ஹோம் /நியூஸ் /Explainers /

Google: கூகுள் உங்களை எல்லா இடங்களிலும் கண்காணிக்கிறதா? விளம்பர விற்பனைக்காக மின் அஞ்சல்களை படிக்கிறார்களா?

Google: கூகுள் உங்களை எல்லா இடங்களிலும் கண்காணிக்கிறதா? விளம்பர விற்பனைக்காக மின் அஞ்சல்களை படிக்கிறார்களா?

Google

Google

யூசர் பிரைவசியைப் பொறுத்தவரை, பாதுகாப்பில்லை என்று அதிக அளவில் மக்களால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் கூகுள்.

 • Trending Desk
 • 7 minute read
 • Last Updated :

  கூகுள் டிராக்கிங், யூசர்களின் மத்தியில் பல விதமான தனியுரிமை மற்றும் ஒழுங்குமுறை சந்தேகங்களை, பயத்தை உருவாக்கியுள்ளது. அதை தீர்க்கும் விதமாக, கூகுள் நிறுவனம் அதிகம் கேட்கப்படும் தனியுரிமை பாதிப்பு சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

  இணையத்தில், எல்லா இடங்களிலும் கூகுள் உங்களைக் கண்காணிக்கிறதா? இந்த கேள்வியை பெரும்பாலான யூசர்களிடம் பொதுவான வாக்கெடுப்புக் கேள்வியாக நீங்கள் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஆமாம், அப்படித் தான் நினைக்கிறேன் என்று அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, தனியுரிமைக் கோருபவர்கள், சமூகக் குழுக்கள் மற்றும் நெறியாளர்கள், ஆகியவர்களின் தொடர்ச்சியான கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் கண்காணிப்பை அவசர அவசரமாக மறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

  அதே நேரத்தில் யூசர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறி சந்தைப்படுத்தல் முயற்சிகள் அதிகரித்துள்ளன. ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்றவற்றிலிருந்து வரும் பிரதான சேவைகள், பரவலான யூசர் தரவைச் சேகரிப்பதற்கும், அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும், வகைப்படுத்துவதற்கும், விளம்பரதாரர்களுக்கான தயாரிப்பை வழங்குவதற்கும் , மூன்றாம் தரப்பு, ஒப்பந்தம் செய்யப்பட்ட மனிதர்கள் பதிவுசெய்யப்பட்ட ஆடியோவின் துணுக்குகளைக் கேட்கவும் அனுமதிக்கின்றன – இத்தகைய உரையாடல்களில் யோஓர்கள் தாங்கள் பதிவு செய்யப்படுவதை கூட உணரவில்லை.

  Also Read:  கீர்த்தி சுரேஷ் முதல் அனுஷ்கா வரை: தென்னிந்திய டாப் 10 நடிகைகளின் உண்மையான வயது!

  சமீபத்தில், யூசர் பிரைவசியைப் பொறுத்தவரை, பாதுகாப்பில்லை என்று அதிக அளவில் மக்களால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் கூகுள். எங்களுக்கு எங்கள் யூசர்கள் தான் முக்கியம் என்று தொடர்ந்து கூறி வந்தது அந்நிறுவனம். அதன் விளைவாக, தற்போது, எளிதாக அணுகும் முறையில், கூடுதலான யூசர் கண்ட்ரோல்களை வழங்கியுள்ளது. இதன் மூலம், லொகேஷன் ஆஃப் செய்து வைக்க முடியும். ஆண்டிராய்டு யூசர்கள் தங்கள் தரவுகளை அனானிமஸ் ஆக பயன்படுத்த toggle செய்ய ஒரு தேர்வு உள்ளது. இதன் மூலம், எந்த நிறுவனமும் யூசர்களின் தரவுகளை பயன்படுத்த முடியாது.

  Google

  மூன்றாம் தரப்பு குக்கீ டிராக்கிங்கிற்கும் தடை விதிப்பதாக உறுதியளித்துள்ளது. மற்றும் FLoC – Federation Learning of Cohorts போன்ற நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், பிந்தையது, கணிசமான பின்னடைவையும், கடுமையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. தனியுரிமை சமூகங்கள் யூசர்களை கண்காணிப்பதை, கூகுள் நிறுவனம் மிகவும் மென்மையான முறையில் கையாள்கிறது. இந்த கண்காணிப்பை, மேலும் உறுதியானதாக மாற்றுவதற்காகவும், சந்தையில் ஏகபோகமான உரிமையை நிலைநாட்டவும் கூகுள் இத்தகைய செயல்பாட்டில் ஈடுப்பட்டுள்ளதாக யூசர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  Also Read:  பா.ரஞ்சித்தின் அடுத்த காதல் படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’!

