முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / சுதந்திர தினம் இல்லாத தேசங்கள் பற்றித் தெரியுமா?

சுதந்திர தினம் இல்லாத தேசங்கள் பற்றித் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சுதந்திர தினம் இல்லாத நாடுகளா என்று யோசிக்கலாம்.ஒரு நாடு வேறொரு நாட்டிற்கோ அரசுக்கோ கட்டுப்பட்டு இருந்து, அதன் பிடியில் இருந்து விடுபட்டால் மட்டும் தான் விடுதலை தினம் என்று ஒன்று வரும்

  • Last Updated :

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதனைச் சிறப்பாகக் கொண்டாட நாடே தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து நாடே விழாக் கோலம் பூணத்தொடங்கி விட்டது. வீடு தோறும் கோடி ஏற்றுவது, தங்கள் கலைத்திறனாலும் தொழில் முயற்சியிலும் மூவர்ணக்கொடியை வித்தியாசமாக உருவாக்குவது என்று தேசமே களைகட்டிக்கொண்டு இருக்கிறது.

1947 இல்  ஆகஸ்ட் 15ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக உரிமை பெற்றதால் நாம் ஆண்டு தோறும் அந்த நாளை சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறோம். சுதந்திர தினம் கொண்டாடாத நாடுகளும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

சுதந்திர தினம் இல்லாத நாடுகளா என்று யோசிக்கலாம்.ஒரு நாடு வேறொரு நாட்டிற்கோ அரசுக்கோ கட்டுப்பட்டு இருந்து, அதன் பிடியில் இருந்து விடுபட்டால் மட்டும் தான் விடுதலை தினம் என்று ஒன்று வரும். இந்த உலகில் உள்ள நாடுகளில் எல்லா நாடுகளும் காலனிகளாகவோ அடிமைகளாவோ இருக்கவில்லை. காலனி ஆதிக்கம் செலுத்தி வந்த நாடுகளும், தனி சுதந்திர மன்னராட்சி செய்து வந்த நாடுகளும் எப்போதுமே சுதந்திரமாகவே இருந்து வருகிறது. அதில் ஒரு சில நாடுகளை பார்ப்போம்.

இந்தியாவிற்கு சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15 தேர்வு செய்ய என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்து:

ஐரோப்பிய கண்டத்திற்கு அருகே தீவு நாடாக இருந்த அந்த சிறிய இங்கிலாந்து தான் பிற்காலத்தில்  அதிகமான நாடுகளைத் தனக்கு அடிமையாக வைத்திருந்தது. அமெரிக்க, ஆப்பிரிக்கா, இந்தியா என்று எல்லா பகுதியிலும் தன்  ஆளுமையை நிறுத்திய இங்கிலாந்து இன்றும் மன்னர் கோலொச்சும் ஆட்சியை நடத்தி வருகிறது. ஜூன் 11 ஐ தங்களது தேசிய தினமாகக் கொண்டாடி வருகிறது.

டென்மாக்

இந்தியாவிற்கு வந்த நான்காவது ஐரோப்பிய நாடான டென்மார்க் எந்த அரசிற்குக் கீழும் அடிமைப்பட்டு இருக்கவில்லை. தங்களது அரசியல் அமைப்பு சட்டத்தை அமல்படுத்திய நாளை ஜூன் 5 அன்று ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

பிரஞ்சு:

இங்கிலாந்தைப் போலவே பிரெஞ்சும் அநேக நாடுகளைத் தன் பிடியில் வைத்திருந்தது. அதனால் சுதந்திரமாகவே இயங்கி வந்தது. பிரெஞ்சு புரட்சி என்பது அடக்குமுறை முடியாட்சியில் இருந்து மக்களாட்சிக்கு மாற்றுவதற்காக எழுந்ததே. அதனால் அவர்களுக்கும் சுதந்திர தினம் இல்லை.

நேபாளம்:

நேபாள நாட்டிற்கு சுதந்திர தினம் இல்லையா. இந்தியா பாகிஸ்தானோடு அதுவும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இல்லையா என்று ஆச்சரியமாக இருக்கலாம்.ஆனால் அதன் கரடுமுரடான, பனி மலை கொண்ட புவியியல் அமைப்பால் ஆங்கிலேயர்கள் அங்கு அவ்வளவு தீவிரம் காட்டவில்லை. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோதும் நேபாளத்தில் மன்னர் ஆட்சி தான் நடைபெற்றது.அதனால் அவர்களுக்கு சுதந்திர தினம் கிடையாது. ஆயினும் 2008 க்குப் பிறகுதான் குடியரசு ஆட்சி அமலுக்கு வந்தது.

தாய்லாந்து:

சீனா, ஜப்பானியர்கள் தாக்கம் இருந்த போதிலும் ஐரோப்பியர்களின் காலனிகளில் சேராத நாடு தாய்லாந்து. 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தும்,பிரெஞ்சு காரர்களும் எவ்வளவு முயற்சி செய்தும் வணிகத்தைத் தாண்டி ஏதும் நடக்கவில்லை.2014 முதல் அதன் தற்போதைய மன்னர் ப்ஹுமிபோன் அவர்களின் பிறந்தநாளான டிசம்பர் 5 ஐத் தேசிய தினமாகக் கொண்டாடி வருகின்றனர். அடுத்த மன்னர் வரும் வரை இந்த நாள் தொடரும்.

சீனா:

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட சீனா ஒருபோதும் முழுமையாக காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்படவில்லை. மன்னர்களால் ஆளப்பட்டது. 1949 சீனப் புரட்சிக்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங் சீன மக்கள் குடியரசு (PRC) உருவாக்கப்பட்டது என்று அறிவித்தார். சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு சீன கம்யூனிஸ்ட் புரட்சி ஏற்பட்டது. அப்போதுதான் சீனக் குடியரசை, சீன மக்கள் குடியரசு என்று மாற்றியமைத்தது.

75 ஆவது சுதந்திர தினத்தன்று முதன்முறையாக பயன்படுத்தப்பட உள்ள உள்நாட்டு பீரங்கி

கனடா

இந்தியாவைத் தேடிச்சென்ற கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தைக் கண்டுபிடித்தார். வட அமெரிக்க கண்டம் அமெரிக்கா, கனடாவை உள்ளடக்கியது. பனிப்பிரதசம் அதிகம் உள்ள கனடா ஐரோப்பியர்களின் அதீத பிடியிலில்லை.அதனால் அவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை. ஆனால் ஜூலை 1 அன்று பிரிட்டிஷ் வட அமெரிக்கா (BNA) சட்டம் 1867 இயற்றப்பட்டு, கனடாவின் சுய ஆட்சி உறுதிசெய்யப்பட்ட நாளை கனடா தினமாகக் கொண்டாடுகிறது.

ரஷ்யா:

1922 முதல் 1991 வரை USSR ஆக ஒன்றிணைந்த ரசிய பிராந்தியம் என்ற பெயரில் இருந்தது. பின்னாளில் பல சிறு நாடுகளாகப் பிரிந்தது. இதனால் நாடுகள் பிரிவுற்ற தினம் மட்டுமே அனுசரிக்கப்படுகிறது. இந்த பிராந்தியத்தின் மீது எந்த நாடும் ஆளுமை செலுத்தியதில்லை .

top videos

    இவை போக ஜப்பான், ஸ்பெயின், பூட்டான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் சுதந்திர தினங்கள் கிடையாது. தேசிய தினங்கள் மட்டுமே உண்டு.

    First published:

    Tags: Britain, Canada, China, Independence day, Nepal, Thailand