முகப்பு /செய்தி /Explainers / Explainer | PCOS பிரச்சனை… கொரோனா ஆபத்து… என்ன தொடர்பு? ஆய்வில் வெளியான தகவல்

Explainer | PCOS பிரச்சனை… கொரோனா ஆபத்து… என்ன தொடர்பு? ஆய்வில் வெளியான தகவல்

பி.சி.ஓ.எஸ்-இல் இருந்து விரைவில் குணமடைய மருத்துவர்கள் சில முறைகளை பின்பற்ற அறிவுறுத்துகின்றனர்.

பி.சி.ஓ.எஸ்-இல் இருந்து விரைவில் குணமடைய மருத்துவர்கள் சில முறைகளை பின்பற்ற அறிவுறுத்துகின்றனர்.

பி.சி.ஓ.எஸ்-இல் இருந்து விரைவில் குணமடைய மருத்துவர்கள் சில முறைகளை பின்பற்ற அறிவுறுத்துகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

PCOS என்பது பெண்களிடம் காணப்படும் பொதுவான ஹார்மோன் கோளாறு ஆகும். பி.சி.ஓ.எஸ் கொண்ட பெண்களுக்கு கொரோனா தொற்று எளிதில் தாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பி.சி.ஓ.எஸ்-ஆல் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டும் கொரோனாவால் அதிக தாக்கத்திற்கு உள்ளாகும் கணிசமான மக்கள் தொகையாகக் கருதப்படவில்லை. ஆனால், சுகாதார அமைப்பில் பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பி.சி.ஓ.எஸ் உடலில் என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்துகிறது?

பி.சி.ஓ.எஸ் எனப்படும் ஹார்மோன் கோளாறு நீரிழிவு நோய், மாரடைப்பு மற்றும் மனச்சோர்வு ஆகிய அபாயத்தை அதிகரிக்கிறது. பொதுவாக பி.சி.ஓ.எஸ் குழந்தை பிறக்கும் பருவத்தில் இருக்கும் பெண்களில் 10ல் ஒருவரை பாதிக்கிறது. பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் ஆண்ட்ரோஜன் அளவுகள் மற்றும் கருப்பையில் உள்ள சிறிய நுண்ணறைகளில் உருவாகும், அவை மாதவிடாயை சரிவர விடாமல் சீர்குலைக்கும்.

சில பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஒழுங்கற்ற அல்லது சில நேரங்களில் அதிக அளவில் இரத்தப்போக்கும் இருக்கும். இந்த நிலையால் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான ரோம வளர்ச்சி காணப்படலாம். மேலும், தோல் சம்பந்தமான பிரச்சனைகள், மனநிலையில் மாற்றங்கள், தூக்கமின்மை மற்றும் திடீர் எடை அதிகரிப்பு ஆகியவை ஏற்படும். இவற்றால் கருத்தரிப்பில் சில பெண்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். ஆனால், இந்த நிலையில் உள்ள பல பெண்கள் கருத்தரிக்கவும் செய்கின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

பி.சி.ஓ.எஸ்-க்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சியின் மூலம் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியாவிட்டாலும், அது மரபியல், சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் நச்சுக்கள் மற்றும் அதிகப்படியான இன்சுலின் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இன்சுலின் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் என்பதால் பி.சி.ஓ.எஸ்-ஆல் பாதிக்கப்படும் பெண்களில் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இன்சுலினை எதிர்க்கின்றன. ஏனெனில், இது கொரோனாவில் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்கின்றனர். பி.சி.ஓ.எஸ் நோயாளிகளுக்கு மாரடைப்பு மற்றும் எண்டோமெட்ரியல் (endometrial cancer) புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. பி.சி.ஓ.எஸ்-க்கு எந்த சிகிச்சையும் இல்லை, ஆனால் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்கள் அதை சரிசெய்ய உதவுகின்றன.

Must Read | ‘இதுவும்தான் முக்கியம்…’ மாதவிடாய் குறித்து சொல்லிக்கொடுங்கள்- பெற்றோர்களுக்கு ஒரு கைட்லைன்!

பி.சி.ஓ.எஸ்-ஆல் பாதிக்கப்படும் பெண்களுக்கு கொரோனா தாக்கும் அபாயம் 26% அதிகம்:

இந்த ஆய்வை நடத்துவதற்கு, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள சில நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் 2020ஆம் ஆண்டில் பி.சி.ஓ.எஸ்-ஆல் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பி.சி.ஓ.எஸ் இல்லாத பெண்களிடம் ஆய்வு நடத்தினர். பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய், இருதய நோய்கள் போன்றவைக்கு ஆளாகின்றனர். மேலும், கொரோனாவுக்கான அனைத்து ஆபத்தான காரணிகளும் கண்டறியப்பட்டன.

பி.சி.ஓ.எஸ் நோயாளிகளில் கொரோனா தொற்று பாதிப்பின் விகிதம் பி.சி.ஓ.எஸ்-ஆல் பாதிக்காதோரை விட இருமடங்காக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்கள் இடையே கொரோனா தொற்றின் ஆபத்து 51 சதவீதம் அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடல் பருமன், குளுக்கோஸ் கட்டுப்பாடு, வைட்டமின் டி குறைபாடு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட கொரோனா ஆபத்து காரணிகளை மேலும் கணக்கிடும்போது, பி.சி.ஓ.எஸ் நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட 26 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பி.சி.ஓ.எஸ்-இல் இருந்து விரைவில் குணமடைய மருத்துவர்கள் சில முறைகளை பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதிசெய்ய உடற்பயிற்சி மற்றும் யோகாவை உங்கள் அன்றாட வழக்கத்தில் இடம்பெற செய்ய வேண்டும். உங்கள் உணவில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட முயற்சிக்க வேண்டும். எனவே, இவை இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முதல் படியாக அமையும்.

First published:

Tags: Healthy Lifestyle, Irregular periods, PCOS