இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கோவிட் தொற்று பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இந்நிலையில், அடுத்ததாக மூன்றாவது அலை பரவத் தொடங்குகிறதா என்ற கேள்விக்கு இது வரை சரியான விடை இல்லை. ஆனால், தற்போது, கோவிட்-19 வைரஸ் தொற்றுடன், ஒமைக்ரான் வேரியன்ட்டும் சேர்ந்து அதி வேகமாக பரவி வருகிறது. இதனால், இந்தியாவில் கோவிட் தொற்று தற்போது சமூகப்பரவல் என்ற நிலையை எட்டியுள்ளது. இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம், இதனை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை – சமூகப்பரவல்
வெளிப்படையாக கொரோனா வைரஸ் பாதிப்பு சமூகப்பரவலாக மாறியுள்ளது என்பதை முதல் முறையாக இந்தியா வெளிப்படையாக கூறியுள்ளது. அது மட்டுமின்றி, தொற்று பரவும் வேகமே அதைத் தெரிவிக்கின்றது. பெருந்தொற்று தொடங்கிய இடம் தவிர்த்து, மற்ற இடங்களில் பயணிகளால் தான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தைத் தவிர்த்து, மற்ற பரவல்கள் எல்லாமே, நேரடியாகவோ அல்லது ஒரு சங்கிலி இணைப்பு போலவோ இந்தப் பயணிகள் வழியாகப் பரவத் தொடங்கியது. ஆனால், அடுத்தடுத்து, இந்த பரவல் பயணிகள் தவிர்த்து பொது மக்களை தாக்கத் தொடங்கியது. இதில், பலருக்கும் எந்த அறிகுறிகளும் தோன்றவில்லை அல்லது இவர்கள் யாருமே சோதனை மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த இரண்டு தரப்பினருமே, தங்களுக்கு கோவிட் பாதிப்பு இருப்பது தெரியாமலேயே நோய் பரப்பும் கருவியாக மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படக் காரணமாக இருந்துள்ளனர். எனவே, இது நோய்த்தொற்றுச் சங்கிலியை ஆரம்ப கட்டத்தில் பாதிக்கபப்ட்ட பயணிகளிடம் கண்டறிய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. தொற்றுநோயின் இந்த நிலைதான் சமூக பரவல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read : நேரடி தொடர்பு இல்லாதவர்க்கும் கோவிட் தொற்று வருவதற்கான 5 சாத்தியமான காரணங்கள்
எளிமையான சொற்களில் கூற வேண்டுமென்றால், நோய்த்தொற்றின் சங்கிலியை, யாருக்கு எங்கிருந்து பரவுகிறது, எங்கிருந்து தொடங்கியது என்பதை தீர்மானிக்க முடியாமல் இருக்கும் கட்டமே சமூகப்பரவல் ஆகும்.
சமூகப்பரவல் என்பது தொற்றுநோயின் இறுதிக் கட்டம்
உலக சுகாதார அமைப்பு, தொற்று நோய் பரவலை பல வகைகளில் கணித்துள்ளது. அதன் அடிப்படையில், ஆக்டிவான தொற்று பரவல், அவ்வபோது பரவும் தொற்று மற்றும் கூட்டம் கூட்டமாக பரவும் தொற்று என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு பிராந்தியத்தில் அல்லது நாட்டில் 28 நாட்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று எந்த புதிய நோயாளியும் கண்டறியப்படவில்லை என்றால், ஆக்டிவ் தொற்று பரவல் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் கண்டறியப்பட்ட நோய்த்தொற்று, வெளிநாட்டு பயணிகளுடன் இணைக்கப்பட்டால், அது இரண்டாவது வகை தொற்றுப்பரவல் ஆகும்.
Also Read : 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிகளவில் கொரோனாவால் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்!
தற்போது, இந்தியாவில் கூட்டம் கூட்டமாக பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘வெளிநாட்டுப் பயணிகளுடன் தொடர்பு படுத்த முடியாத நிலையில் அதிக நபர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை’ மூன்றாவது நிலை என்று குறிக்கிறது.
சமூகப்பரவலைக் குறைப்பது எப்படி
நாட்டில் ஓமிக்ரான் வேரியன்ட் தொற்று பரவி வரும் வேகத்தில் இருந்து, சமூகப் பரவல் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஓமிக்ரானுக்கு முன்பே, இந்தியா சுமார் 30 வகையான நோய்த்தொற்றுகளில் ஒரே ஒரு வகையை மட்டுமே கண்டறிந்துள்ளது. தொற்றுநோயின் இந்த கட்டத்தில், சமூக பரவல் பற்றிய விவாதம் கல்வி சார்ந்ததாகவே இருக்கிறது, மற்றபடி, மத்திய, மாநில அல்லது உள்ளூர் அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
தற்போதைய சமூகப்பரவல் பெரும்பாலும் தீவிரமான நோயை உருவாக்காமல் மிதமாகவே காணப்படுகிறது. எனவே, பரவலை ஏதேனும் ஒரு உத்தி வைத்துக் கட்டுப்படுத்தலாம் என்பது பலனை அளிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
விமானப் பயணிகளை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல், நம்முடைய உத்தியை சாம்பிள் சேகரிப்பில் செலுத்த வேண்டும். ICU அல்லது தீவிர அறிகுறிகள் உள்ளவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அது மட்டுமின்றி, மக்கள் கூட்டம் கூட்டமாக சேரும் இடங்களில் தொற்று பரவல் திடீரென்று அதிகரிக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும். அதைப் போன்ற இடங்களில் ரேண்டமாக சாம்பிள் எடுத்து பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவித்தார் செல்லுலார் & மாலிகுலார் பயாலஜி சென்ட்டரின் முன்னாள் நிர்வாக இயக்குனரான ராக்கேஷ் மிஸ்ரா.
Also Read : ஓமைக்ரான் கடைசி கோவிட் வேரியண்ட் இல்லை - WHO நிபுணர் கருத்து..
மகாராஷ்டிரா மாநில கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினரான டாக்டர் ஷஷாங்க் ஜோஷி, ‘உயிர்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் பெரிய எண்ணிக்கையிலான கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்கே சவாலாக அமையும். எனவே, தற்போதைய பரவலில் இருந்து அறியப்படுவது என்னவென்றால், அது கூடுதலாக பரவலாம். ஆனாலும், 80-90% நபர்களுக்கு தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்பதால் அறிகுறிகள் உள்ள நோயாளிகள் மீது எங்கள் கவனம் உள்ளது. புற்றுநோய் , இதய மாற்று அறுவை சிகிச்சை அல்லது நுரையீரல் நோய் போன்ற நாள்பட்ட அடிப்படை நோய்கள் உள்ளவர்களுக்கும் கூடுதல் கவனம் தேவை’ என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.