ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

குளிர்காலம் உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்குமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

குளிர்காலம் உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்குமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

சமீபத்திய ஆய்வின்படி குளிர்காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் அதிகமாக சுரக்கும். எனவே, கோடை காலத்தை ஒப்பிடும்போது குளிர்காலத்தில் கருமுட்டையின் வளர்ச்சி கிட்டத்தட்ட ஒரு நாள் வரை தாமதமாக இருக்கும்.

சமீபத்திய ஆய்வின்படி குளிர்காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் அதிகமாக சுரக்கும். எனவே, கோடை காலத்தை ஒப்பிடும்போது குளிர்காலத்தில் கருமுட்டையின் வளர்ச்சி கிட்டத்தட்ட ஒரு நாள் வரை தாமதமாக இருக்கும்.

சமீபத்திய ஆய்வின்படி குளிர்காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் அதிகமாக சுரக்கும். எனவே, கோடை காலத்தை ஒப்பிடும்போது குளிர்காலத்தில் கருமுட்டையின் வளர்ச்சி கிட்டத்தட்ட ஒரு நாள் வரை தாமதமாக இருக்கும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மாதவிடாய் சுழற்சி முறையாக இருப்பது பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதன் முக்கிய அறிகுறியாகும். உணவுப்பழக்கம், அன்றாடப் பழக்கவழக்கங்கள் மற்றும் சீதோஷ்ண நிலை ஆகியவை மாதவிடாய் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் குளிர்காலம் மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அசௌகரியங்கள், மாதவிடாய் தாமதம் ஆவது உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். மாதவிடாய் காலத்தை குளிர்காலம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

  • பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக வலி மற்றும் அசௌகரியத்தை எதிர்கொள்கிறார்கள்.
  • இவை மட்டுமின்றி, நீர்ச்சத்துக் குறைபாட்டால் மாதவிடாயின் போது அதிக வலி ஏற்படும்.
  • என்ன உணவு வகைகளை சாப்பிடுகிறோம் என்பது குளிர்காலத்தில் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்.
  • தலைவலி, வயிறு உப்புசம், வயிறு வலி, மார்பகங்கள் சோர்ந்து இருப்பது போன்ற உணர்வு, குமட்டல் மற்றும் நாள் முழுவதும் சோர்வாக உணர்வது ஆகியவை மாதவிடாய் காலத்தில் அதிகரிக்கும்.

இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

கருமுட்டையின் வளர்ச்சி மெதுவாகும்:

ஒவ்வொரு பருவகால மாற்றமும் மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். சமீபத்திய ஆய்வின்படி குளிர்காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் அதிகமாக சுரக்கும். எனவே கோடை காலத்தை ஒப்பிடும்போது குளிர்காலத்தில் கருமுட்டையின் வளர்ச்சி கிட்டத்தட்ட ஒரு நாள் வரை தாமதமாக இருக்கும். இது உங்கள் பீரியட்ஸ் சைக்கிளை தாமதமாக்கும். உங்கள் வழக்கமான பீரியட்ஸ் சைக்கிள் ஏற்படாமல் போகும் சாத்தியம் உள்ளது. அதாவது, உங்கள் மாதவிடாய் சைக்கிள் 27 நாட்கள் (27 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும்) என்னும் போது, குளிர் காலத்தில் அதே கால அளவில் மாதவிடாய் ஏற்படாது.

PMS அறிகுறிகள் தீவிரமாகும்:

PMS எனப்படும் மாதவிடாய் வருவதற்கு முன்பான அறிகுறிகள் குளிர் காலங்களில் அதிகமாக ஏற்படும். குளிர்காலத்தில் வெளியே சொல்ல தோன்றாது. வீட்டுக்குள்ளேயே நாள் முழுவதும் முடங்கி இருக்கலாம் என்று எண்ணம் மேலோங்கி இருக்கும். சிலருக்கு குளிர்காலம் ஒவ்வாமையை போன்ற உணர்வை ஏற்படுத்தும். குளிரைத் தாங்க அதிகமாக உணவு உண்பதும் குறைவான ஆக்டிவிட்டிகளும் மாதவிடாய் காலத்தை பாதிக்கும். இது PMS அறிகுறிகளை தீவிரமாகும்.

இதையும் படிங்க | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!

குளிர்காலத்தில் மாதவிடாய் நாட்களை எளிதாக எதிர் கொள்வது எப்படி?

குளிர் காலத்தில், சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கும் நேரங்களில் நீங்கள் தினமும் வெளியிடங்களில் செலவிடலாம். நாள் முழுவதும் ஆக்டிவாக, சுறுசுறுப்பாகவும் இயங்கும் பெண்கள், உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர்கள், யோகா மற்றும் சிறிய அளவிலாவது உடல் உழைப்பு தேவைப்படும் செயல்களில் ஈடுபடும் பெண்கள் மற்ற பெண்களை விட ரெகுலரான பீரியட்ஸ் கொண்டவர்கள். கோடை காலத்தில் நீங்கள் இயல்பாக இயங்கினாலும் குளிர்காலத்தில் உங்கள் ஆக்டிவிட்டி குறையும் பொழுது மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்கு போதிய அளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவது உதவும்.

ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காபி அருந்துவதை விட ஹெர்பல் டீ அருந்துவது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கும். மேலும், மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் சேர்க்கப்படும் தேநீர் உடல் வலியை போக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, வலியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. சின்ன சின்ன உடற்பயிற்சி செய்வதை தினசரி வழக்கமாக்கிக் கொள்வது உங்கள் மாதவிடாய் காலத்தை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

உடல் பருமன் மற்றும் அதிக எடை மாதவிடாய் சுழற்சியை குளிர்காலத்தில் மட்டுமல்லாமல் எல்லா காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இதன் பாதிப்பு குளிர் காலங்களில் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள் அல்லது எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவது பயனளிக்கும்.

Published by:Archana R
First published:

Tags: Explainer, Menstruation, Periods, Winter