FAQ: கருக்கலைப்பு செயல்முறையை எத்தனை வாரத்தில் செய்யலாம்? திருமணமாகாதவர்கள் செய்யலாமா?

காட்சிப் படம்

கருக்கலைப்பு முறையில், கரு அல்லது கருமுட்டை மற்றும் நஞ்சுக்கொடியை கருப்பையிலிருந்து அகற்ற மருந்து அல்லது அறுவை சிகிச்சை முறை பயன்படுத்தபடுகிறது.

  • Share this:
கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் கருவுற்ற நிலையை அழிப்பது என்று அர்த்தம். அதாவது குழந்தை உருவாகும் முறையை ஆரம்பத்திலேயே முடிவுக்கு கொண்டு வரும் ஒரு செயல்முறையாகும். இந்த கருக்கலைப்பு முறையில், கரு அல்லது கருமுட்டை மற்றும் நஞ்சுக்கொடியை கருப்பையிலிருந்து அகற்ற மருந்து அல்லது அறுவை சிகிச்சை முறை பயன்படுத்தபடுகிறது.

இந்தியாவில் கருக்கலைப்பு சட்டபூர்வமானதா?

இந்தியாவில் மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்படும் போது மட்டுமே கருக்கலைப்பு சட்டபூர்வமானது. ஆனால் இதற்கு சில வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா?

மருத்துவ பயிற்சியாளர்களால் சட்டபூர்வமாக கருகலைக்கப்படும் போது, அந்த செயல்முறை இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அதில் ஒன்று,

a) கர்ப்பம் 20 வாரங்களுக்கு கீழ் இருந்தால், அதை ஒற்றை மருத்துவ பயிற்சியாளரால் நிறுத்தலாம்.
b) கர்ப்பம் 20 வாரங்களுக்கு மேல் ஆனால் 24 வாரங்களுக்கு மிகாமல் இருந்தால், கர்ப்பத்தை நிறுத்த குறைந்தபட்சம் 2 மருத்துவ பயிற்சியாளர்கள் தேவை.

Also Readபால்வினை நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!!

கருக்கலைப்பு செய்யக்கூடிய இடம்:

அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அல்லது பராமரிக்கப்படும் ஒரு மருத்துவமனையில் அல்லது இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

18 வயதிற்குட்பட்ட பெண் கருக்கலைப்பு செய்யலாமா?

கட்டாயமாக செய்யலாம். கருக்கலைப்பை 18 வயதிற்கு உட்பட்ட ஒரு பெண் தேர்வு செய்யலாம். ஆனால் அதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் தேவைப்படும்.

 

திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்ய முடியுமா?

இந்தியாவில் கருக்கலைப்பு என்பது பெண்ணின் ஆரோக்கியம் மற்றும் கருவின் ஆரோக்கியத்திற்கான அக்கறையால் இயக்கப்படுகிறது. தொடர்ச்சியான கர்ப்பம் என்பது கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மேலும் அவரது உடல் அல்லது மன ஆரோக்கியத்திற்கு கடுமையான காயம் ஏற்படுமாயின் அவர் கருக்கலைப்பு செய்ய முடியும் என்று சட்டம் கூறுகிறது.

கருக்கலைப்பு செய்ய யாருடைய ஒப்புதல் தேவை:

கருக்கலைப்பு செய்வதற்கு பெண்ணின் பெற்றோரோ அல்லது கணவரின் ஒப்புதலோ தேவையில்லை. இதற்கு கருக்கலைப்பு செய்ய உள்ள கர்ப்பிணியின் ஒப்புதல் மட்டுமே இருந்தால் போதும். அதுவே பெண்கள் 18 வயதுக்குக் குறைவானவர்கள், அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், பெற்றோர் அல்லது கார்டியனின் ஒப்புதல் கட்டாயமாக தேவைப்படுகிறது.

24 வார வரம்புக்குப் பிறகு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அது ஏன்?

24 வார காலத்திற்கு பிறகு கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதி தந்தாலும், அது பெண்களின் உயிருக்கு அதிக ஆபத்தில் முடியும். மேலும் கருவிலும் பல குறைபாடுகளை ஏற்படுத்தும். எனவே கருக்கலைப்பு என்பது 24 வார காலத்திற்கு முன்னதாகவே செய்ய வேண்டும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: