் ஒன்றிய புள்ளியல் துறை இணை அமைச்சர் இந்தர்ஜித் சிங், தேசிய புள்ளியல் இயக்குநரகத்தின் சேர்மேன் பேராசிரியர் பிமல் குமார் ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: