Home /News /explainers /

உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் உதய் உமேஷ் லலித்..! பின்னணி என்ன?

உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் உதய் உமேஷ் லலித்..! பின்னணி என்ன?

உதய் உமேஷ் லலித்

உதய் உமேஷ் லலித்

நீதிபதி லலித், பார் கவுன்சிலில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற அமர்வுக்கு உயர்த்தப்பட்ட இரண்டாவது தலைமை நீதிபதி ஆவார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi |
தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணா நேற்றோடு(26.08.2022) பணிக்காலம் முடிந்து ஓய்வுபெறும் நிலையில் 49 ஆவது தலைமை நீதிபதியாக இன்று 27.08.2022 உதய் உமேஷ் லலித் பணி ஏற்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 10 அன்று இந்திய அரசியலமைப்பின் 124(2) பிரிவு மூலம், இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் முன்னிலையில் லலித் அவர்கள் 49 ஆவது தலைமை நீதிபதி பணிக்கான நியமன பத்திரத்தை பெற்றார். இன்று பதவியேற்கவுள்ளார். அவர் யார், எங்கிருந்து வந்தார் என்று சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.

நவம்பர் 9, 1957 அன்று மஹாராஷ்டிராவின் சோலாப்பூரில் பிறந்த நீதிபதி லலித், ஜூன், 1983 இல் மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து பணியாற்றி வந்தார் . டிசம்பர் 1985 வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். ஜனவரி, 1986 முதல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.. தோசை பிரிண்ட் செய்யும் இயந்திரம் தெரியுமா மக்களே!

அக்டோபர் 1986 முதல் 1992 வரை ஸ்ரீ சோலி ஜே. சொராப்ஜியின் கீழ் பணியாற்றினார். ஸ்ரீ சோலி ஜே. சொராப்ஜி இந்தியாவிற்கான அட்டானி ஜெனரலாக இருந்த காலத்தில் இந்திய யூனியன் வழக்கறிஞர்கள் குழுவில் லலித்தும் இடம்பெற்று இருந்தார். 1992 முதல் 2002 வரை தனி வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.

ஏப்ரல் 2004 இல் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மேலும் வன விவகாரங்கள், வாகன மாசுபாடு, யமுனை மாசு போன்ற பல முக்கியப் பிரச்சினைகளில் நடுநிலை அறிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.

அதோடு, அனைத்து 2ஜி வழக்கு விசாரணையிலும்  உச் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ சிறப்பு அரசு வழக்கறிஞராக இருந்தார். ஆகஸ்ட் 13, 2014 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

9,000 இடங்களில் 3700 கிலோ வெடி மருந்துகள்.. நொய்டா இரட்டை கோபுர ஏன் எதற்காக இடிக்கப்படுகிறது?

முஸ்லீம்களிடையே உடனடி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்பது உட்பட பல முக்கிய தீர்ப்புகளின் ஒரு பகுதியாக நீதிபதி லலித் இருந்துள்ளார்.

நீதிபதி லலித், பார் கவுன்சிலில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற அமர்வுக்கு உயர்த்தப்பட்ட இரண்டாவது தலைமை நீதிபதி ஆவார். 1971 ஜனவரியில் 13வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, மார்ச் 1964ல் உச்சநீதிமன்ற அமர்வுக்கு நேரடியாக உயர்த்தப்பட்ட முதல் வழக்கறிஞர் ஆவார்.

நீதிபதி உதய் உமேஷ் லலித் நவம்பர் 8, 2022 அன்று 65 வயதில் ஓய்வு பெறுவதால் ஓய்வு பெறுவதற்கு முன் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Chief justice of india, New CJI

அடுத்த செய்தி