Home /News /explainers /

2 வது பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறலாம்.. எப்படி? முழு விபரம்!

2 வது பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறலாம்.. எப்படி? முழு விபரம்!

கர்ப்பிணி உதவித்தொகை

கர்ப்பிணி உதவித்தொகை

2வது பெண் குழந்தை திட்டத்தில் உதவித்தொகை முழுத்தொகையாக குழந்தை பிறந்த பின்னரே வழங்கப்படும்

    இனி வரும் காலங்களில் 2வது பெண் குழந்தை பிறந்தாலும் பெண்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். இந்த புதிய அறிவிப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுக் குறித்த முழு விவரங்கள் இதோ..

    கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எதிர் கொள்ளும் பொருளாதார சிக்கல்கள், உணவு பற்றாக்குறை, பாலினம் அறிதல் போன்ற பல காரணங்களுக்காக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. மத்திய அரசு சார்ப்பில் முதல் பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு "பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா" என்ற திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்குதல் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை அளித்தல் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க.. PM-Kisan: வருஷத்துக்கு ரூ. 6000 கிடைக்கனும்னா இதை கட்டாயம் செய்யனும்!

    இந்த "பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்தாலும் இனி உதவித்தொகை பெற முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.. இதற்கான திட்டம் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மாத்ரு வந்தன யோஜனா திட்டத்தில் 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் உதவித்தொகையாக ரூ. 5000 பெறுவார்கள்
    கூடவே மருத்துவ வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகின்றன. குழந்தை பெற்றெடுத்த பாலூட்டும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெறலாம். இந்நிலையில், 2வது பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களும் இனி இந்த சலுகைகளை பெற முடியும். இந்த அறிவிப்பை கடந்த வருடம் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டு இருந்தார்.

    இதையும் படிங்க..நீண்ட காலமாக எதிர்பார்த்த வசதி.. போஸ்ட் ஆபீஸ் சேவிங்க்ஸில் வருகிறது தெரியுமா?

    இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.அதே நேரம் சின்ன திருத்தங்களும் செய்யப்படவுள்ளன. அதாவது முதல் குழந்தைக்கு உதவித்தொகை 2 தவணைகளாக வழங்கப்படும் ஆனால் 2வது பெண் குழந்தை திட்டத்தில் உதவித்தொகை முழுத்தொகையாக குழந்தை பிறந்த பின்னரே வழங்கப்படும். இந்த அறிவிப்பு வெளியான போதே பெண்கள் பலரும் இதை வரவேற்று இருந்தனர். இறுதியில் இந்த திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, Savings, Selvamagal Scheme

    அடுத்த செய்தி