  இவை அனைத்திற்கும் இடையே, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இந்த மிகப்பெரிய ஆன்டி-காம்ப்படீஷன் விசாரணைக்கு கூகுள் முற்றுப்புள்ளி வைத்துள்ளது, FAQ எனப்படும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை வெளியிட்டுள்ளது. இது "அதிகம் கேட்கப்பட்ட" தனியுரிமை கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்கள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. யூசர்கள் தெரிந்து கொள்ள அவர்கள் விரும்புவது இங்கே.

  *ஆசிரியரின் குறிப்பு: கீழேயுள்ள கேள்விகள் மற்றும் பதில்கள் அனைத்தும் கூகிள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டன. மேலும் தனியுரிமைக் கேள்விகள் குறித்த கூகுளின் பார்வையையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கூகுள் வழங்கிய கீழேயுள்ள பதில்களை நியூஸ்18 உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. மேலும் யூசர்கள் முடிவு, அவர்களைச் சார்ந்ததே ஆகும்.

  Google

  நான் சொல்லும் எல்லாவற்றையும் கூகுள் அசிஸ்டென்ட் பதிவு செய்கிறதா?

  இல்லை, பதிவாகாது. “ஹே கூகுள்” அல்லது “ஓகே கூகுள்” என்று நீங்கள் கூறும்போது, ​​அது செயல்படுத்தப்படும் வரை, காத்திருப்பு பயன்முறையில் இருக்குமாறு கூகுள் அசிஸ்டென்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு பயன்முறையில், ஒரு செயல்பாட்டைக் கண்டறிய (“சரி கூகுள்” போன்றவை) ஆடியோவின் சிறிய ஸ்னிப்பட்களை (சில வினாடிகள்) பிராசஸ் செய்கிறது. ஆக்டிவேஷன் எதுவும் கண்டறியப்படவில்லை என்றால், அந்த ஆடியோ துணுக்குகள் Googleக்கு அனுப்பப்படாது அல்லது சேமிக்கப்படாது. ஆக்டிவேஷன் கண்டறியப்பட்டால், உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அசிஸ்டென்ட் காத்திருப்பு பயன்முறையிலிருந்து வெளியே வரும்.

  Also Read:   அம்மாடியோவ்...! பழங்கால டெலிபோன் பூத்-க்கு இவ்வளவு விலையா? - செடி விற்பனை செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

  கூகுள் அசிஸ்டென்ட் ஆக்டிவ் ஆக மாறும் போது, உங்கள் சாதனத்தில் உள்ள ஸ்டேடஸ் இண்டிகேட்டர், உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது. இது காத்திருப்பு பயன்முறையில் இருக்கும்போது, ​​ கூகுள் அல்லது வேறு யாருக்கும் நீங்கள் சொல்வதை அசிஸ்டென்ட் அனுப்பாது. நீங்கள் உங்கள் அன்றாடப் பணிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவ, திட்டமிடப்படாத செயல்பாடுகளை குறைக்க, கூகுள் அசிஸ்டெண்ட்-ஐ சிறந்ததாக்க, நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

  உங்கள் சுற்றுப்புறத்துக்கு ஏற்றவாறு நீங்கள் உங்கள் அசிஸ்டெண்ட்டை எவ்வளவு சென்சிட்டிவாக வைக்க முடியும்?

  உங்கள் சூழலுக்கு கூகுள் அசிஸ்டென்ட்டை சிறப்பாக வடிவமைக்க, ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களுக்கான கூகுள் ஹோம் பயன்பாட்டின் மூலம் ஆக்டிவேஷன் செய்யும் வாக்கியங்கள் ('ஹே கூகிள்' போன்றவை) உங்கள் அசிஸ்டென்ட் எவ்வளவு சென்சிட்டிவ் ஆக இருக்கிறது என்பதை நீங்கள் அட்ஜஸ்ட் செய்யலாம். கேமராக்கள் மற்றும் மைக்குகளை அணைப்பதற்கான கட்டுப்பாடுகளை நாங்கள் வழங்குகிறோம். அவை ஆக்டிவ்வாக இருக்கும்போது, தெளிவான விஷுவல் இண்டிகேட்டரை வழங்குவோம் (உங்கள் சாதனத்தின் மேல் ஒளிரும் புள்ளிகள் போன்றவை).

