Home /News /explainers /

LPG : சிலிண்டருக்கான மானிய பணம் உங்களுக்கு வரவில்லையா? உடனே இதை செய்யுங்கள்!

LPG : சிலிண்டருக்கான மானிய பணம் உங்களுக்கு வரவில்லையா? உடனே இதை செய்யுங்கள்!

சிலிண்டர் மானியம்

சிலிண்டர் மானியம்

LPG gas subsidy: இந்த மானியம் பெற சிலிண்டர் கணக்கில் எல்பிஜி ஐடியை கட்டாய இணைத்து இருக்க வேண்டும்

    LPG சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அந்த மானியத் தொகை உங்களுக்கு கிடைக்கவில்லையா? நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    சமையல் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் மானிய தொகையானது பலருக்கும் சரியான நேரத்தில் அக்கவுண்டில் வந்து சேர்வது இல்லை என்ற குற்றச்சாட்டு வழக்கமாக இருக்கும் ஒன்று. இந்த மானியத் தொகையானது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். கொரோனா லாக்டவுனில் இந்த மானியத் தொகை குறித்த பிரச்சனை பெரியதாக வெடிக்க, அந்த நேரத்தில் அரசு நிதி நெருக்கடி காரணமாக சிலிண்டர் மானியத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மானியத் தொகை அக்கவுண்டில் வர தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க.. uidai : ஆதார் கார்டில் இருக்கும் பழைய ஃபோட்டோ பிடிக்கவில்லையா? அப்ப உடனே மாற்றலாம் வாங்க!

    இந்த மானியம் பெற சிலிண்டர் கணக்கில் எல்பிஜி ஐடியை கட்டாய இணைத்து இருக்க வேண்டும். அதே சமயம் உங்களுக்கு மானீயத் தொகை கிடைப்பது இல்லையா? உங்களுடைய அக்கவுண்டில் மானிய தொகை வருவதில்லை அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

    1. முதலில் www.mylpg.in இந்த தளத்திற்குள் செல்ல வேண்டும்.

    2. பிறகு வலதுபுறத்தில் இருக்கும் ஐகான் மூலம் நீங்கள் பயன்படுத்தும் சிலிண்டர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    3. இப்போது sign in அல்லது sign up கேட்கும். ஐடி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் அப்படியே login செய்யலாம் allathu
    'new user' என்ற ஆப்ஷனில் செல்ல வேண்டும்.

    4. இப்போது புதிய விண்டோ ஓப்பன் ஆகும். அதில் இருக்கும் ’View Cylinder Booking History' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

    இதையும் படிங்க.. சேமிப்பு கணக்கு தொடங்க பெஸ்ட் வங்கி இதுதான்.. வட்டி மட்டுமே 7% கொடுக்குறாங்க!

    5. இதில் உங்களுடைய சிலிண்டர் மானியம் குறித்த அனைத்து தகவலும் இடம் பெற்று இருக்கும். அதாவது மானியத் தொகை வந்த கடைசி தேதி போன்ற அனைத்து தகவலும் இருக்கும். ஒருவேளை மானிய தொகை வரவில்லை என்றால் ’ feedback’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் புகாரை பதிவு செய்யலாம்.

    இதுக் குறித்த மேலும் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 18002333555 இந்த நம்பரில் அழைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: LPG, Subsidised LPG cylinders

    அடுத்த செய்தி