• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • National Doctors Day: தேசிய மருத்துவர்கள் தினம் 2021: இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

National Doctors Day: தேசிய மருத்துவர்கள் தினம் 2021: இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

தேசிய மருத்துவர்கள் தினம் 2021

தேசிய மருத்துவர்கள் தினம் 2021

வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1ம் தேதி இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) சார்பில் "தேசிய மருத்துவர்கள் தினம்" கொண்டாடுகிறது. வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து வரும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் தினம் உலகம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேசிய மருத்துவர்கள் தினத்தின் வரலாறு :

மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் பெரும் பங்களிப்புடன் இருந்த வங்காளத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சி.ராய் நினைவாக 1991ம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாங்கிப்பூரில் 1882-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர், பிதான் சந்திர ராய். இவர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அதுவும் ஒரே சமயத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எம்.ஆர்.சி.எஸ். ஆகிய படிப்புகளை, இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்களில் படித்து சாதனை படைத்தவர். பிதான் சந்திர ராய் சிறந்த மருத்துவராக புகழ் பெற்றவராக இருந்தார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது முதல்- அமைச்சராக பணியாற்றியவர். 1948ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை, 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்தார். இவருக்கு பிப்ரவரி 4, 1961 அன்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 80 ஆண்டு காலம் இந்த மண்ணுலகில் வாழ்ந்த பிதான் சந்திர ராய், தன்னுடைய பிறந்த தினத்திலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதவ்பூர் டி.பி. போன்ற மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதான், கமலா நேரு நினைவு மருத்துவமனை, விக்டோரியா நிறுவனம் (கல்லூரி), சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சித்தரஞ்சன் சேவா சதான் ஆகியவற்றை நிறுவுவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். இந்திய மருத்துவக் கண்டத்தின் முதல் மருத்துவ ஆலோசகர் என்றும் பிதான் சந்திர ராய் அழைக்கப்பட்டார். இவரது நினைவாக ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

Also read... International Day of Parliamentarism: சர்வதேச நாடாளுமன்ற தினம் இன்று... அரசாள நாடாளுமன்றம் தோற்றுவிக்கப்பட்டதன் வரலாறும் முக்கியத்துவமும்!

தேசிய மருத்துவர்கள் தினத்தின் முக்கியத்துவம் :

தேசிய மருத்துவர் தினம் என்பது மருத்துவர்களின் பங்கு மற்றும் சேவை செய்வதில் உள்ள பொறுப்புகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிப்பிடவும், அவர்களின் செயல்பாடுகளையும், கடமைகளையும் அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. கோவிட் -19 பரவலுக்கு மத்தியில் மருத்துவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பு பற்றி சிந்திப்பதற்கு பதிலாக, அவர்கள் தேசத்திற்கு சேவை செய்வதில் முழு கவனம் செலுத்துகின்றனர். நெருக்கடியின் நேரத்தில் அவர்கள் தொடர்ந்து அயராது உழைத்தார்கள் என்பதை நினைவுகூறும் வகையில் இன்று நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள், மரியாதைகள் செலுத்தப்பட்டு வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: