ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.7 லட்ச இலவச காப்பீடு!

EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.7 லட்ச இலவச காப்பீடு!

EPFO

EPFO

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஏழு லட்ச ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு திட்டமும் உள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பல ஆண்டுகளாக சம்பளம் வாங்கும் ஊழியர்களின் பாதுகாப்பான முதலீடு திட்டமாக பிராவிடண்ட் ஃபண்ட் அதாவது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்பட்டு வருகிறது. ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க பல்வேறு புதிய அம்சங்கள் இந்த திட்டத்தில் அவ்வபோது சேர்க்கப்படும். சமீப காலமாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் EPFO உறுப்பினர்கள் அனைவரதும் பயனடையும் வகையில் ஒரு புதிய காப்பீட்டு ஸ்கீம் சேர்க்கப்பட்டுள்ளது. பிராவிடண்ட் ஃபண்டு கணக்கு வைத்திருப்பவர்கள் தற்பொழுது கூடுதலாக பிரீமியம் தொகையை செலுத்தாமலேயே 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டை இலவசமாக பெறலாம்.

  PF கணக்கு வைத்திருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த காப்பீடு திட்டம் பொருந்தும். இந்த திட்டம், காப்பீடு சம்பந்தப்பட்ட நன்மைகள் மட்டுமல்லாமல் பல்வேறு கூடுதலான பலன்களையும் வழங்குகிறது. இந்த காப்பீட்டுத் திட்டம், வருங்கால வைப்பு நிதி அமைப்போடு இணைக்கப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றும் எந்த ஊழியருக்கும் பொருந்தும்.

  EDLI எனப்படும் ஊழியர்கள் டெபாசிட் இணைப்பு காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கும் பயன்களை பற்றி, சமீபத்தில் EPFO நிறுவனம் தனது ட்விட்டர் கணக்கில் விவரங்களை பகிர்ந்துள்ளது. ஊழியர்களின் வைப்பு நிதிக்கு எப்படி நிறுவனங்கள் பென்ஷன் எனப்படும் EPS பங்களிப்பை பிடித்தம் செய்கிறதோ, அதே போல EDLS என்ற காப்பீட்டுக்கும் பிரீமியம் செலுத்தப்படுகிறது. இந்த காப்பீட்டுத் திட்டம் அளிக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

  பிரீமியம் கட்டணம் செலுத்த தேவையில்லை :

  பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து பயன் அடைவதற்கு எந்தவிதமான பிரீமியம் தொகையையும் செலுத்த வேண்டாம். இது இலவசமான காப்பீட்டுத் திட்டமாகும்.

  அதிகபட்ச தொகை - உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டின் பலன்கள் :

  பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் நாமினி அல்லது வாரிசு பற்றிய விவரங்களையும் பதிவு செய்திருப்பார்கள். PF கணக்கு வைத்திருப்பவர்கள் பணியில் இருக்கும் போது இறந்து போனால், அவரின் நாமினி அல்லது வாரிசுக்கு ஏழு லட்ச ரூபாய் இழப்புத் தொகையாக வழங்கப்படும்.

  குறைந்தபட்ச தொகை - உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டின் பலன்கள் :

  இந்த காப்பீட்டுத் திட்டத்தின்படி, பணியில் இருக்கும் நபர், இறப்பதற்கு முன் குறைந்தபட்சமாக ஓராண்டு தொடர்ச்சியாக பணியாற்றியிருந்தால், குறைந்தபட்ச இழப்புத்தொகையாக இரண்டரை லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது

  பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் தானாகவே திட்டம் சேர்க்கப்படும் :

  EPFO உறுப்பினர்கள் இந்தத் திட்டத்திற்காக தனியாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஏற்கனவே வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினராக இருந்தால் நீங்கள் தானாகவே இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு விடுவீர்கள்.

  நேரடியாக வங்கி மூலம் பணப்பரிமாற்றம் :

  பணியில் இருக்கும் ஊழியர் இறந்து போனால், காப்பீட்டுத் தொகையை கிளைம் செய்ய 51F என்ற படிவத்தை நிரப்பி EPFO அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், காப்பீட்டுத் தொகை ஊழியரின் நாமினி அல்லது வாரிசின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும்.

  Published by:Archana R
  First published:

  Tags: Epfo