Explainer : மகப்பேறு சட்டம் 1961 சொல்வது என்ன? மகளிர் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?
மாதிரி படம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் பணியிலிருந்து நீக்குவதை அல்லது வெளியேற்றப்படுவதை மகப்பேறு சட்டம் தடுக்கிறது. மகப்பேறு காலத்தில் வெளியேற்றப்பட்டாலும் மகப்பேறு கால நன்மைகள் மற்றும் மருத்துவ சலுகைக்களை மகளிர் கோர முடியும்.
இந்திய மகப்பேறு உதவிச் சட்டம் 1961-இன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வார காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதனை 2016 ஆம் ஆண்டு திருத்திய மத்திய அரசு மகப்பேறு காலத்தை 26 வாரங்களாக உயர்த்தியது. அதற்குப் பிறகும் உடல்நலப் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரின் சான்றிதழோடு கூடுதலாக 12 வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சலுகைகளை அனைத்தும் முதல் 2 குழந்தைகளுக்கு பொருந்தும். மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி உரிமை தாய் என அழைக்கப்படும் வாடகை தாய், மற்றும் குழந்தைகளை தத்தெடுப்போருக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.
மகப்பேறு விடுப்புக்கான தகுதி
பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அமைப்பு சார்ந்த தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், சுரங்க பணியாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். மகப்பேறு கால விடுப்புக்கு விண்ணப்பிக்கும் மகளிர் 12 மாதங்களுக்கு முன்பு எந்த தேதியில் நிறுவனத்தின் சேர்ந்திருந்தாலும், மகப்பேறு கால விடுப்பு எடுக்க மகளிருக்கு உரிமை உண்டு.
மகப்பேறுகால சலுகைகள்
மகப்பேறு கால சலுகைகளை பெறுவதற்கு, வேலை செய்யும் நிறுவனத்தில் ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 80 வேலை நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது 80 சேவை நாட்களாவது இருக்க வேண்டும்.
கருச்சிதைவு தொடர்பான விதி என்ன? இயற்கையான கருச்சிதைவுக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கும் போது, பணியாளர் 42 நாட்கள் ஊதியம் பெற்ற மகப்பேறு விடுப்புக்கு உரிமை உள்ளதா?
சட்டத்தின் 6, 9 மற்றும் 10 பிரிவுகளின் விதிமுறைகளை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, சட்டப் பிரிவு 6 -ன்படி, பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பான 26 வார விடுமுறையை கோருவதற்கு உரிமை உண்டு. பிரசவ தேதிக்கு முன்னதாக 8 வாரங்களுக்கு மிகாமல் விடுமுறை எடுத்திருத்தல் வேண்டும்.
கர்ப்ப காலத்தில் வேலைவாய்ப்பிலிருந்து வெளியேற்றப்படுவது தொடர்பான விதிகள் யாவை?
கர்ப்ப காலத்தில் பெண்கள் பணியிலிருந்து நீக்குவதை அல்லது வெளியேற்றப்படுவதை மகப்பேறு சட்டம் தடுக்கிறது. மகப்பேறு காலத்தில் வெளியேற்றப்பட்டாலும் மகப்பேறு கால நன்மைகள் மற்றும் மருத்துவ சலுகைக்களை மகளிர் கோர முடியும். தவறான நடத்தைக்கு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டால் இத்தகைய சலுகைகளை பெறமுடியாது. மேலும், பிரசவ காலத்துக்கான பண உதவிகளை உரிய சான்றுகள் அளித்து முன்கூட்டியே நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். சான்றுகள் சமர்பிக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் பிரசவகால தொகையை நிறுவனம் வழங்க வேண்டும்.
பிரசவ கால சலுகைகளை அனுபவித்த உடன் நிறுவனத்தில் இருந்து வெளியேறலாமா?
பிரசவ கால சலுகைகளை அனுபவித்த உடன் நிறுவனத்தில் இருத்து வெளியேறுவதற்கு எந்த தடையும் இல்லை. நீங்கள் விரும்பும் நேரத்தில் கம்பெனியில் இருந்து ராஜினாமா செய்துகொள்ளலாம்.