  Also Read:  லாங் டிரிப்புக்கு திட்டமிடுகிறீர்களா? டயரில் இதையெல்லாம் செக் பண்ணுங்க!

  உங்கள் வாய்ஸ் பயன்படுத்தி, கூகுள் அசிஸ்டென்ட் ஆக்டிவிட்டியை நீக்குவது மிகவும் எளிதானது. ‘ஹே கூகுள், இந்த ஆக்டிவிட்யை அழிஅல்லது, ‘ஹே கூகுள், முந்தைய உரையாடலை அழி’ போன்ற வாக்கியங்கள் சொன்னால், கூகுள் அசிஸ்டென்ட் உங்கள் ஆக்டிவிட்டியை அழித்து விடும். இதை நீங்கள் மை ஆக்டிவிட்டி (My Activity) பக்கத்தில் பார்க்கலாம். அது மட்டுமின்றி, நீங்கள் இந்த பக்கத்தைப் பயன்படுத்தி, நீங்கள் பயன்படுத்தும் மற்ற கூகுள் தயாரிப்புகளையும் மதிப்பாய்வு செய்து, ஆக்டிவிட்டியை அழிக்கலாம். நீங்கள் கூகுள் அசிஸ்டென்ட்டில், ‘கெஸ்ட் மோடு’ என்பதையும் ஆக்டிவேட் செய்து, மற்றவர்களுடன பகிர்ந்து கொள்ளலாம். அதை ஆக்டிவேட் செய்ய, ‘ஹே கூகுள், டர்ன் ஆன் கெஸ்ட் மோடு’ என்று சொன்னால் போதும். அது மட்டுமின்றி, கூகுள் அசிஸ்டென்ட் உடனான உங்கள் உரையாடல்கள், உங்கள் கணக்கில் சேமிக்கப்படாது.

  என்ன விளம்பரங்களைக் காண்பிக்க வேண்டும் என்பதை GOOGLE எவ்வாறு தீர்மானிக்கிறது? இதை நான் எவ்வாறு கட்டுப்படுத்துவது?

  நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள், உங்கள் முந்தைய தேடல்கள், நீங்கள் பார்வையிடும் தளங்கள், கிளிக் செய்த விளம்பரங்கள் மற்றும் அதையொத்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டவை. எடுத்துக்காட்டாக, நீங்கள் கேமராக்களைத் தேடியது, புகைப்பட வலைத்தளங்களைப் பார்வையிட்டது அல்லது கேமராக்களுக்கான விளம்பரங்களைக் கிளிக் செய்தது போன்ற செயல்பாடுகளால், நீங்கள் ஒரு கேமரா விளம்பரத்தைப் பார்க்கலாம். 'ஏன் இந்த விளம்பரம்?' என்ற அம்சம், கொடுக்கப்பட்ட விளம்பரத்தை நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

  விளம்பரங்கலைத் தனிப்பயனாக்க, இந்தத் தரவு எங்களுக்கு உதவுகிறது, இதனால் அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் உங்கள் மின்னஞ்சல்கள் அல்லது ஆவணங்களின் உள்ளடக்கத்தை அல்லது உடல்நலம், இனம், மதம் அல்லது பாலியல் நோக்குநிலை போன்ற முக்கியமான தகவல்களை பயன்படுத்தி, உங்களுக்கு தனிப்பயனாகக்ப்பட்ட விளம்பரத்தை ஒருபோதும் காண்பிக்க மாட்டோம். உங்களுக்குக் காண்பிக்கப்படும் விளம்பரங்களின் வகைகளைத் தனிப்பயனாக்குவதும் எளிதானது, அல்லது விளம்பரங்களைத் தனிப்பயனாக்குவதையும் முற்றிலுமாக நீங்கள் முடக்கலாம். இதற்காக, நீங்கள் விசிட் யுவர் ஆட் செட்டிங்க்ஸ் (Visit Your Ad Settings) பக்கத்தைப் பார்வையிடவும்.

  விளம்பரத்தை டார்கெட் செய்வதற்காக, எனது தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தி, நீங்கள் ஒரு புரொஃபைலை உருவாக்குகிறீர்களா?

  உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் யாருக்கும் விற்பனை செய்யவில்லை- விளம்பரதாரர்களுக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமே விற்பனை செய்யவில்லை. விளம்பர நோக்கங்களுக்காக, ஜிமெயில், டிரைவ், கேலெண்டர் மற்றும் புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட உள்ளடக்கத்தை, நீங்கள் முதன்மையாக சேமித்து வைக்கும் பயன்பாடுகளில் இருக்கும் தகவலை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். உங்களுக்கும், மற்றவர்களுக்கும், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக, நாங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம். தகவல் சேகரிப்பில், நாங்கள்  சேகரித்த மற்றும் ஒருங்கிணைந்த தரவை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

  உங்களுக்கு தொடர்புடைய விளம்பரங்களை உங்களிடம் காட்டுவதற்கு, ஒரு சிறிய துணைக்குழு தகவல் பயன்படுத்தப்படலாம் (நீங்கள் உண்மையில் கேட்க விரும்பும் விஷயங்களுக்கு), ஆனால் அவையும் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே நடக்கும். இந்த அமைப்புகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அணைத்து வைக்கலாம். நீங்கள் லாகின் செய்யாமல், கூகுளின் பெரும்பாலான தயாரிப்புகளை நீங்கள்  பயன்படுத்தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் - நீங்கள் மறைநிலை பயன்முறையில் தேடலாம் அல்லது உங்கள் தேடல் வரலாற்றை அழிக்கலாம்; நீங்கள் YouTube வீடியோக்களைப் பார்த்து வரைபடங்களைப் பயன்படுத்தலாம். இருப்பினும், உங்கள் தரவை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, ​​எங்களுடன் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எங்கள் தயாரிப்புகளுடன் சிறந்த அனுபவத்தை உருவாக்க முடியும்.

  விளம்பரங்களை விற்பனை செய்ய எனது மின்னஞ்சல்களைப் படிக்கிறீர்களா?

  உங்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்க, உங்கள் ஜிமெயில் செய்திகளை நாங்கள் ஸ்கேன் செய்வதில்லை, படிப்பதில்லை. உண்மையில், உங்கள் தனிப்பட்ட உள்ளடக்கத்தை சேமிக்க வடிவமைக்கப்பட்ட ஜிமெயில், டிரைவ் மற்றும் புகைப்படங்கள் போன்ற பல தயாரிப்புகள் எங்களிடம் உள்ளன. மேலும் விளம்பரங்களைக் காண்பிக்க இந்த உள்ளடக்கம் எப்போதும் பயன்படுத்தப்படாது. உங்கள் தனிப்பட்ட Google கணக்கைப் பயன்படுத்தும்போது, ​​ஜிமெயிலில் விளம்பரங்கள் அல்லது சோஷியல் டாப்களைத் (Tab) திறக்கும்போது, ​​உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட விளம்பரங்களைக் காண்பீர்கள். ஜிமெயிலில் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து காண்பிக்கும் செயல்முறை தானியங்கு செயல்முறையாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஜிமெயிலில் நீங்கள் காணும் விளம்பரங்கள், உங்கள் Google கணக்குடன் தொடர்புடைய தரவை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது YouTube அல்லது உங்கள் கூகுள் தேடல் போன்ற பிற கூகுள் சேவைகளில் உங்கள் செயல்பாடு போன்றவை, மின்னஞ்சலில் நீங்கள் காணும் விளம்பர வகைகளை பாதிக்கலாம். நீங்கள் எந்த விளம்பரங்களை நிராகரித்தீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும், அதே விளம்பரங்களைக் காண்பிப்பதைத் தவிர்க்கவும், நீங்கள் விரும்பும் விளம்பரங்களைக் காண்பிக்கவும், நீங்கள் எந்த விளம்பரங்களைக் கிளிக் செய்தீர்கள் அல்லது நிராகரித்தீர்கள் என்பது போன்ற உங்கள் கடந்தகால விளம்பர தரவுகளை நாங்கள் சேமிக்கிறோம்.

  உங்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்க கூகுள் உங்கள் இன்பாக்ஸில் முக்கிய வார்த்தைகளையோ செய்திகளையோ பயன்படுத்துவதில்லை - உங்களுக்கு விளம்பரங்களைக் காண்பிப்பதற்காக யாரும் உங்கள் மின்னஞ்சலைப் படிக்க மாட்டார்கள். மேலும், உங்களிடம் வேலை அல்லது பள்ளி கணக்கு இருந்தால், ஜிமெயிலில் உங்களுக்கு ஒருபோதும் விளம்பரங்கள் காட்டப்படாது. உங்கள் விளம்பர அமைப்புகளை எப்போது வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்யலாம்.

  Maps-ல் இருப்பிடத் தகவல் பற்றிய விவரம் உங்களுக்கு ஏன் தேவை?

  நீங்கள் A முதல் B வரை செல்ல விரும்பினால், உங்கள் முகவரி அல்லது இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதை விட, நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை உங்கள் தொலைபேசி எங்களிடம் விரைவாகத் தெரிவிக்கும். போக்குவரத்து எவ்வளவு பிஸியாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க உதவுவது, உள்ளிட்ட, இருப்பிடத் தகவல் பல வழிகளிலும் உதவி செய்கின்றது. நீங்கள் லொகேஷன் ஷேரிங்கை இயக்க தேர்வுசெய்தால், உங்கள் தொலைபேசி அத்தகவல்களை Google க்கு திருப்பி அனுப்பும். போக்குவரத்து பேட்டர்ன்களை நீங்கள் அறிந்துகொள்ள, உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து  பெறப்படும் தரவுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

  இருப்பிட வரலாற்றை இயக்கும் நபர்களுக்கு மட்டுமே இது நிகழும். மற்றபடி, இது இயல்பாகவே முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதை இயக்கினால், ஆனால் உங்கள் எண்ணத்தை மாற்றினால், Maps இல் உங்கள் தரவைப் பார்வையிடலாம் – Data in Maps உங்கள் இருப்பிட அமைப்புகளை ஒரே இடத்தில் நிர்வகிக்க உதவுகிறது.

  கூகுள் என்னைப் பற்றி என்ன தகவல் அறிந்துள்ளது? அதை எவ்வாறு நான் கட்டுப்படுத்த முடியும்?

  நீங்கள் பயன்படுத்தும் Google சேவைகள் மற்றும் உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்ட தரவின் சுருக்கத்தை உங்கள் Google டாஷ்போர்டில் பார்க்கலாம். ஆக்டிவிட்டி கண்ட்ரோல்கள் மற்றும் விளம்பர (Ad) செட்டிங்க்ஸ் போன்ற சக்திவாய்ந்த தனியுரிமைக் கட்டுப்பாடுகளும் இதில் உள்ளன. கூகுள் உங்களுக்கு எந்த வகையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதைத் தீர்மானிக்க, தரவின் சேகரிப்பு மற்றும் பயன்பாட்டை ஆன் அல்லது ஆஃப் செய்ய அனுமதிக்கிறது.

  நீங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் Google சேவைகளுக்குள் உங்கள் தரவைப் பற்றிய முடிவுகளை நேரடியாக எடுப்பதை நாங்கள் எளிதாக்கியுள்ளோம். எடுத்துக்காட்டாக, உங்கள் கூகுள் தேடலை விட்டு வெளியேறாமல், உங்கள் சமீபத்திய தேடல் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்து நீக்கலாம். உங்கள் Google கணக்கிலிருந்து, தொடர்புடைய தனியுரிமைக் கட்டுப்பாடுகளுக்கு விரைவான அணுகலைப் பெறலாம் மற்றும் உங்கள் தேடல், டேட்டாவுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி மேலும் அறியலாம். தேடல், வரைபடங்கள் மற்றும் அசிஸ்டென்ட்டில் இந்த கட்டுப்பாடுகளை விரைவாக அணுகலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தனியுரிமை அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் எப்போதும் எங்கள் சேவைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் இன்னும் எளிதாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஆனால் இணையதளம் என்பது தொடர்ந்து வளர்ந்து வரும் இடம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அங்கு புதிய அச்சுறுத்தல்கள் மற்றும் மோசமான புதுப்பிப்புகள் துரதிர்ஷ்டவசமாக வெளிப்படும். எப்போதும் அதிகமாகவேலை செய்ய வேண்டியிருக்கும், மேலும் ஒவ்வொரு நாளும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் நபர்களைப் பாதுகாப்பது எங்கள் முக்கிய குறிக்கோளாக இருக்கும். உங்களையும் உங்கள் தகவலையும், உங்கள் தனியிரிமையும், நாங்கள் எவ்வாறு பத்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, Google பாதுகாப்பு மையத்தைப் பார்வையிடவும்.

  Published by:Arun
  First published:

  Tags: Google